‘ரெமோ’வை நான் தயாரிக்கல, நான் தயாரிச்சிருந்தா…’ சிவகார்த்திகேயன்…!

Sivakarthikeyan Speaks at RemoFL Launch Eventஆர். டி ராஜாவின் 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் தங்களது முதல் படைப்பாக ரெமோ படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட்டு விழா நடைப்பெற்றது.

இதில் சிவகார்த்திகேயன் பேசும்போது…

இப்படத்தை நான்தான் தயாரிப்பதாக நிறைய பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

ஆர் டி ராஜாவை எனக்கு மெரினா படத்தின் போதே தெரியும். அவர்தான் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

நான் முதலில் தயாரிக்க நினைத்தேன் என்பது உண்மைதான்.

ஒருவேளை நான் தயாரித்திருந்தால், ஒரு எஃப் எம் ஸ்டேஷனில் நானும் அனிருத்தும் சேர்ந்து இந்த டைட்டில் ட்ராக்கை வெளியிட்டு இருப்போம்.

நிச்சயமாக இவ்வளவு பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்து இருக்க மாட்டேன்.

அதுபோல் ராஜா நினைத்திருந்தால் இப்படத்தை ரூ. 10 கோடியில் தயாரித்து, 20 கோடியில் விற்பனை செய்திருக்கலாம்.

ரஜினிமுருகனுக்கு பிறகு அப்படி ஒரு வியாபாரம் கிடைத்திருக்கும்.

ஆனால் அவர் எப்போதும் இயக்குனர் ஷங்கரை போல மிகப்பிரம்மாண்டமாக செய்ய ஆசைப்படுபவர். அவரது எண்ணம்போல் எல்லாம் அமையும்.” என்றார்.

Overall Rating : Not available

Latest Post