வேலைக்காரன் செய்த வேலையால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வேதனை

sivakarthikeyanதனி ஒருவன் படத்திற்கு பிறகு மோகன்ராஜாவும், ரெமோ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனும் இணைந்துள்ள படம் வேலைக்காரன்.

இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் பட்டைய கிளப்பிக் கொண்டிருப்பதால் இதன் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்தமாதம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது.

பின்னர் அந்த தேதி உறுதியில்லை என தகவல்கள் பறக்க, சில ஊடகங்கள் மெர்சல் படத்துடன் மோதும் என தெரிவித்தன.

எனவே சிவகார்த்திகயேன் ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகாக காத்திருந்தனர்.

இந்நிலையில் அடுத்த பண்டிகை தினத்தை குறிவைக்க தொடங்கியது வேலைக்காரன் தயாரிப்பு நிறுவனமாக 24ஏஎம் ஸ்டூடியோஸ்.

அதன்படி இறுதியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

இரண்டு முறை தேதியை மாற்றி வருடத்தின் இறுதிக்கு படத்தின் ரிலீஸை ஒத்தி வைத்துவிட்டதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வேதனையில் இருக்கிறார்களாம்.

Sivakarthikeyan fans disappointed because of Velaikkaran release postponed

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post