தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்த வாரம் 2023 ஜூன் 23ஆம் தேதி தமிழ் சினிமாவில் ஏழு படங்கள் ரிலீஸாகிறது.
இத்துடன் கமல் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது.
இந்த படங்கள் பற்றிய ஒரு முன்னோட்டம் இதோ..்
1)
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’.
இதில் வாணிபோஜன், தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் அத்வைத் தயாரித்து இயக்கியுள்ளார்.
2) அறிமுக இயக்குநர் ராம் சங்கய்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தண்டட்டி’.
இதில் பசுபதி, ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிக்க சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.
தென் மாவட்டங்களில் வயதான பெண்மணிகள் அணிந்திருக்கும் தண்டட்டியை பின்னணியாக வைத்து இப்படம் உருவானது.
‘சிங்கம் 2, சர்தார், ரன் பேபி ரன் படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
3) சுனைனா நடிப்பில் உருவான படம் ‘ரெஜினா’.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படத்தை ‘பைப்பின் சுவத்திலே பிராணாயம்’ மற்றும் பிரித்விராஜ், ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் வெளியான ‘ஸ்டார்’ ஆகிய மலையாள படங்களை இயக்கிய டொமின் டி சில்வா இயக்கியுள்ளார்.
4) சீனு ராமசாமியின் துணை இயக்குநரும் தம்பியுமான ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் உருவான படம் ‘அழகிய கண்ணே’.
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இதில் சஞ்சிதா ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார்.
விஜய் சேதுபதி ஒரு கேமியோ ரோலில் நடித்துள்ளார்.
5) இயக்குனராக அடையாளம் காணப்பட்ட சுந்தர் சி முதன்முறையாக ஹீரோவாக நடித்த படம் ‘தலைநகரம்’.
இந்த படத்தில் ரைட் என்ற கேரக்டர் நடித்திருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார் சுந்தர் சி.
ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை துரை என்பவர் இயக்கி இருக்கிறார். இவர் முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி ஆகிய படங்களை இயக்கியவர்.
6) தருண் தேஜா இயக்கத்தில் வசந்த் ரவி முக்கிய வேடத்தில் நடித்த படம் ‘அஸ்வின்ஸ்’.
இந்த படத்தில் விமலா ராமன், சிம்ரன் பரீக், முரளிதரன், சரஸ்வதி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா நிறுவனம் தயாரித்துள்ளது.
7) ஆதர்ஷ் மதிகாந்தம் என்பவர் தயாரித்து இயக்கிய படம் ‘நாயாடி’.
கேரளாவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனமான நாயாடிகளின் (வேட்டைக்காரர்கள் என்று பொருள்) கதையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
இதில் நாயகியாக காதம்பரி நடிக்க அருண் என்பவர் இசையமைத்துள்ளார்.
கடந்த கடந்த வாரமே இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென தள்ளிப்போனது. தற்போது இந்த வாரம் ஜூன் 23 ரிலீஸ் ஆகிறது.
கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான படம் ‘வேட்டையாடு விளையாடு.’
இத்திரைப்படம் வசூலைக் குவித்து வெற்றி பெற்றது. கமலுடன் இந்தப் படத்தில் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது இந்த படம் டிஜிட்டல் செய்யப்பட்டு ரீ ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
June 23 on Theater release 8 movies list here