‘ராட்சசன்’ படத்தை விட கூடுதலான உணர்வை ‘போர் தொழில்’ தரும் – சக்திவேலன்

‘ராட்சசன்’ படத்தை விட கூடுதலான உணர்வை ‘போர் தொழில்’ தரும் – சக்திவேலன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’.

இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார். புலனாய்வு திரில்லர் ஜானரிலான இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

ஜுன் 9 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்…

” போர் தொழில் படத்தை பார்த்து விட்டேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது. தரமான படைப்பாக தயாராகி இருக்கிறது. தயாரிப்பாளரான முகேஷ் மேத்தா நான்கு மாதங்களுக்கு முன்னரே இப்படத்தைப் பற்றி விவரித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் ‘ராட்சசன்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது, எவ்வாறான உணர்வு ஏற்பட்டதோ.. அதைவிட ஒரு மடங்கு கூடுதலான உணர்வை இந்த திரைப்படம் அளிக்கும்.

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘போர் தொழில்’ திரைப்படத்தை திட்டமிட்டு தயாரிப்பதுடன், அதனை விளம்பரப்படுத்துவதற்காக கடுமையாக உழைத்து வருகிறார்கள்.

சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் போன்றவர்கள் திறமையாக நடித்திருக்கிறார்கள். சரத்குமார் இதுபோன்ற கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

சரத்குமாரின் இடத்தை நிரப்புவதற்கு தென்னிந்தியாவில் எந்த நட்சத்திரங்களும் இல்லை என உறுதியாக கூறலாம். அவர் இந்த படத்தில் தன் திறமையான நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

‘ஓ மை கடவுளே’ படத்திற்குப் பிறகு அசோக் செல்வன் நடித்திருக்கும் இந்த ‘போர் தொழில்’ படத்தை வெளியிடுகிறேன். இந்தத் திரைப்படத்திலும் அசோக் செல்வன் சாக்லேட் பாயாக அறிமுகமாகி, உச்சகட்ட காட்சியில் நம் மனதில் பதிந்து விடுவார்.

படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய விதத்தை பார்த்து, ‘இந்த இயக்குநர் எதிர்காலத்தில் சிறந்த இயக்குனராக வருவார்’ என இப்படத்தில் நடித்திருக்கும் மூத்த தயாரிப்பாளராக பி. எல். தேனப்பன் என்னிடம் தெரிவித்திருக்கிறார்.

இந்த இளம் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியிருக்கும் ‘போர் தொழில்’ திரைப்படம் சுவாரசியமான திரில்லர் திரைப்படமாக உருவாகி இருக்கிறது.” என்றார்.

இணை கதாசிரியர் ஆல்பிரட் பிரகாஷ் பேசுகையில்..

‘ அவ்வையாரின் ஆத்திச்சூடிப்படி, ‘போர் தொழில் புரியேல்’. பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியின்படி ‘போர் தொழில் பழகு’. அந்த காலகட்டத்தில் தமிழ் மன்னர்களுக்குள் சண்டை ஏற்பட்டதால் அவ்வையார் ‘போர் தொழில் வேண்டாம்’ என்று குறிப்பிட்டார்கள். பாரதியார் காலகட்டத்தில், நாம் வெளியிலிருந்து அடக்கப்பட்டதால், ‘போர் தொழில் பழகு’ எனக் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள காலகட்டத்தில் இதில் எது சரி..? இது என்ன? என்பதையும், இரண்டு நேர் எதிர் கருத்தியல்வாதிகள் சந்தித்துக் கொள்ளும் களம் தான் இந்த திரைப்படம். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

Distributor Sakthivelan compared Por Thozhil and Ratchasan

ஏழை மாணவ – மாணவிகள் மேற்படிப்பு படிக்க உதவும் நடிகர் விஷால்

ஏழை மாணவ – மாணவிகள் மேற்படிப்பு படிக்க உதவும் நடிகர் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆண்டு தோறும் +2 தேர்வில் தேர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண் எடுத்தும் மேற்கொண்டு படிக்க முடியாத விவசாய குடுபத்தினார்கள், தாய் தந்தை இல்லாதவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் ஏழை, எளிய குடும்பத்தின் மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி படிப்பதற்காக தனது தேவி அறக்கட்டளை சார்பில் உதவி செய்து வருகிறார் நடிகர் விஷால்.

அதே போன்று 2023 இந்த வருடம் +2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் மேற்கொண்டு படிக்க முடியாத ஏழை குடும்பம் சார்ந்த மாணவ மாணவிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வில் தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் பெற்றோருடன் கலந்துக் கொண்டார்கள்.

Vishal helps poor students for higher educations

LGM பட நடிகர் யோகி பாபுவுக்கு தயாரிப்பாளர் தோனி கொடுத்த பரிசு

LGM பட நடிகர் யோகி பாபுவுக்கு தயாரிப்பாளர் தோனி கொடுத்த பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு. ஒரு பக்கம் காமெடி நடிகர் என்றாலும் மறுபக்கம் கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார்.

‘மண்டேலா’, ‘கூர்கா’, ‘பொம்மை நாயகி’ உள்ளிட்ட பல படங்கள் இவரை நாயகனாக வைத்து உருவாக்கப்பட்டது.

இவர் கிரிக்கெட் ஆடுவதில் ஆர்வம் கொண்டவர். அடிக்கடி சூட்டிங் ஸ்பாட்டில் இவர் கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகும்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற CSK சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி அவர்கள் யோகிபாபுவிற்கு தன்னுடைய கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

இந்த பேட்டை பெற்ற யோகிபாபு அந்த பேட்டிற்கு முத்தம் கொடுத்து கேப்டன் டோனிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை யோகி பாபுவே தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கிரிக்கெட்டர் தோனி முதல்முறையாக தயாரிக்கும் LGM – Lets Getting Married என்ற தமிழ் படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thala for a Reason; Cricketer MS Dhoni gift to Yogibabu #ipl #msdhoni #csk #cricket தல தோனி யோகிபாபு

https://youtube.com/shorts/HrS5xVevqio?feature=share4

Dhoni gifted cricket bat to yogi babu

தீவிர ரசிகரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்ற நடிகர் சூரி

தீவிர ரசிகரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்ற நடிகர் சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து காமெடி நடிகராக உயர்ந்தவர் சூரி.

தற்போது கதையின் நாயகனாகவும் படங்களின் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகத்தில் நாயகனாக நடித்திருந்தார்.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘கொட்டுக்காளி’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சூரி தனது ரசிகர் ஒருவரின் வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுள்ளார்.

ரசிகரின் அம்மாவை உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். “என் அன்பு தம்பிகள். என் பெயரை சொல்லி பல உதவிகள் செய்கிறார்கள். என் ரசிகரின் அம்மாவை என் அம்மாவாக பார்க்க வந்திருக்கிறேன் இதுவே எனக்கு பெருமை” என சூரி பேசினாராம்.

Soori visits his fan’s home by using auto

‘மாவீரன்’ படத்தில் தன் கேரக்டர் என்ன.? மிஷ்கின் ஓபன் டாக்

‘மாவீரன்’ படத்தில் தன் கேரக்டர் என்ன.? மிஷ்கின் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்த படம் ‘மாவீரன்’.

மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மிஷ்கின் நடித்துள்ளார். சாந்தி டாக்கீஸ் தயாரித்துள்ள இந்த படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தன்னுடைய கேரக்டர் குறித்து மிஷ்கின் சமீபத்திய பேட்டி கூறியுள்ளதாவது…

‘மாவீரன்’ படத்தில் கொடுமையான வில்லனாக நடித்திருக்கிறேன். வேஷ்டி சட்டை அணிந்து சிவகார்த்திகேயன் உடன் மோதும் அதிபயங்கர சண்டை காட்சிகள் உள்ளன. படம் சிறப்பாக வந்திருக்கிறது. எனத் தெரிவித்துள்ளார்.

mysskin reveals his characted in sivakarthikeyan’s maaveeran

இந்திய வீரர்களின் குரல்களை மூடக்கூடாது.; மல்யுத்த வீரர்களுக்காக ரித்திகா சிங் வாய்ஸ்

இந்திய வீரர்களின் குரல்களை மூடக்கூடாது.; மல்யுத்த வீரர்களுக்காக ரித்திகா சிங் வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர்.

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை.

அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.

புதிய பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்தினர்.

தடையை மீறி பேரணியாக சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

போராட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள், நாட்டிற்காக வென்றெடுத்த பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசப்போவதாக கூறினார்கள்.

அத்துடன் இந்தியா கேட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் எனவும் கூறினர்.

கங்கையில் பதக்கங்களை வீசும் மல்யுத்த வீரர்களை தடுக்க மாட்டோம் என்று காவல்துறை கூறியது. பல வருட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் கிடைத்த பதக்கங்களை வைத்துக்கொள்ளுமாறு உள்ளூர் மக்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ரித்திகா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “மல்யுத்த வீரர்களை நடத்தப்படும் விதம் மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர்கள் மனநிலையை நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. உலகத்திற்கு முன்பு அவர்களது சுயமரியாதை மறுக்கப்பட்டுள்ளது. நமது நாட்டிற்காக விளையாடியவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவர்கள் இந்தியாவிற்கு பின்னால் இருப்பதுப்போல நாமமும் அவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும். இவர்களின் குரல்களை மூடுவது தவறான புரிதலுக்கு வழிவகுக்கும், அதை அனுமதிக்காது ஒன்று சேருங்கள். இந்த பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று உண்மையில் நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Ritika Singh Supports Indian Female Wrestlers Who Are Protesting For Justice

More Articles
Follows