ரெமோ அப்டேட்ஸ்: அவ்வை சண்முகி – தில்லு முல்லு பட கனெக்ஷன்..!

Sivakarthikeyan's Remo Movie Story Revealedபிரம்மாண்டமாக உருவாகியுள்ள ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நர்ஸாக நடிக்கிறார் என்பது நாம் அறிந்ததே.

இவர் எப்படி பெண்ணாக மாறுகிறார்? எதற்காக மாறுகிறார்? என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனின் அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளார். நண்பர்களாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளனர்.

நரேன் மற்றும் கல்யாணி நடராஜன் கீர்த்தியின் பெற்றோர்களாக நடித்துள்ளனர்.

இப்பட கதைக்கும் நாடகத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளதாம். மௌலி, கே. எஸ். ரவிக்குமார் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் நாடக கலைஞர்களாக வருகிறார்கள்.

இவர்களின் ஆலோசனைப்படிதான் சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு, கீர்த்தியின் காதலை பெற போராடுகிறாராம்.

அவ்வை சண்முகி மற்றும் தில்லு முல்லு படங்களில் சினிமா கலைஞராக நாகேஷ் வருவார். அவர்தான் அதில் கமல் மற்றும் ரஜினிக்கு ஐடியா கொடுத்த மாறு வேடத்தில் போக சொல்வார்.

எனவே இதிலும் அப்படங்களைப் போன்று காமெடியில் குறை வைக்காமல் கதையை உருவாக்கி இருக்கிறார்களாம்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Overall Rating : Not available

Related News

சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர்…
...Read More
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் வரிசையில்…
...Read More
சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் என்ற படம்…
...Read More
சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ மற்றும் வேலைக்காரன்…
...Read More

Latest Post