தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார்.
அந்தப் படத்தின் டீசர் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி அன்று வெளியானது. இதன் பின்னர் நவம்பர் 14ஆம் தேதி தன்னுடைய X பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு வந்தார். அது சர்ச்சையானது. தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்..
அதன் விவரம் வருமாறு.
கமல்ஹாசன் மற்றும் ஆமீர்கானுடன் தான் (விஷ்ணு) போட்டோவை பகிர்ந்து அதில்.. ’ஃபேவரிட் படங்களுக்கு எல்லாம் ஃபேவரிட்’ என்று குறிப்பிட்டு ‘Superstars are superstars for a reason’ என பதிவிட்டார்.
பின்னர் அந்த வார்த்தைகளை மாற்றி ’stars are stars for a reason’ இருந்தார்.
தற்போது பதிவில்…
சூப்பர்ஸ்டார்கள் சூப்பர்ஸ்டார்கள் தான். அந்தப் பதிவை நான் எடிட் செய்துவிட்டேன் என்பதற்காக நான் பலவீனமானவன் அல்ல. சூப்பர்ஸ்டார்கள் அனைவரையும் நேசிக்கிறேன்.
என்னுடைய டைம்லைனில் நெகட்டிவிட்டியை பரப்புவோர் இங்கிருந்து கிளம்புங்கள். நமக்கென்று ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் பட்டம் மட்டுமே உள்ளது. ஆனால் என்னுடைய மதிப்புக்கு. அப்பாற்பட்டு, சாதித்த அனைவருமே சூப்பர்ஸ்டார்கள்தான்.” என பதிலளித்துள்ளார்.
Vishnu Vishal click with Kamal and Amirkhan became controversy