தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த படம் ‘விக்ரம்’.
முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.
இந்த படம் ஜூன் 3-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கமல் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.
முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல் நாள் இந்தியளவில் மட்டும் ரூ.32 கோடியையும் உலகளவில் ரூ.49 கோடியை வசூலித்தது.
இப்படம் உலக அளவில் ரூ.350 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 16 நாட்களை கடந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் படம் 150 கோடியை விக்ரம் படம் வசூலித்துள்ளதாம்.
இதன் மூலம் ‘பாகுபலி 2’ படத்தின் மொத்த வசூலை தமிழகளவில் ‘விக்ரம்’ முறியடித்துள்ளது.
‘Vikram’ breaks ‘Baahubali 2’ record