கலைப்புலி எஸ் தாணுவுடன் மீண்டும் இணையும் தனுஷ்

கலைப்புலி எஸ் தாணுவுடன் மீண்டும் இணையும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalaipuli Thanu to produce Dhanush movie Needi Naadi Oke Katha Telugu remakeதனுஷ் நடிப்பில் `வடசென்னை படத்தின் முதல் பாகம் ரெடியாகிவிட்டது. இப்படம் பெரும்பாலும் ஜூன் மாதம் திரைக்கு வந்துவிடும் என தெரிகிறது.

இதனையடுத்து ஃபகீர் என்ற ஆங்கிலம்-பிரெஞ்சு மொழி படமும் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

தற்போது `மாரி-2′, `எனை நோக்கி பாயும் தோட்டா’ படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் `நீடி நாடி ஒகே கதா’ என்ற தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீவிஷ்ணு மற்றும் சாட்னா டைட்டஸ் இணைந்திருந்த இப்படத்தில் மாணவர்களின் தற்போதைய கல்விமுறையே கதைக்களமாக அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதன் தமிழ் ரீமேக் உரிமையை கலைப்புலி எஸ்.தாணு கைப்பற்றியுள்ளாராம்.

கடந்த ஆண்டு வெளியான விஐபி 2 படத்தை தனுஷ் மற்றும் தாணு இணைந்து தயாரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Kalaipuli Thanu to produce Dhanush movie Needi Naadi Oke Katha Telugu remake

இந்த மார்ச் 30ஆம் தேதி கமல்ஹாசன் படம் ரிலீஸ் கன்பார்ம்

இந்த மார்ச் 30ஆம் தேதி கமல்ஹாசன் படம் ரிலீஸ் கன்பார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal march 30கமல்ஹாசன், சத்யராஜ், அம்பிகா, மாதவி ஆகியோர் நடிப்பில் 1985ல் ரிலீஸான படம் காக்கி சட்டை.

சத்யா மூவீஸ் தயாரித்த இப்படத்தை ராஜசேகர் இயக்கியிருந்தார்.

இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்களை இன்றளவும் மறக்க முடியாது.

தற்போது 33 வருடங்களுக்கு பிறகு இப்படம் புதுப்பிக்கப்பட்டு ரி-ரிலீஸ் ஆகவுள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்த போரட்டம் காரணமாக கடந்த ஒரு மாதமாக புதுப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் இது புதிய படம் இல்லை என்பதால் இப்படத்தை இந்த வாரம் மார்ச் 30ஆம் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளனர்.

Kamalhassans Kaaki Sattai movie re-release news updates

மம்மூட்டியின் மனைவி-மகனாக நடிக்கும் நயன்தாரா-சூர்யா?

மம்மூட்டியின் மனைவி-மகனாக நடிக்கும் நயன்தாரா-சூர்யா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya nayanமெகா ஸ்டார் மம்மூட்டி அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு நேரடி படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவர் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியாக நடிக்கவுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஆந்திர மாநில முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார்.

ஆந்திராவின் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவராக அவர் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ராஜசேகர ரெட்டியின் மனைவியாக நயன்தாராவும், அவரது மகனாக ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் சூர்யாவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து இப்பட டைரக்டர் மகிராகவ் கூறியதாவது…

ராஜசேகர ரெட்டி வேடத்தில் பெரிய நடிகர் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்பதால் மம்மூட்டியை தேர்வு செய்தோம்.

அவரை தவிர மற்ற கேரக்டர்களில் யார்? நடிக்கிறார்கள் என்பதை முடிவு செய்யவில்லை.

சூர்யா, நயன்தாரா ஆகியோர் நடிக்கவிருப்பதாக வந்த தகவல்கள் உண்மையில்லை.

மற்ற நடிகர்களை தேர்வு செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டு கொண்டிருக்கிறேன்” என்றார்.

Whether Suriya and Nayanthara joins with Mammootty for Telugu movie

 

எம்.ஐ.டி கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் பாடம் பயின்ற அஜித்

எம்.ஐ.டி கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் பாடம் பயின்ற அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why Actor Ajith spotted at an Aeronautical departmentசிவா இயக்கவுள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் சூட்டிங்கில் விரைவில் கலந்து கொள்ளவுள்ளார் அஜித்.

தற்போது சினிமா ஸ்டிரைக் நடைபெற்று வருவதால் இதன் சூட்டிங் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான நடிகர்கள் வெளிநாடுகளுக்கு பறந்துவிட்டனர்.

இந்நிலையில் நடிகர் அஜித் தன் நீண்ட நாள் ஆர்வமான ஏரோ மாடலிங் துறை பக்கம் தன் கவனத்தை திருப்பியுள்ளார்.

இது குறித்து முழுவதும் அறிந்துக் கொள்ள சென்னையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள மாணவர்களிடம், தனது சந்தேகங்களை கேட்டறிந்து கொண்டாராம்.

அதன்பின்னர் அந்த மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

Why Actor Ajith spotted at an Aeronautical department

நான் தலையிடமாட்டேன்; கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜினி கொடுத்த சுதந்திரம்

நான் தலையிடமாட்டேன்; கார்த்திக் சுப்புராஜுக்கு ரஜினி கொடுத்த சுதந்திரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini gave full freedom to Karthik Subbaraj in his movie scriptரஜினிகாந்த் நடிப்பில் காலா மற்றும் 2.0 திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

இப்படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க., அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் படம் சம்பந்தமாக ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ் என்பதை பார்த்தோம்.

இந்தச் சந்திப்பின் போது புதிய படத்தின் கதை அடங்கிய முழு ஸ்கிரிப்டை ரஜினியிடம் வழங்கினாராம்.

அப்போது ரஜினியின் கேரக்டர் குறித்தும் அவர் விளக்கினாராம்.

மேலும், அவர் தன்னுடன் பணிபுரிய உள்ள டெக்னிஷன் பட்டியலையும் ரஜினியிடம் அளித்துள்ளார்.

அதனை பார்த்த ரஜினி, ‘அது உங்க சுதந்திரம். அதில் நான் தலையிட மாட்டேன்’ என தெரிவித்தாராம்.

அதில் ரஜினியின் ஜோடி யார்? என்ற விவரம் இருந்துச்சோ? என்னவோ..?

Rajini gave full freedom to Karthik Subbaraj in his movie script

தனுஷ்-அனிருத் கூட்டணி படைத்த மற்றொரு சாதனை

தனுஷ்-அனிருத் கூட்டணி படைத்த மற்றொரு சாதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Anirudh team made one more record in you tubeகோலிவுட் தாண்டி ஹாலிவுட், பாலிவுட் வரை சென்றுவிட்டவர் நடிகர் தனுஷ்.

தமிழில் இவரது நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2, வடசென்னை ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இவையனைத்துமே இந்தாண்டு 2018க்குள் ரிலீஸ் ஆகிவிடும்.

இந்நிலையில் தனுஷ் யு-டியூபில் ஒரு பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அனிருத் இசையில் மாரி படத்தில் இடம்பெற்ற ‘டானு டானு’ என்ற பாடல் யு-டியூபில் 5 கோடி ஹிட்ஸை கடந்துள்ளது.

இதற்கு முன்பு இவர்கள் கூட்டணியில் உருவான ஒய் திஸ் கொல வெறி என்ற பாடல் 14 கோடி ஹிட்ஸை கடந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush and Anirudh team made one more record in you tube

More Articles
Follows