பிரபல பின்னணி பாடகர் மதுபாலகிருஷ்ணன் தமிழில் பாடும் முதல் ஆல்பம் பாடல்

பிரபல பின்னணி பாடகர் மதுபாலகிருஷ்ணன் தமிழில் பாடும் முதல் ஆல்பம் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singer madhu balakrishnanரஜினி, அஜித், பிரஷாந்த்* போன்ற முன்னணி நடிகர்களுக்காக பாடிய பிரபல இந்திய பின்னணி பாடகர் மதுபாலகிருஷ்ணனை யாராலும் மறக்க முடியாது.

தனக்கென்றும் தனது குரலுக்கும் உலகளவில் பெரும் ரசிகர்களை கொண்டுள்ளவர் என்பது தான் உண்மை. இவர் இப்போது தமிழில் முதல் முதலில் ஆல்பம்காக *என்ன நடந்தது, என்ன நடந்தது* என்று தொடங்கும் இனிமையான பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

இந்த ஆல்பம் பாடலில் நடிக்க இருக்கும் முன்னணி நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றது அக்குழுவினர்.

இவர் சமீபத்தில் *உலகளவில் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி2ம்* பாகத்தின் மலையாளம் படத்தில் ஒரு புகழ்பெற்ற *ஆர்க்கும் தொல்காதே* பாடலையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

singer madhu balakrishnans new tamil album details

அரசியலுக்கு வருகிறாரா மறைந்த வசந்தகுமார் மகன் நடிகர் விஜய்..?

அரசியலுக்கு வருகிறாரா மறைந்த வசந்தகுமார் மகன் நடிகர் விஜய்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vasanthakumar with his son vijay vasanthகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் தொழிலதிபர் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார்.

இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார்.

அவருடைய உடல் சொந்த ஊரில் ஆகஸ்ட் 30-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.

வசந்தகுமார் மறைவால் கன்னியாகுமாரி நாடாளுமன்றத் தொகுதி காலியாகியுள்ளது.

மறைந்த வசந்தகுமாரின் 7-ம் நாளை அனுசரிக்கும் வகையில் கன்னியாகுமரியில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

இதில் அவரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் கலந்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது…

கட்சியில் அப்பாவுக்குக் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாகச் செய்தார்.

அவரது மறைவால் கட்சி என்ன முடிவெடுக்கிறதோ, அதன்படிதான் செயல்படுவோம்.

அரசியல் களத்தில் இறங்குவது குறித்து முடிவு எடுக்கவில்லை. குடும்பத்துடன் ஆலோசிக்க வேண்டும்.” என கூறினார் விஜய் வசந்த்.

‘சென்னை 28’, ‘நாடோடிகள்’, ‘என்னமோ நடக்குது’, ‘சென்னை 28 பார்ட் 2’, ‘அச்சமின்றி’, ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் விஜய் வசந்த்.

வெப் சீரிஸ் தயாரிப்பாளராகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்..?

வெப் சீரிஸ் தயாரிப்பாளராகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy sureshஇளம் வயதிலேயே தேசிய விருதை வென்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் தற்போது தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக் காயிதம்’ ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரி பாட்டா’ மற்றும் ‘மிஸ் இந்தியா’, ‘ரங் தே’ ஆகிய படங்களில் நடிக்கிறார்.

இந்த நிலையில் இவர் ஒரு வெப் சீரிசை தயாரித்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இது வெறும் வதந்தி என தெரிய வந்துள்ளது.

கீர்த்தியின் அப்பா சுரேஷே ஒரு பிரபல தயாரிப்பாளர் தான்.

ஆனால் கீர்த்தியின் கவனம் முழுவதும் தற்போது நடிப்பில் இருப்பதால் தயாரிப்பில் கவனம் செலுத்த விரும்பவில்லையாம்.

வெடிப்பது செய்தியாகவும் நிவாரணம் உதவியாகவும் கடக்கிறது..; கடலூர் வெடி விபத்தில் 9 பேர் மரணம் குறித்து கமல் கருத்து

வெடிப்பது செய்தியாகவும் நிவாரணம் உதவியாகவும் கடக்கிறது..; கடலூர் வெடி விபத்தில் 9 பேர் மரணம் குறித்து கமல் கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamalகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே குருங்குடி என்ற பகுதியில் நாட்டு வெடி தயார் செய்யும் தொழிற்சாலை உள்ளது.

இன்று (செப். 4) காலை குருங்குடி ஐயங்குளம் அருகே உள்ள காந்திமதி என்பவருக்குச் சொந்தமான நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீபாவளிப் பண்டிகையையொட்டி நாட்டு வெடி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, வெடி மருந்தை இடிக்கும்போது திடீரென வெடி மருந்து வெடித்துள்ளத. இதில் தொழிற்சாலை வெடித்துச் சிதறியது.

இந்த வெடி விபத்தில் தொழிற்சாலை உரிமையாளர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடையின் உரிமையாளர் காந்திமதி (58), அதே ஊரைச் சேர்ந்த மலர்க்கொடி (65), லதா (40), சித்ரா (45), ராசாத்தி (48) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்தில் உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த ருக்மணி (38), ரத்னாயாள் (60), தேன்மொழி (35), அனிதா (26) ஆகிய 4 பேரும் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களும் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வெடி விபத்து அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து நடிகரும் மநீம தலைவருமான கமல் தன் கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்…

மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்து.9 உயிர்பலிகள்,குருங்குடி கிராமத்தில்.வருடந்தோறும் வெடிப்பது செய்தியாகவும்,இறப்புகள் இழப்பிற்கான அரசு நிவாரண உதவியாகவும் கடக்கிறது.தொழிலாளர்களின் குடும்பங்கள் கதியற்று நிற்கின்ற அவலம் தீர,அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமே தீர்வு

இவ்வாறு பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.

துணிச்சலாக பாம்பை பிடித்து அடிக்காமல் விட்ட நடிகை கீர்த்தி

துணிச்சலாக பாம்பை பிடித்து அடிக்காமல் விட்ட நடிகை கீர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தியும் நடிகையாக உள்ளார்.

தும்பா என்ற தமிழ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தற்போது ஹெலன் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட இயக்குநர் கோகுல் இயக்கத்தில் இப்படம் உருவாகுகிறது.

அப்பா – மகள் உறவை மையப்படுத்தி இந்த படம் உருவாகுகிறது.

இதில் கீர்த்தி உடன் அவரது தந்தை அருண் பாண்டியனும் நடிக்கிறார்.

கொரோனா ஊரடங்கால் சினிமா சூட்டிங்குகள் நிறுத்தப்பட்டு இருந்தமையால் சொந்த ஊருக்குச் சென்ற கீர்த்தி விவசாய பணிகளை செய்து வருகிறார்.

அந்த வீடியோக்களை அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் தனது வீட்டுக்குள் வந்த பாம்பை தனி ஒரு ஆளாக துணிச்சலாக பிடித்துள்ளார் கீர்த்தி.

அதை கொல்லாமல் (அடிக்காமல்) வெளியே கொண்டு விட்டுள்ளார்.

அதை வீடியோவாக தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் கீர்த்தி.

keerthi pandian

டாப்ஸி-விஜய் சேதுபதி-யோகிபாபுவை இயக்கும் நடிகர் சுந்தரராஜனின் மகன்

டாப்ஸி-விஜய் சேதுபதி-யோகிபாபுவை இயக்கும் நடிகர் சுந்தரராஜனின் மகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

taapsee pannu and vijay sethupathiபிரபல இயக்குநர் மற்றும் நடிகரான சுந்தர்ராஜனின் மகன் தீபக்.

இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தீபக் தற்போது இயக்குனராக அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தில் டாப்ஸி கதையின் நாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் யோகி பாபு மற்றும் ஜெகபதிபாபு நடிக்கின்றனர்.

ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இதன் சூட்டிங் ஓரிரு தினங்களாக ஜெய்ப்பூரில் தொடங்கி நடைபெறுகிறது.

ஜெயம் ரவியுடன் ஜனகனமன படத்திலும் டாப்சி நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

More Articles
Follows