40வது பிறந்தநாளில் வருங்கால மனைவி பெயரை அறிவிக்கிறார் பிரபாஸ்

40வது பிறந்தநாளில் வருங்கால மனைவி பெயரை அறிவிக்கிறார் பிரபாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baahubali hero Prabhas to reveal marriage plans on his 40th birthdayபாகுபலி படத்திற்கு முன்பே கிட்டதட்ட 15க்கும் மேற்பட்ட படங்களில் பிரபாஸ் நடித்திருந்தாலும், பாகுபலி படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு உலகம் அறிந்த நடிகராகிவிட்டார்.

தற்போது 3 மொழிகளில் தயாராகிவரும் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தனது 40வது பிறந்தநாளை அடுத்த மாதம் அக்டோபர் 23-ந் தேதி கொண்டாடுகிறார் பிரபாஸ்.

அன்றைய தினத்தில் அவர், தனது வருங்கால மனைவி குறித்த தகவலையும் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
வருங்கால மனைவி அனுஷ்காவா இல்லை வேறு பெண்ணா என்பதை அன்றைய தினத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

எனவே கொஞ்ச நாள் பொறுத்திருந்து பார்ப்போம்.

Baahubali hero Prabhas to reveal marriage plans on his 40th birthday

செக்கச் சிவந்த வானம்: கொரியன் படமா? பொன்னியின் செல்வன் கதையா?

செக்கச் சிவந்த வானம்: கொரியன் படமா? பொன்னியின் செல்வன் கதையா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Is Chekka Chivantha Vaanam movie is copy of Korean movieமணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, அருண்விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்த படம் செக்கச் சிவந்த வானம்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இருந்தபோதிலும் இது 2013ம் ஆண்டு வெளியான ‘நியூ வேர்ல்டு’ என்ற படத்தின் தழுவல் என சமூக வலைத்தளங்களில் பேசி வருகின்றனர்.

அதில் பல்வேறு குற்றங்களைச் செய்யும் கோல்டுமூன் என்ற கிரைம் நிறுவனத்தின் தலைவர் கொல்லப்பட அவருடைய இடத்தைப் பிடிக்க அந்த நிறுவனத்தில் 2வது இடத்தில் இருப்பவருக்கும், வேறு இருவருக்கும் போட்டி நடக்குமாம்.

அதே சமயம் அந்த நிறுவனத்தை அழிப்பதற்காக எட்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒரு போலீஸ் அதிகாரி அந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, அந்த நிறுவனத்தின் இரண்டாவது இடத்தில் இருப்பவருக்கு வலது கையாக இருப்பார்.

போலீஸ் திட்டத்தின்படி அந்த நிறுவனம் அழிக்கப்பட்டதா, அதன் தலைமைப் பதவியைப் பிடிப்பவர்களுக்கு இடையேயான போட்டி என்ன ஆனது என்பது தான் ‘நியூ வேர்ல்டு’ படத்தின் கதை என்கிறார்கள்.

இந்தக் கதையை தான் தமிழுக்கு ஏற்றபடி மணிரத்னம் மாற்றி கொடுத்துள்ளதாக சிலர் விமர்சித்து வருகிறார்கள்.
மேலும் சிலர் கல்கி எழுதிய சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ என்ற கதையை தழுவிதான் இப்படத்தை எடுத்துள்ளார் எனவும் சிலர் கூறி வருகின்றனர்.

குடும்ப மூத்தவர் இறந்த பின் அந்தக் குடும்பத்தின் தலைமை யார் என்பது குறித்து மகன்களுக்குள் எழும் போட்டிதான் பொன்னியின் செல்வன் கதை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

Is Chekka Chivantha Vaanam movie is copy of Korean movie

கபாலி-யில் கலக்கிய பைட் மாஸ்டர்கள் அன்பறிவ் நீக்கம் செல்லாது என கோர்ட் ஆர்டர்

கபாலி-யில் கலக்கிய பைட் மாஸ்டர்கள் அன்பறிவ் நீக்கம் செல்லாது என கோர்ட் ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Court Order in action brothers Anbarivu Association issueரஜினியின் கபாலி, காலா மற்றும் விக்ரமின் இருமுகன் ஆகிய படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணி புரிந்தவர்கள் அன்புமணி மற்றும் அறிவுமணி.

இவர்கள் இரட்டை சகோதரர்கள் என்பதால் அன்பறிவ் என்றே அழைக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும் தென்னிந்திய சினிமா மற்றும் சின்னத்திரை சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்திலிருந்து கடந்த 16-ந்தேதி நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் சங்கத்தலைவர் சோம சுந்தர் மற்றும் செயலாளர் வி.மணிகண்டன் ஆகியோர் சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் பணிபுரியும் படப்படிப்பு தளத்திற்கு சென்று படப்படிப்பையும் தடுத்து நிறுத்தினார்கள்.

இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் அன்பறிவ்.

எனவே வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி ஆதிகேசவலு, அன்பறிவ் மீதான நடவடிக்கையை கட்டுப்படுத்த இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அன்பறிவ் பணிபரியும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவர்களின் பணிக்கு குறுக்கீடு செய்ய கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Court Order in action brothers Anbarivu Association issue

சபரிமலையில் எல்லா பெண்களுக்கும் அனுமதி; கமல்-குஷ்பூ வரவேற்பு

சபரிமலையில் எல்லா பெண்களுக்கும் அனுமதி; கமல்-குஷ்பூ வரவேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal Haasan and Khushboo welcome the SC verdict on Sabarimala temple caseகேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கம் காலம் காலமாக ஐயப்பன் கோயில் நிர்வாகத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

எனவே கோயிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதிப்பது பாகுபாடு ஆகாதா? அரசியலமைப்பு சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகாதா? என்பது உள்ளிட்ட 5 கேள்விகளை உச்சநீதிமன்றம் கேட்டது.

இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி ஆணும், பெண்ணும் சமம். வழிபாட்டிலும் இது தொடர வேண்டும். சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம், அதைத் தடுப்பது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்தார்.

அனைத்துப் பெண்களும் வழிபடலாம் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கான்வில்கர், ஆர்.எப் நாரிமன் மற்றும் சந்திரசூட் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

நீதிபதி இந்து மஹ்லோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை எழுதியுள்ளார்.

ஆனாலும் இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது நல்ல தீர்ப்பு என நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை குஷ்பூ ஆகியோர் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

Kamal Haasan and Khushboo welcome the SC verdict on Sabarimala temple case

all age women in sabarimala

சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் கேத்தரீன் தெரசா

சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் மற்றும் கேத்தரீன் தெரசா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu megha akash catherine tresa‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார் சுந்தர் சி.

தெலுங்கில் பவண் கல்யாண், சமந்தா, ப்ரனிதா சுபாஷ் நடித்திருந்தனர்.

தமிழில் சிம்பு நாயகனாக நடிக்க, லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

கடந்த வாரம் முதல் ஜார்ஜியா நாட்டில் இதை படமாக்கி வருகிறார்.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

தற்போது மற்றொரு நாயகியாக கேத்தரீன் தெரசா ஒப்பந்தமாகியுள்ளார்.

சமந்தா கேரக்டரில் மேகா ஆகாஷும், பிரணிதாவின் கேரக்டரில் கேத்தரீன் தெரசாவும் நடிக்கின்றனர்.

சிம்புவின் மாமியராக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார் என்பதை முன்பே பார்த்தோம்.

கருணாநிதி வாழ்க்கை படத்தில் கலைஞராக பிரகாஷ்ராஜ் நடிப்பாரா?

கருணாநிதி வாழ்க்கை படத்தில் கலைஞராக பிரகாஷ்ராஜ் நடிப்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

iruvar prakash rajதமிழகத்தை 5 முறை முதல்வராக ஆட்சி செய்த கலைஞர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி மரணமடைந்தார்.

தற்போது அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சியில் பிரபல தயாரிப்பாளர்கள் சிலர் முன் வந்துள்ளனர்.

ஏற்கெனவே நடிகர் பிரகாஷ்ராஜ் ‘கருணாநிதி வேடத்தில் நடிக்க ஆசை’ என்று தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

எனவே அவரை ஒப்பந்தம் செய்ய சிலர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் கருணாநிதியாக நடித்தவர் பிரகாஷ்ராஜ். அதற்காக அவர் விருதும் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Will Prakash Raj accept to act in Kalaignar Karunanidhi biopic

More Articles
Follows