லிங்குசாமி-யின் ‘தி வாரியர்’ படத்தில் இணைந்தது ஆதித்யா மியூசிக்

லிங்குசாமி-யின் ‘தி வாரியர்’ படத்தில் இணைந்தது ஆதித்யா மியூசிக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்து இயக்குனர் என். லிங்குசாமி இயக்கிய தி வாரியர் மூலம் தமிழ் மொழியில் ஆதித்யா மியூசிக் கால்பதித்திருப்பது பெருமைக்குரியது.

தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட இப்படத்தில் ராம் பொதினேனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் 14 ஜூலை 2022 அன்று உலகெங்கும் பிரமாண்டமான முறையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று சென்னையில் நடந்த பிரம்மாண்டமான விழாவில் தி வாரியர், படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளுக்கும் சிலபரசன் டிஆர் பாடிய முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது . அந்த புல்லட் பாடலின் லிங்க் இதோ ..

Aditya music bagged the audio rights of Lingusamy’s The warrior film

சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் ஜிவி பிரகாஷ் அந்த துறையைதான் செலக்ட் செஞ்சிருப்பாராம்..; அவரே சொன்னதை பாருங்க.!

சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் ஜிவி பிரகாஷ் அந்த துறையைதான் செலக்ட் செஞ்சிருப்பாராம்..; அவரே சொன்னதை பாருங்க.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்) சம்பிரதா என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் கலந்துகொண்டார். ஆஹா தமிழ் ஓடிடி சார்பில் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் மேனன் நடிப்பில் ஆஹா தமிழில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற செல்ஃபி படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரவிராசு இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் நடித்துள்ள ஐங்கரன் படம் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மே இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படமும் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலரும் மாணவ மாணவிகள் மத்தியில் திரையிடப்பட்டது.

LIVING TOGETHER LESSON…; பேச்சுலர் விமர்சனம் 3.5/5

இரண்டு படங்களில் டிரைலர்களை பார்த்த மாணவர்கள் உற்சாகத்தில் உரக்கக் கத்தி, தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.

அதனைத்தொடர்ந்து மேடையேறிய இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் மாணவர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது ஜிவி பிரகாஷ் கூறியதாவது:-

உங்களின் இந்த உற்சாகத்தை பார்க்கும்போது எனக்கும் சந்தோஷம் ஏற்படுகிறது. உங்களுடைய எனர்ஜி என்னை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது.

நான் திரைத்துறைக்கு வராமல் இருந்திருந்தால் என்னவாகி இருப்பீர்கள் என்று கேட்கிறார்கள். பள்ளி நாட்களில் நான் நன்றாக கிரிக்கெட் விளையாடுவேன். சினிமாவுக்கு வராமல் போயிருந்தால் கிரிக்கெட்டராக முயற்சி செய்திருப்பேன்.

இசை, நடிப்பு இரண்டிலும் ஒரே நேரத்தில் கவனம் செலுத்துவது எனக்கு கடினமாக தோன்றவில்லை.
உங்களின் எதிர்காலத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை தைரியமாக செய்யுங்கள். அடுத்தவர்களின் உத்தரவுக்காக காத்திருக்காதீர்கள். உங்கள் மனது என்ன சொல்கிறதோ அதை மட்டும் செய்யுங்கள் என்றார்.

அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் ஜி வி பிரகாஷ் குமாரிடம் பாடல்களை பாடச் சொல்லி கேட்டனர்.

அவரும் பேச்சுலர், மதராசபட்டினம், ஆடுகளம் போன்ற படங்களிலிருந்து பாடல்களைப் பாடி மாணவர்களை மகிழ்வித்தார்.

அப்போது மாணவர்கள் விசில் அடித்தும், உரக்கக்கத்தியும், கைத்தட்டியும், தங்கள் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து செல்ஃபி படத்தின் இயக்குனர் மதிமாறன் மாணவர்கள் மத்தியில் பேசினார்.

இயக்குனர் மதிமாறன்  கூறியதாவது:-

முதலில் உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். செல்பி படத்தில் ஒரு டயலாக் இருக்கும் இஞ்சினியரிங் என்று சொன்னாலே காரி துப்புரான் என்று எழுதியிருப்பேன்.

இது பொதுவாக சொல்லப்பட்டது கிடையாது இன்ஜினீயரிங்கை தவறாக பயன்படுத்தும் சிலருக்காக சொல்லப்பட்டது.

எனக்கும் இன்ஜினியரிங் மிகவும் பிடிக்கும். நானும் இன்ஜினியரிங் படித்தவன்.
எனது நண்பன் ஒருவன் இஞ்ஜினியரிங் படிக்கும் போது கார் வாங்கினார். சில பிரச்சினைகளால் அந்த காரை விற்றான். அவரிடம் எப்படி கார் வாங்கினான் என்பது குறித்து கேட்டபோது, இதே கல்லூரியில் அட்மிஷன் போடும் புரோக்கராக வேலை பார்த்ததாக கூறினான் . அதை கதை கருவாக எடுத்துக் கொண்டு மற்ற விஷயங்களை சேர்த்து படமாக எடுத்தேன்.

கல்லூரி மாணவர் கதாபாத்திரம் என்றவுடன் என் நினைவுக்கு வந்தது ஜிவி சார். அதனாலேயே அவர் அந்த படத்தில் ஹீரோவாக நடித்தார்.கல்லூரி சம்பந்தப்பட்ட படம் என்பதால் இந்த கல்லூரி கலை விழாவில் அதைப் பற்றி பேசுவது மகிழ்ச்சி.

அடுத்ததாக ஜிவி சார் நடிக்கும் ஐங்கரன் படமும் கல்லூரி சம்பந்தப்பட்ட படம் தான். அந்த படத்தின் டிரைலரும் இங்கு திரையிட்டது பொருத்தமான ஒன்று. மாணவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் இவ்வாறு அவர் பேசினார்.

இவர்கள் இருவரையும் தொடர்ந்து ஐங்கரன் படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-ஜிவி பிரகாஷ்குமார் சாருடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஒரு கல்லூரி மாணவன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர் என்றால் அது ஜிவி பிரகாஷ் குமார் தான். ஒரு அறிவு சார்ந்த படத்தை எடுத்துள்ளோம்.

அதற்கு மாணவர்களாகிய உங்களின் ஆதரவு தேவை. வரும் மே மாதம் 5ஆம் தேதி படம் தியேட்டர்களில் வெளியாகிறது.
அதன் பிறகு மே மாத இறுதியில் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஐங்கரன் வெளியாக உள்ளது என்றார்.

இறுதியாக கல்லூரி விழா குழு சார்பில் மூவருக்கும் பொன்னாடை அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.

Music director GV Prakash recent speech at private college function

சிவாஜி கமல் ரஜினி உள்ளிட்டோருடன் நடித்த சக்ரவர்த்தி காலமானார்

சிவாஜி கமல் ரஜினி உள்ளிட்டோருடன் நடித்த சக்ரவர்த்தி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் 80 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகர் சக்ரவர்த்தி.

அவருக்கு தற்போது வயது 62. சிவாஜி, ரஜினி, கமல் என்று பல நாயகர்களுடன் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சக்ரவர்த்தி.

ரிஷி மூலம் படத்தில் சிவாஜியுடன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர் சினிமாவிலிருந்து விலகி மும்பையில் வசித்து வந்தார். சக்ரவர்த்தி சோனி ஸ்டார் ஸ்போர்ஸ் சேனலில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் இருந்து வந்தார்.

இன்று அதிகாலை மும்பையில் காலமானார்.

இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கிறது.

காலையில் மனைவி லலிதா அவரை எழுப்பியபோதுதான் அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

சக்ரவர்த்தி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருக்கிறார்.

அவருக்கு லலிதா என்ற மனைவியும், சசிகுமார், அஜய் குமார் என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.

சசிகுமார் மும்பை விப்ரோ கம்பெனியில் பணியாற்றுகிறார். அஜய்குமார் எம்.எஸ்ஸி படித்து வருகிறார்.

கண் மலர்களின் கண் மலர்களின் அழைப்பிதழ் என்ற ஹிட் பாடலில் ராதிகாவுடன் சக்ரவர்த்தி நடனம் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil actor Chakravrthy passed away due to heart attack

காதல் கலகலப்புடன் காதல் கவிதையாக உருவான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட ட்ரைலர்

காதல் கலகலப்புடன் காதல் கவிதையாக உருவான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ பட ட்ரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா இணைந்து நடிக்கும் “காத்து வாக்குல ரெண்டு காதல்” படத்தின் டிரெய்லர் ரசிகர்களின் ஆரவார வரவேற்புடன் இன்று வெளியானது.

2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் நட்சத்திர கூட்டணி இணைந்துள்ளதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தென்னிந்திய திரைத்துறையின் முதன்மை நாயகிகளாக வலம் வரும் நயன்தாரா மற்றும் சமந்தா முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று, இணையத்தில் வைரலாகி வருகிறது, முன்னதாக இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட டீசர் மற்றும் இசையமைப்பாளார் அனிருத் இசையில் வெளியான “டூ டூடூ டூ டூடூ” பாடல், ரெண்டு காதல், நான் பிழை போன்ற பாடல்கள் பல மில்லியன் பார்வைகள் குவித்து, சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான “டிப்பம் டப்பம்” சிங்கிள் பாடல் அனைவர் மனதை கவர்ந்த பாடலாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று வெளியான டிரெய்லர், பெரும் வரவேற்பை பெற்றதுடன், இணையமெங்கும் பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழ் திரையுலகில் மாறுபட்ட களங்களில் தரமான படைப்புகளை வழங்கி வரும், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வழங்க, ‘நானும் ரௌடி தான்’ படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் மீண்டும் ரொமாண்டிக் காமெடி ஜானரில் இயக்கியுள்ள படம் “காத்து வாக்குல ரெண்டு காதல்”.

தமிழ் சினிமாவில் காதல் காமெடி படங்கள் இல்லையெனும் ஏக்கத்தை போக்கும் படி, நீண்ட இடைவேளைக்கு பிறகு, அழகான காதல் கவிதையாக, மனம் விட்டு சிரித்து மகிழும் இனிமையான திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளதை டிரெய்லர் நிரூபித்துள்ளது.

இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.

இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க, S.R.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

கலை இயக்கத்தை ஸ்வேதா செபாஸ்டியன் கவனிக்க, ஸ்டண்ட் பணிகளை திலீப் சுப்பராயன் செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இப்படத்தை, தயாரிப்பாளர் S.S. லலித்குமார் தயாரித்துள்ளார்.

இப்படம் வரும் 2022 ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தினை ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

Trailer link : https://www.filmistreet.com/video/kaathuvaakula-rendu-kadhal-trailer/

The trailer for Vijay Sethupathi’s Kaathuvaakula Rendu Kaadhal is here

இளையராஜாவே பாடல்கள் எழுதி இசையமைத்த ‘அக்கா குருவி’யை பிடித்த பிவிஆர்

இளையராஜாவே பாடல்கள் எழுதி இசையமைத்த ‘அக்கா குருவி’யை பிடித்த பிவிஆர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவு தொழிற்சாலை இணைந்து தயாரிக்க, இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள குழந்தைகள் திரைப்படம் ‘அக்கா குருவி’.

இசைஞானி இளையராஜா இசையில் தமிழ் சினிமாவின் தரமான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தை,
பிரபல தியேட்டர் நிறுவனமான PVR பிக்சர்ஸ் நிறுவனம் மே 6 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

உலகப்புகழ் பெற்ற திரைப்படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் அதிகாரப்பூர்வ மறுபதிப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் அண்ணன் தங்கை என இரு குழந்தைகள், இவர்களுக்கிடையே ஒரு ‘ஷீ’ –
இதை, மனதை உலுக்கும் அற்புத படைப்பாக , உயிர், மிருகம் போன்ற படங்களை இயக்கிய சாமி புதிய முயற்சியாக உருவாகியுள்ளார்.

இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெறுகிறது. மூன்று பாடல்களையும் இளையராஜாவே எழுதியுள்ளார்.

மோடிஜி பற்றி இளையராஜா எழுதியதில் என்ன தவறு?.. – இசையமைப்பாளர் தினா

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறுபதிப்பான அக்கா குருவியை அதன் ஒரிஜினல் கெடாமல் படமாக்கியுள்ளார் இயக்குநர் சாமி.

இரண்டு குழந்தைகள், அப்பா அம்மா இவர்களுடைய உணர்ச்சிகளின் தாக்கம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும்.

இந்த காட்சிகளுக்கு பின்னணி இசையில் பல உணர்ச்சிகரமான இடங்களில் இளையராஜாவின் பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது ரசிகர்களுக்கு ஒரு பேருணர்வை தரும்.

இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களான 11 வயது அண்ணன், 7 வயது தங்கை கதாபாத்திரங்களுக்காக 200க்கும் மேற்பட்டவர்களை தேர்வு நடத்தி இறுதியாக மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

மேலும் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இப்படத்தினை பார்த்த PVR பிக்சர்ஸ் குழுவினர், உடனடியாக படத்தை வெளியிட சம்மதித்து, குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டுமென கோடை கொண்டாட்டமாக, மே 6ம் தேதி இப்படத்தை வெளியிடுகிறார்கள்.

ஏப்ரல் 25 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு கோலாகலமாக நடைபெறவுள்ளது.

PVR Pictures Set to release the film Akka Kuruvi directed by Saamy

நீதி தேடி அலையும் கீர்த்தியோடு இணைந்த செல்வராகவன்.; மே 6ல் ‘சாணிக்காயிதம்’

நீதி தேடி அலையும் கீர்த்தியோடு இணைந்த செல்வராகவன்.; மே 6ல் ‘சாணிக்காயிதம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘சாணிக்காயிதம்’ படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியாவிலும், மற்றும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் மே மாதம் 6 ஆம் தேதி வெளியாகிறது.

ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான பழிவாங்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமான “சாணிக்காயிதம்” திரைப்படத்தின் உலகளாவிய திரை வெளியீட்டை ப்ரைம் வீடியோ தளம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஸ்க்ரீன் சீன் மீடியா நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மற்றும் செல்வராகவன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

பொன்னி (கீர்த்தி சுரேஷ்) மற்றும் அவளது குடும்பத்தினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது, தலைமுறை தலைமுறையாக அக்குடும்பத்திற்கு நீடித்து வந்த சாபம் உண்மையாக மாறத்தொடங்கும்போது, விளம்பர முன்னோட்ட காட்சிகளில் காணப்படுவது போல அவர் ஒரு கசப்பான கடந்த காலத்தை தன்னோடு பகிர்ந்து கொண்ட சங்கையாவோடு (செல்வராகவன்) இணைந்து எதிரிகளைப் பழிக்குப் பழி வாங்க ஆரம்பிக்கிறார் இதனை சுற்றியே இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்படம் குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறுகையில்…

“சாணிக்காயிதம் மனதை உலுக்கும் ஒரு அழுத்தமான படைப்பு; மனதைக்கொள்ளை கொள்ளும் வகையிலான கதை சொல்லும் பாங்கு மற்றும் அற்புதமான நடிப்பு ஆகியவற்றை கொண்டுள்ள இந்தத் திரைப்படம் அதிரடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களை இறுதிவரை கட்டிப்போடும்”.

“வழக்கமான கதைகளை வழக்கத்திற்கு மாறாக ரத்தமும் சதையுமாக மயிர்க்கூச்செறியும் வகையில் மாறுபட்ட வடிவங்களில் சொல்வதில் நான் மிகவும் உற்சாகம் அடைகிறேன்.

பழிக்குப் பழி வாங்கத்துடிக்கும் கருப்பொருளோடு பின்னிப்பிணைந்த ஒரு பரபரப்பான அதிரடியான கதைக்களம் இப்படத்தில் அமைந்துள்ளது. பழிவாங்கும் குறிக்கோளோடு பயணப்படும் ஒரு பெண்ணின் கதை இது.”

“ ஒவ்வொரு வகையான கதைக்கும் ஒவ்வொரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

உலகெங்கிலும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கு சாணிக்காயிதத்தை கொண்டு செல்வதில் நான் பரவசமடைந்திருக்கிறேன்”.

திரைப்படத்தின் கிரியேட்டிவ் ப்ரொட்யூசர் சித்தார்த் ரவிபதி கூறுகையில்..

“சாணிக்காயிதம் இதயத்தைக் கொள்ளை கொள்ளும் அதே அளவில் இதயத்தை கசக்கிப் பிழியும் ஒரு கதை. நீதியைத் தேடி அலையும் ஒரு பெண்ணின் வாழ்வை கண்முன் கொண்டுவருவதில் அருண் மாதேஸ்வரன் அற்புதமாக செயல்பட்டிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் இந்தக் கதைக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் எல்லைகளைக் கடந்த மிகச்சிறப்பான அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்”.

அனைத்து மொழிகளிலும் மே 6 ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்தத்திரைப்படத்தைக் காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்”

டீசர் இணைப்பு : https://www.filmistreet.com/video/saani-kaayidham-official-tamil-teaser

ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் கொண்ட பிரைம் வீடியோ வரிசையில் சாணிக்காயிதம் திரைப்படம் இணையவிருக்கிறது. அதில் இந்திய படங்களான Sharmaji Namkeen, Gehraiyaan,Shershaah, Sardar Udham, Jai Bhim,GulaboSitabo, Shakuntala Devi, Coolie No. 1, Durgamati, Chhalaang, SooraraiPottru,V, CU Soon, Nishabhdam, Halal Love Story, Middle Class Melodies, Maara, BheemasenaNalamaharaja, Mane No. 13, Penguin, Law, SufiyumSujatayum, PonmagalVandhal, French Biriyani மற்றும் பல படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் நம்பர் ஒன் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ மேலும் சில இந்தியாவில் தயாரிக்க பட்ட அமேசான் ஒரிஜினல் தொடர்களான Bestseller, Inside Edge Season 3,Mumbai Diaries, The Family Man, Comicstaan Semma Comedy Pa,Breathe: Into The Shadows, Bandish Bandits, Paatal Lok, Mirzapur Season 1 & 2, The Forgotten Army – AzaadiKeLiye, Sons of the Soil: Jaipur Pink Panthers, Four More Shots Please, Made In Heaven, மற்றும் Inside Edge ஆகியவற்றையும் வழங்குகிறது.

விருது வென்ற மற்றும் விமர்சன ரீதியில் பாராட்டுகளை பெற்ற உலகளாவிய அமேசான் தொடர்களான Borat Subsequent Moviefilm, The Wheel of Time, Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag, மற்றும் The Marvelous Mrs. Maisel போன்றவற்றையும் வழங்குகிறது, மேலும் நேரத்தைச் செலவிடுவதற்கும், எப்போது, எங்கு வேண்டுமானாலும் பார்ப்பதற்குமான ஏராளமான தேர்வுகளை வழங்குவதில் முழு கவனத்துடன் பிரைம் வீடியோ இயங்கி வருகிறது. இவை அனைத்தும் அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும். இந்த சேவைகள் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வழங்கபட்டு வருகிறது.

பிரைம் உறுப்பினர்கள், சாணிக்காயிதம் திரைப்படத்தை எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், ஸ்மார்ட் டீவி, மொபைல் போன்கள், Fire TV, Fire TV stick, Fire tablets, Apple TV மற்றும் ஏனைய இயந்திரங்கள் வழியாக காணலாம். பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் போன் மற்றும் டேப்ளடில் எபிசோடுகளை டவுட்லோடு செய்து எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும் ஆப்லைனில், கூடுதல் கட்டணமின்றி கண்டுகளிக்கலாம்.
பிரைம் வீடியோ இந்தியாவில், கூடுதல் கட்டணம் ஏதுமின்றி பிரைம் உறுப்பினர் சேர்கை வருடத்திற்கு வெறும் ₹1499- ல் கிடைக்கிறது, புது பயனாளர்கள் மேலும் தகவலுக்கு www.amazon.in/prime – யை பார்க்கலாம்.

Prime Video Announces the Worldwide Premiere of Keerthy Suresh and Selvaraghavan Starrer Saani Kaayidham

More Articles
Follows