அழகான நாட்டில் வன்முறையில் சிக்கிய ‘தி லெஜண்ட்’ பட பிரபலம்

அழகான நாட்டில் வன்முறையில் சிக்கிய ‘தி லெஜண்ட்’ பட பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான படம் ‘தி லெஜண்ட்’.

‘தி லெஜண்ட்’ படத்தில் நடித்தவர் நடிகை ஊர்வசி ரவுத்தலா.

இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமுக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் தெலுங்கு படமொன்றில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட ஒரு நிமிடத்துக்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த நிலையில், நடிகை ஊர்வசி ரவுத்தலா பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பாரிஸ் சென்றார்.

அங்கு சிறுவனை போலீஸ் அதிகாரி சுட்டுக்கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடந்து வரும் வன்முறை மற்றும் கலவரத்தில் சிக்கி உள்ளார்.

இதுகுறித்து ஊர்வசி ரவுத்தலா வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரிசில் நடந்து வரும் கலவரமும், வன்முறை சம்பவங்களும் கவலை அளிக்கிறது. பயமாகவும் உள்ளது. என்னுடன் வந்த குழுவினரின் பாதுகாப்பு நிலையை நினைத்து வருந்துகிறேன். இந்தியாவில் இருக்கும் எங்கள் குடும்பத்தினரும் எங்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகின்றனர். “நாங்கள் பாதுகாப்பாக இருக்க முடிந்தவரை முயற்சி செய்கிறோம்’. பாரிஸ் அழகான நாடு. இங்கு இப்படி வன்முறை சம்பவங்கள் நடப்பது கவலை அளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

‘The Legend’ actress caught up in violence in Paris

‘சிங்கப்பாதை’-யில் இணைந்த ஆர்.ஜே. பாலாஜி.; சிவகார்த்திகேயன் விலக என்ன காரணம்.?

‘சிங்கப்பாதை’-யில் இணைந்த ஆர்.ஜே. பாலாஜி.; சிவகார்த்திகேயன் விலக என்ன காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லி.

இவரின் உதவியாளர் அசோக் குமார் என்பவர் புதிய படத்தை இயக்க உள்ளார்.

இதில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பார் எனவும் இந்த படத்திற்கு ‘சிங்கப் பாதை’ என பெயரிடப்பட்டதாகவும் சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வந்தன. இந்தப் படத்தை பிரபல கே ஜே ஆர் நிறுவனம் தயாரிக்கும் எனவும் கூறப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் சிவகார்த்திகேயன் அந்த படத்தில் இருந்து விலகி விட தற்போது ‘சிங்கப் பாதை’-யில் இணைகிறார் ஆர் ஜே பாலாஜி.

எனவே விரைவில் இதுபற்றி அறிவிப்பை நாம் எதிர்பார்க்கலாம்.

மேலும் ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் ‘சிங்கப்பூர் சலூன்’ மற்றும் ‘சொர்க்கவாசல்’ ஆகிய படங்கள் ரிலீஸ்-க்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Singapathai updates Sivakarthikeyan quits RJ Balaji enters

க்ரைம் த்ரில்லர் கதைக்காக மீண்டும் கவின் இயக்கத்தில் முகேன்

க்ரைம் த்ரில்லர் கதைக்காக மீண்டும் கவின் இயக்கத்தில் முகேன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

G. மணிக்கண்ணன் தயாரிப்பில், ‘வேலன்’ பட வெற்றி மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கவின் மீண்டும் நடிகர் முகேனுடன் புதிய படம் ஒன்றிற்காக இணைந்துள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தின் பூஜை சென்னையில் துவங்கியது.

தயாரிப்பாளர் G. மணிக்கண்ணனின் 2வது தயாரிப்பான இதில் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ‘கோல்டன் ரெட்ரீவர்’ வகை நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முகேன்

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் மற்றும் வாகமன் பகுதிகளில் நடைபெறவுள்ளது.

க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தை ‘பார்க்கிங்’ திரைப்பட கேமராமேன் ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்கிறார்.

‘டாடா’ புகழ் ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். அடுத்த வாரத்தில் தொடங்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்படிப்பை, ஒரே கட்டமாக தொடங்கி நிறைவு செய்ய திரைப்படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.

முகேன்

Kavin and Mugen teams up again

இஸ்லாமிய பெண் தொழுகையில் மூவர் குண்டு தயாரிக்க.; சர்ச்சையாகும் BHAI..?

இஸ்லாமிய பெண் தொழுகையில் மூவர் குண்டு தயாரிக்க.; சர்ச்சையாகும் BHAI..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KRS FILMDOM தயாரித்து, PVR Pictures வெளியிடும் பாய் – Sleeper Cell படத்தின் First look கடந்த மாதம் Release ஆனது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது, பாய் – Sleeper Cell படத்தின் Glimpse Release Date – ஐ அறிவித்துள்ளது.

ஒரு Promo Video சற்று முன் வெளியாகி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த Promo – வில் ஒரு இஸ்லாமிய பெண் தொழுகி கொண்டிருக்க அவள் பின்னே மூன்று நபர்கள் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்பொழுது ஒரு mobile- க்கு BHAI என்ற நபரிடம் இருந்து Call வர அச்சமயம் Glimpse 15-07-23 (7pm) – க்கு Release என்று அந்த mobile- க்கு msg வந்து முடிகிறது.

First look poster Release ஆகி the kerala story, kashmir file, farhaanaa போன்ற திரைப்படங்களை ஒப்பிட்டு சர்ச்சை ஆன நிலையில் தற்போது இப்படி ஒரு promo video release ஆகி மேலும் பரபரப்பு மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாய் - Sleeper Cell

Promo of BHAI Glimpse will make controversy

தியேட்டர்களில் பட்டைய கிளப்பும் ‘போர் தொழில்’.; ஓடிடி ரிலீஸ் தள்ளிவைப்பு.!

தியேட்டர்களில் பட்டைய கிளப்பும் ‘போர் தொழில்’.; ஓடிடி ரிலீஸ் தள்ளிவைப்பு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான படம் ‘போர் தொழில்’.

இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஜூன் மாதம் 9-ம் தேதி வெளியான இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

உலக அளவில் ரூ.50 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாக கடந்த வாரம் படக்குழு தெரிவித்திருந்தார்.

இந்தப் படம் ஜூலை 7-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருந்தது.

இந்த நிலையில் ஆனால், ‘போர் தொழில்’ படம் திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் குவித்து வருவதால், ஓடிடி ரிலீஸ் தேதியை தள்ளிவைக்குமாறு தயாரிப்பு நிறுவனம், சோனி நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டது.

இதனால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ‘போர் தொழில்’ படம் சோனி லைவ் தளத்தில் வெளியாகும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

ashok selvan’s por thozhil movie ott release postponed

’16 வயதினிலே’ முதலாளி ராஜ்கண்ணு இறுதி ஊர்வலத்தில் 20 பேர் பங்கேற்பு

’16 வயதினிலே’ முதலாளி ராஜ்கண்ணு இறுதி ஊர்வலத்தில் 20 பேர் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் இமயம் என ரசிகர்களால் திரையுலகினரால் அன்பாக அழைக்கப்படுபவர் பாரதிராஜா. இவர் அறிமுகமான முதல் தமிழ் படம் ’16 வயதினிலே’. இதில் கமல் ரஜினி ஸ்ரீதேவி கவுண்டமணி உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்தனர்.

இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்தை எஸ்ஏ. ராஜ்கண்ணு என்பவர் தயாரித்திருந்தார். இந்த படம் இயக்குனர் பாரதிராஜாவுக்கு மட்டுமல்லாமல் கமல் ரஜினி ஸ்ரீதேவி கவுண்டமணி இளையராஜா உள்ளிட்ட பலருக்கும் சினிமாவில் பெரும் திருப்புமுனையை உண்டாக்கியது.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் ஜூலை 11ஆம் தேதி மரணம் அடைந்தார் ராஜ்கண்ணு. இதனை அடுத்து பாரதிராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்…

“16 வயதினிலே”திரைப்படத்தின்
வாயிலாக என்னை இயக்குனராக
அறிமுகம் செய்து, என் வாழ்வில்
ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற
என் முதலாளி திரு. S.A.ராஜ்கண்ணு அவர்களின் மறைவு, பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது.
அவரின் மறைவு எனக்கும்
என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்.

கமல் தன் ட்விட்டரில்…

ரசிகர்களின் மனதை விட்டு அகலாத பல மகத்தான திரைப்படங்களைத் தமிழுக்குத் தந்த கலையார்வம் மிக்க தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைந்துவிட்டார். என் திரைவாழ்வின் முக்கியமான திரைப்படங்களான 16 வயதினிலே, மகாநதி ஆகிய படங்கள் அவரது தயாரிப்பில் உருவானவை. அவரது குடும்பத்தாருக்கும்… https://t.co/YYwiEYc8YJ https://t.co/MZPjVay0rc

கமல் மற்றும் பாரதிராஜா இருவரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் ரஜினிகாந்த் எந்த இரங்கலும் தெரிவிக்கவில்லை. அவர் உதயநிதி – மாரி செல்வராஜ் இணைந்த ‘மாமன்னன்’ படத்தை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், கன்னிப்பருவத்திலே, மகாநதி போன்ற 8 திரைப்படங்களை தயாரித்தவர் திரு.எஸ்.ஏ. ராஜ்கண்ணு அவர்கள்.

இவர் 11.7.2023 தாம்பரம் அடுத்துள்ள சிட்லபாக்கத்தில் உடல் நலக்குறைவால் காலமானார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, கவுண்டமணி போன்ற சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய இவரது இறுதி ஊர்வலத்தில் நண்பர்கள் உறவினர்களை தவிர முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் உட்பட சுமார் 20 பேர் மட்டுமே கலந்துக் கொண்டனர்.

தமிழ் திரையுலகை சார்ந்தோர் யாரும் அஞ்சலி செலுத்த வராதது வேதனைக்குரியதாகும்.

திரையுலக வரலாற்றில் 16 வயதினிலே எனும் திரைப்படம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இப்படம் 1977 ஆம் ஆண்டு திரையிடப்பட்டு 46 ஆண்டுகளுக்கு பிறகும் எல்லோராலும் இன்றளவும் பேசப்படக்கூடிய படமாக உள்ளது.

இவருடைய மரணம் வாழ்க்கையின் நிலையாமை தத்துவத்தை போதிப்பதாக அமைந்துள்ளது. அன்னாரது ஆத்மா இறைவனடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறோம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

16 Vayadhinilae Producer SA Rajkannu passes away

More Articles
Follows