தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாகுபலி 2 படத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படங்களை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இவர் தற்போது ஜுனியர் என்டிஆர், ராம் சரண் நடிக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ஆனால் படத்தின் ஒரு ஹீரோயின் யார் என்பதை படக்குழுவினர் முடிவு செய்யவில்லை.
மேலும் ‘ஆர்ஆர்ஆர்’ என்பதற்கான விளக்கத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.
‘ஆர்ஆர்ஆர்’ என்பதன் விரிவாக்கத்தை ரசிகர்கள் அனுப்பலாம் என தெரிவித்தனர்.
எனவே அனைத்து மொழி ரசிகர்களும் பதிலளிக்க தொடங்கினர்.
தற்போது அந்த தலைப்புகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ என்ற தலைப்பை ஹைலைட்டாக காட்டியுள்ளனர்.
படத்தின் கதைக்களமும் சுதந்திர காலத்துக்கு முன்பு உள்ளதால் இதுவே தலைப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.