ரஜினியை நடிக்க வைக்க ராஜமௌலியின் ராஜதந்திரம்

ரஜினியை நடிக்க வைக்க ராஜமௌலியின் ராஜதந்திரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Rajamouliபாகுபலி2 படத்தை தொடர்ந்து இந்தியாவின் மாபெரும் இதிகாசமான மகாபாரதம் கதையை ராஜமௌலி இயக்கவுள்ளதாக வந்த செய்தியை முன்பே பார்த்தோம்.

இந்த படத்தில் இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களை நடிக்க வைக்கவிருக்கிறாராம்.

பாலிவுட்டில் இருந்து அமீர்கான், மல்லுவுட்டில் இருந்து மோகன்லாலை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.

மேலும் தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிக்க வைக்க இயக்குனர் ராஜதந்திரம் செய்துவருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அப்படியானால், இப்படத்தின் பட்ஜெட் ரூ. 500 கோடியை தொடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

SS Rajamouli plans to commit Rajinikanth for his Mega project

பைரவா படக்குழுவை மகிழ்வித்த இளையதளபதி

பைரவா படக்குழுவை மகிழ்வித்த இளையதளபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

C39UkkIWMAA95Fhபரதன் இயக்கி விஜய் நடித்த பைரவா படம் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் ஓர் இடத்தில் கூடினர்.

அப்போது கீர்த்தி சுரேஷ், டேனியல் பாலாஜி, இயக்குனர் பரதன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தன்னுடைய கையால் தங்கசெயின்களை பரிசாக அளித்துள்ளார் விஜய்.

இளையதளபதியின் இந்த நடவடிக்கையால் தங்கள் இதயம் மகிழ்ந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

 

C39Uk6bXAAE1OrM

C39UmsDWMAAxyn3

 

பிரபுதேவாவுடன் இணையும் பிரபல மலையாள நடிகை

பிரபுதேவாவுடன் இணையும் பிரபல மலையாள நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yanga mungபிரபுதேவா தயாரித்து நடித்த தேவி படம் மாபெரும் வெற்றிப்பெற்றது.

இதனையடுத்து விரைவில் மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு எங் மங் சங் என்று பெயரிட்டு இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தை எம்.எஸ். அர்ஜின் இயக்க, வாசன் விஷ்வல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஒளிப்பதிவை குருதேவ் கவனிக்க, அம்ரீஷ் இசையைமைக்கிறார்.

இதில் நாயகியாக லட்சுமிமேனன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘மக்கள் ஆட்டு மந்தை அல்ல…’ சசிகலாவை எதிர்க்கும் கமல்

‘மக்கள் ஆட்டு மந்தை அல்ல…’ சசிகலாவை எதிர்க்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasanதமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கும் இடையே மோதல் முற்றியுள்ளது.

இந்நிலையில் முதல்வருக்கு கமல் பகிரங்கமாக தனது ஆதரவை அளித்துள்ளார்.

இந்தியளவில் பிரபலமான ஓர் ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது…

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா குறித்து எனக்கு எந்த பாரபட்சமும் கிடையாது.

சசிகலாவின் திறமை குறித்து எதுவும் தெரியவில்லை. மறைந்த முதல்வருடன் அவர் இருந்துள்ளார். அதுவே அரசியலுக்கான தகுதியாகுமா ?

எனவே ஜல்லிக்கட்டு மற்றும் மற்ற விவகாரங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்ட முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை ஆதரிக்கிறேன்.

அவருடன் கைகூட குலுக்கியது இல்லை. அவர் என் நண்பரும் இல்லை.

ஓ.பன்னீர் செல்வம் எந்த பாதிப்பையும் யாருக்கும் ஏற்படுத்தவில்லை. அவர் திறமையாளர். அவரது ஆட்சி தொடர வேண்டும். என்றார்.

மேலும், தாங்கள் ஆட்டு மந்தை இல்லை என்றும், தங்களை மேய்க்க மேய்ப்பர் ஒருவர் தேவையில்லை.

நாட்டை எவ்வாறு ஆள வேண்டும் என்பது தெரியாதவர்கள், அந்த இடத்திற்கு வரக்கூடாது. சசிகலா மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். என்றும் விமர்சித்துள்ளார் கமல்ஹாசன்.

அசோக் பாண்டியனை பாராட்டிய அலெக்ஸ் பாண்டியன்

அசோக் பாண்டியனை பாராட்டிய அலெக்ஸ் பாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ashok pandiyanரஜினியின் ஸ்பீட்டான பேச்சு, நடை, நடனம் ஆகியவைகள் நாம் அறிந்ததே.

அதிலும் அலெக்ஸ் பாண்டியன் கேரக்டரில் ரஜினியின் பயர் இன்னும் நமக்கு நினைவிருக்கும்.

இந்த அலெக்ஸ் பாண்டியன் நடிகர் அசோக் பாண்டியனை பாராட்டியிருக்கிறாராம்.

இதுபற்றி அசோக் பாண்டியனே கூறியவை…

சமீபகாலமாக வெளியான சில படங்களில் தும்பை பூவைப்போன்ற நரைத்த தலையுடன், ஆனால் கம்பீரமான தோற்றத்துடன் கூடிய ஒருவரை டாக்டராக, போலீஸ் அதிகாரியாக, தொழிலதிபராக, கதாநாயகியின் தந்தையாக என பல பரிமாணங்களில் பார்த்து இருப்பீர்கள்.. அப்படி ஒருவர் உங்களை கவனம் ஈர்த்து இருந்தால் நிச்சயம் அந்த நபர் அசோக் பாண்டியனாகத்தான் இருப்பார்.

இன்று குணச்சித்திர துணை காதாபாத்திரத்திற்கான தேடலில் உள்ள பல இயக்குனர்களும் தங்களது படத்திற்கான நடிகர்கள் பட்டியலில் இவரது பெயரை ஆரம்பத்திலேயே டிக் பண்ணி வைத்து விடுகின்றனர்.

அந்த அளவுக்கு அசோக் பாண்டியன் குறுகிய கால அளவில் திரையுலகில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

சினிமா ஆசை யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதிலும் வரலாம்.. அதனால் மதுரையை சேர்ந்த அசோக் பாண்டியனுக்கு 2012ல், தான் மிலிட்டரியில் இருந்து ஓய்வுபெற்றபோது தோன்றியதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

2000ல் கார்கில் போரில் பங்குபெற்று, அதன்பின்னர் ஓய்வுபெற்று ஊர் திரும்பிய அசோக் பாண்டியன் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் பத்து வருடங்களுக்கு மேலாக உடற்கல்வி ஆசிரியாக பணியாற்றி வந்துள்ளார்..

2012ல் முதன்முதலில் இவருக்குள் இருந்த நடிகனை கண்டுபிடித்து தான் இயக்கிய ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்கை’ படம் மூலமாக அவருக்கு வாய்ப்பளித்தது இயக்குனர் சேரன் தான். அந்த வாய்ப்பு கிடைத்தே சுவாரஸ்யம் தான் என்கிறார் அசோக் பாண்டியன்..

காரணம் தனது நண்பர்களான விஷ்வந்த் மற்றும் ‘பசங்க’ சிவக்குமார் ஆகியோர் சேரன் அலுவலகத்திற்கு வாய்ப்பு கேட்டு சென்றபோது அவர்களுடன் பேச்சுத்துணைக்காக சென்றவர்தான் அசோக் பாண்டியன்.

ஆனால் வாய்ப்பு கிடைத்தது என்னவோ சும்மா டைம்பாசுக்காக அவர்களுடன் சென்ற இவருக்குத்தான்.. அப்படித்தான் எதிர்பாராமல் தொடங்கியது இவரது சினிமா பயணம்..

அதன்பின் இந்த நான்கு வருடங்களில் கொடி, மாவீரன் கிட்டு, ரஜினி முருகன், பொறம்போக்கு, கத்தி, சிங்கம்-2, பூஜை, நான் தான் பாலா உள்ளிட்ட 52 படங்களில் நடித்திருக்கிறார் என்றால் நிச்சயம் அது சாதனை தான். தவிர தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்துவிட்டார்.

அதில் ஒன்று சமீபத்தில் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் ரீ என்ட்ரி ஆக வெளியான ‘கைதி நம்பர் 150’. இதுதவிர 25க்கும் குறையாத விளம்பரப்படங்களிலும் நடித்துள்ளார் அசோக் பாண்டியன்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டாருடன் ‘2.O’, கடம்பன், காதல் காலம், காஞ்சாரன் ஆகிய படங்களில் நடித்துவருகிறார் அசோக் பாண்டியந. ஷங்கர் டைரக்சனில் ‘2.O’ படத்தில் நான்கு நாட்கள் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பொன்னான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது தான் ஹைலைட்..

முதல்நாள் காலையிலேயே ரஜினிக்கும் இவருக்கும் தான் முதல் ஷாட்டே. தலைவருடன் நடிக்கப்போகிறோம் என்கிற பதட்டம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் நடித்த அசோக் பாண்டியன் வசனத்தில் மட்டும் கொஞ்சம் ஸ்பீட் கூட்டிவிட்டாராம்.

அந்த ஷாட் முடிந்ததும் அருகில் வந்த ஷங்கர், “எல்லாம் ஒகே சார்.. டயலாக் ஸ்பீட் மட்டும் கொஞ்சம் குறைச்சுக்குங்க என சொல்ல, அருகில் இருந்த ரஜினி சிரித்துக்கொண்டே ‘நம்ம பக்கத்துல இருந்தாலே ஸ்பீட் வந்துருதுல்ல” என ஜாலியாக கூறி அசோக் பாண்டியனை உற்சாகப்படுத்தினாராம்..

அடுத்த ஷாட்டில் காட்சி ஓகே ஆக, “ரெண்டாவது டேக்கிலேயே ஷங்கர் கிட்ட ஒகே வாங்குன ஆளு நீங்களாத்தான் இருக்கும்” என பாராட்டவும் செய்தாராம் ரஜினி.

தற்போது நடித்துள்ள ‘காதல் காலம்’ படத்தில், கதையின் திருப்பத்திற்கு காரணமான முக்கியமான கதாநாயகனின் தந்தை கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.

இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை நான்கு நாட்கள் படமாக்கினார்களாம்.

அந்த நான்கு நாட்களும் தயாரிப்பாளர் ஸ்பாட்டிலேயே இருந்து இவர் நாயகியின் அப்பாவாக நடித்த காட்சிகளை பார்த்து ரசித்தாராம்.

அசோக் பாண்டியனின் அடுத்த இலக்கு பிரதான வில்லன் வேடத்தில் நடித்து ஒரு கலக்கு கலக்குவது தானாம். அதற்கான வாய்ப்பும் சூழலும் விரைவிலேயே கிடைப்பதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன என்று கூறும் அசோக் பாண்டியனை அப்படிப்பட்ட சில கதைகளில் நடிக்க கேட்டுள்ளார்களாம்..

விரைவில் தன்னை முழுமையாக வெளிப்படுத்தும் கேரக்டரில் எதிர்பார்க்கலாம் என்கிறார் அசோக் பாண்டியன் நம்பிக்கையாக.

Rajinikanth appreciates Ashok Pandiyan at 2pointO shooting

actor ashok pandiyan

 

‘யாரையும் நம்பி குழந்தையை அனுப்பாதீங்க…’ ஜிவி. பிரகாஷ் எச்சரிக்கை

‘யாரையும் நம்பி குழந்தையை அனுப்பாதீங்க…’ ஜிவி. பிரகாஷ் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hashiniசிலதினங்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி காணாமல் போனார்.

இதனையடுத்து, அவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

அச்சிறுமியை தஷ்வந்த் என்ற 22 வயது காம கொடூரன் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்துள்ளதையும் கண்டுபிடித்த போலீசார் கொலையாளியை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி. பிரகாஷ் தன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது…

உங்கள் குழந்தைகளை யாருடன் அனுப்பினாலும் எச்சரிக்கையாக இருங்கள். யாரையும் நம்பாதீர்கள்.” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

GV Prakash Warn Parents to get aware of molestation

G.V.Prakash Kumar ‏@gvprakash
To the parents .Pls be careful about who ur sending ur kid with .Don’t trust anyone .Keep a strong eye .Child molestation is increasing here

More Articles
Follows