தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ’லால் சலாம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் கிரிக்கெட் வீரர்கள் ஆக நடிக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விஷ்ணு விஷால் இயக்குனர் ராம்குமார் உடன் இணையும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
’முண்டாசுப்பட்டி’ ’ராட்சசன்’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை அடுத்து மீண்டும் விஷ்ணு விஷால் – ராம்குமார் 3வது முறையாக இணைய இருப்பதாக அறிவிக்கப்பட்டதால் இப்படம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.
மேலும், விஷ்ணு விஷால் நடித்த ’மோகன்தாஸ்’, ’ஆர்யான்’ மற்றும் ’இடம் பொருள் ஏவல்’ ஆகிய மூன்று திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
Director ramkumar teamsup with vishnu vishal for 3rd time