காலையில் ‘லவ்’… இரவில் ‘ரெமோ’…. கலக்கும் சிவகார்த்திகேயன்

காலையில் ‘லவ்’… இரவில் ‘ரெமோ’…. கலக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rremo wrap up partyஇன்று (ஆகஸ்ட் 2) விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இருமுகன் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இப்படத்தில் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் லவ்.

இதில் நர்ஸ் வேடம் ஏற்று நடிக்கிறார்.

காலையில் நடைபெற்ற இவ்விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.

இந்நிலையில் இன்றே பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் ரெமோ படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார் சிவா.

இதன் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது.

இதன் சூட்டிங் நிறைவை ஒரு விழா போல கொண்டாடி அசத்தியுள்ளனர் படக்குழுவினர்.

‘ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்….’ ரஜினி மகள்கள் வேண்டுகோள்

‘ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம்….’ ரஜினி மகள்கள் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nothing to worry rajini daughters request to fansசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் #HitToKill என்று ரஜினி ட்வீட் செய்திருந்தார் என்பதை பற்றி பார்த்தோம்.

ஆனால் ரஜினியின் ட்வீட்டர் அக்கௌண்டை யாரோ சில விஷமிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்களாம்.

எனவே இதுகுறித்து, ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா இருவரும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்கள் தெரிவித்துள்ளதை இங்கே புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளோம்.

 

rajini twitter account hacked

 

ஆறு மாதங்களுக்கு பிறகு ரஜினி ட்வீட்…

ஆறு மாதங்களுக்கு பிறகு ரஜினி ட்வீட்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini real life imageகபாலி ரிலீஸ், அமெரிக்கா ஓய்வு என அனைத்தையும் முடித்து கொண்டு அண்மையில் சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

அதன்பின்னர் கபாலி வெற்றிக்கு தனது நன்றியை மக்களுஙக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சற்றுமுன் #HitToKill என்ற வார்த்தையை மட்டுமே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

எனவே இதற்கு பலரும் பல மாதிரியான காரணங்களை கண்டுபிடித்து சொல்லி வருகின்றனர்.

கொசுவை அடித்து கொல் என்றும் தெரிவிக்கின்றனர்.
(Kill the diseases out..coz if the mosquitos r killed..diseases will be killed)

என்ன அர்த்தம் இருந்தாலும் தலைவர் சொன்னதால் இந்த #HitToKill என்ற வார்த்தை தற்போது ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி விசாரணை படத்தை பாராட்டி ட்வீட் செய்திருந்தார்.

கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு பிறகு ரஜினி ட்வீட் செய்திருக்கிறார். இது ரஜினியின் 30வது ட்வீட் ஆகும்.

ரியல் ரெமோ யாரு? சிவகார்த்திகேயன் முன்னிலையில் விக்ரம் பேச்சு

ரியல் ரெமோ யாரு? சிவகார்த்திகேயன் முன்னிலையில் விக்ரம் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram and sivakarthikeyan in irumugan audio functionஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள இருமுகன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், நிவின்பாலி, இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது விக்ரம் பேசியதாவது…

இப்படம் உருவாவதில் நிறைய தாமதம் ஏற்பட்டது.

எனக்காக ஒரு பெரிய நடிகரின் படத்தை ஆனந்த் சங்கர் நிராகரித்து விட்டார். அவருடைய நம்பிக்கைக்கு நன்றி.

‘இருமுகன்’ படத்தில் நான் ஒரு காட்சியில்தான் நர்ஸ் ஆக நடித்துள்ளேன்.

அது ஒரு ஊறுகாய் மாதிரிதான். ஆனால், ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் பிரியாணியே செய்திருப்பார் என நம்புகிறேன்.

அவரை ‘ரெமோ’ என்று அழைப்பது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.” என்றார்.

ஹரி இயக்கும் ‘சாமி-2’; விக்ரமுக்கு வயதான வேடம்.?

ஹரி இயக்கும் ‘சாமி-2’; விக்ரமுக்கு வயதான வேடம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram and hari stillsஐ படத்திற்கு பிறகு பெரிய வெற்றியை விக்ரம் கொடுக்கவில்லை.

எனவே ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் இருமுகன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

அப்போது ஹரி இயக்கத்தில் சாமி-2 படத்தில் நடிப்பதை உறுதி செய்தார் விக்ரம்.

அதன்பின்னர் விக்ரம் பேசியபோது..

சாமி 2 படத்தின் போஸ்டரை வெளியிட்டு விடலாமா? எனக் கேட்டனர்.

கொஞ்சம் வயதான கெட்டப்பில் மைல்கல் மேல் உட்கார வைத்து விடலாமா? என கேட்டனர்.

எதற்கு வயதான கேரக்டர். அப்படியே இருக்கட்டும் என்றேன்.

ஹரி இயக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ப்ரியன் ஒளிப்பதிவு செய்ய, ஷிபு தமீன்ஸ் தயாரிக்கிறார்.

டபுள் கனெக்ஷன் ஆகும் இருமுகன்-ரெமோ

டபுள் கனெக்ஷன் ஆகும் இருமுகன்-ரெமோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram and sivakarthikeyanவிக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் இருமுகன்.

ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.

இதன் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், நிவின்பாலி, இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இணைந்த்து இல்லாமல் விக்ரம் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் அவர்களின் பட கேரக்டர்களில் இணைந்துள்ளனர்.

ரெமோ படத்தில் பெண் வேடமிட்டு நர்ஸ் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

அதுபோல் இருமுகன் படத்திலும் விக்ரம் திருநங்கையாக நர்ஸ் வேடத்தில் வருகிறார்.

More Articles
Follows