தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராட்சசன், சிலுக்குவார்பட்டி சிங்கம், ஜகஜால கில்லாடி என்று 3 படங்களை கைவசம் வைத்துள்ளார் விஷ்ணு விஷால்.
இந்த 3 படங்களையும் தொடர்ந்து 4வது ஒரு புதிய படத்தையும் இன்று தொடங்கியுள்ளார்.
தனது பெற்றோரின் திருமண நாளில் தனது சொந்த தயாரிப்பில் இப்படத்தை தொடங்கியுள்ளார்.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படத்தை இயக்குனர் வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.
இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஷிவானி நடிக்கிறார்.
இவர் பிரபல நடிகர் டாக்டர்.ராஜசேகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிவானி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
மேலும், பிரபு, சரண்யா பொன்வண்ணன், முனிஷ்காந்த், நான் கடவுள் ராஜேந்திரன், சிங்கம் புலி, பிரவீன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தில் பின்னணிப் பாடகரும், நடிகருமான க்ரிஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பை தனது பெற்றோரின் திருமண நாளில் துவங்குவதில் மகிழ்ச்சி என்று விஷ்ணு விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Singer Krish composing Music for Vishnu Vishals 4th Production movie