தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.
விஷ்ணு விஷால் தமிழில் ‘வெண்ணிலா கபடி குழு’, ‘குள்ளநரி கூட்டம்’, ‘நீர்பறவை’, ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜீவா’, ‘இன்று நேற்று நாளை’, ‘ராட்சசன்’, ‘எஃப்ஐஆர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
இவர் கடைசியாக ‘கட்டா குஸ்தி’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் ‘பாரத்’ பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “நாட்டின் பெயரை மாற்றுவது எப்படி பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு உதவும்? இது மிகவும் விசித்திரமாக உள்ளது. இந்தியா எப்போதும் ‘பாரத்’ ஆகவே இருந்தது. நம் நாட்டை இந்தியா என்றும் பாரத் என்றும் நாம் அறிவோம். திடீரென ஏன் இந்தியா என்ற பெயரை துறக்க வேண்டும்?” என்று குறிப்பிட்டுள்ளார்.
actor vishnu vishal raised questions amidst the discussion of renaming india