தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாகுபலி 2 வை தொடர்ந்து சாஹோ என்னும் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்க, அருண் விஜய்தான் வில்லனாக நடித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் இளம் இயக்குனர் சூஜீத் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இரண்டு வருடங்களுக்கு மேலாக இப்படத்தின் சூட்டிங் மிகுந்த பொருட்செலவில் நடைபெற்றது.
ரூ. 300 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை யூவி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்பட டீசர் இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியாகி சாதனைகளை படைத்து வருகிறது.
எனவே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் படத்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியிட இருந்தனர்.
ஆனால் அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் சூர்யாவின் காப்பான் ஆகிய படங்கள் வெளியாகவிருந்தன.
தற்போது ஒரே வாரத்தில் பிரபாஸ் படம் வருவதால் தங்களின் வசூல் பாதிக்கப்படும் என்பதால் இதன் வெளியீட்டை ஜீலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிடலாமா? என இரு படக்குழுவும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.