24 Carat Gold iPhone-ஐ தவறவிட்ட நடிகை வைத்த கோரிக்கை

24 Carat Gold iPhone-ஐ தவறவிட்ட நடிகை வைத்த கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சிங் சாப் தி கிரேட்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஊர்வசி ரவுத்தேலா.

அதன்பின்னர் பெங்காலி, இந்தி, கன்னட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தமிழில் லெஜண்ட் சரவணனின் ‘தி லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்து ஊர்வசி ரவுத்தேலா தமிழும் பிரபலமடைந்தார்.

தற்போது பல இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

ஊர்வசி ரவுத்தேலா அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை கூறி ட்ரோல்களில் மாட்டிக் கொள்வார்.

அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இரு தினங்களுக்கு முன்பு இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண திரைப்பிரபலங்கள் பலர் வந்தனர்.

இதில் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவும் பார்வையாளராக வந்திருந்தார்.

அப்போது ஊர்வசி ரவுத்தேலா தனது 24 கேரட் கோல்டு ஐ போனை (i phone) தவறவிட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக ஊர்வசி, அகமதாபாத் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

இந்த புகார் மனுவை ஊர்வசி ரவுத்தேலா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், யாராவது தனது ஐபோனை (i phone) பார்த்தால் தன்னை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊர்வசி ரவுத்தேலா

urvashi Rautela lost her 24 carat real gold iPhone in India vs Pakistan match

வால்மீகி ராமாயணத்தில் சீதையாக சாய் பல்லவி.; ராமர் யார் தெரியுமா.?

வால்மீகி ராமாயணத்தில் சீதையாக சாய் பல்லவி.; ராமர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராமாயணம் கதையை மையமாக வைத்து ஏற்கனவே ‘ஸ்ரீ ராமராஜ்ஜியம்’, ‘ஆதிபுருஷ்’ உள்ளிட்ட பல படங்கள் வந்துள்ளன.

தற்போது இன்னொரு ராமாயண கதை உள்ள படம் தயாராக உள்ளது.

இந்தப்படத்தை நித்திஷ் திவாரி இயக்குகிறார்.

இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய்பல்லவியும் நடிக்கின்றனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகஉள்ளது.

இந்நிலையில், சீதையாக நடிப்பது குறித்து சாய்பல்லவி நெகிழ்ச்சியோடு கூறும்போது, “இயக்குனர் நித்திஷ் திவாரி எனக்குள் சீதையை எப்படி பார்த்தார் என்ற உணர்வு மகிழ்ச்சியை தருகிறது. இது நிஜமாகவே அரிதாகக் கிடைக்கும் அதிர்ஷ்டம். படப்பிடிப்புக்கு எப்போது அழைப்பார்கள் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

இது ஒரு சவாலான வேடம். புகழ்பெற்ற நடிகைகள் நடித்த கதாபாத்திரம் இது. அவர்கள் நடித்ததில் 10 சதவீதம் நடித்தாலும் நன்றாக செய்த மாதிரிதான். விரைவில் கதையை கேட்க மும்பை செல்கிறேன். ஏற்கனவே இந்திய சினிமாவில் பல ராமாயண படங்கள் வந்துள்ளன. ஆனால் வால்மீகி ராமாயணத்தை யாரும் பரிபூரணமாக காட்டவில்லை. இந்தப்படம் அந்த குறையை தீர்க்கும்”என்றார்.

 ரன்பீர் கபூர்

ranbir kapoor and Sai Pallavi playing in Ramayana

பிஆர்ஓ யூனியன் தேர்தல் : விஜயமுரளி – ஜான் – யுவராஜ் உள்ளிட்டோர் வெற்றி

பிஆர்ஓ யூனியன் தேர்தல் : விஜயமுரளி – ஜான் – யுவராஜ் உள்ளிட்டோர் வெற்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்ச் சினிமாவில் ‘பி.ஆர்.ஓ.க்கள்’ என்றழைக்கப்படும் பத்திரிகை தொடர்பாளர்களின் சங்கமான ‘தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க’த்திற்கு 2023-2025-ம் வருடங்களுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்குத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததால், புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

தலைவர், செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் தலைவர் பதவிக்கு விஜய முரளியும், செயலாளர் பதவிக்கு ஜானும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மற்றைய பதவிகளுக்குப் போட்டி இருந்ததால் அதற்கான வாக்குப் பதிவு இன்று காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரையிலும் சாலிகிராமம் பிரசாத் 70 எம்.எம். தியேட்டரில் நடைபெற்றது.

தேர்தல் அதிகாரியாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.சங்கர் பணியாற்றினார்.

இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 82 வாக்காளர்களில், 80 பேர் தங்களது வாக்கினைப் பதிவு செய்தார்கள்.

2 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்ததும் வாக்குப் பெட்டி பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்பு மதிய உணவு இடைவேளைக்குப் பின்பு 3 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

முதலில் பொருளாளருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட யுவராஜ், 54 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட குமரேசன் 26 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

பிஆர்ஓ யூனியன் தேர்தல்

துணைத் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட்ட கோவிந்தராஜ் 45 வாக்குகளையும், வி.கே.சுந்தர் 44 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர். எம்.பி.ஆனந்த் 34 வாக்குகளையும், புவன் 28 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தனர்.

இணைச் செயலாளர்கள் பதவிக்குப் போட்டியிட்டவர்களில் கே.எஸ்.கே.செல்வக்குமார் 41 வாக்குகளையும், வெங்கட் 40 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர். ஆர்.ராமானுஜம் 25 வாக்குகளையும், என்.தர்மதுரை 23 வாக்குகளையும், என்.கணேஷ்குமார் 23 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தனர்.

செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டவர்களில், கிளாமர் சத்யா 72 வாக்குகளையும், ஜி.பாலன் 66 வாக்குகளையும், என்.சரவணன் 64 வாக்குகளையும், ஜெ.சுரேஷ்குமார் 62 வாக்குகளையும், மதுரை செல்வம் 61 வாக்குகளையும், வி.பி.மணி 58 வாக்குகளையும், எஸ்.செல்வரகு 56 வாக்குகளையும், வி.எம்.ஆறுமுகம் 53 வாக்குகளையும், முத்துராமலிங்கன் 49 வாக்குகளையும், பெற்று வெற்றி பெற்றுள்ளனர். டி.நித்திஷ் ராம் 48 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்துள்ளார்.

Tamil Cinema Pro Union Election Result 2023 – 2025

—-

(சினிமா பி.ஆர்.ஓ. யூனியன்) தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியனின் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான தேர்தல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இதில் என். விஜயமுரளி தலைவராகவும், ஆ.. ஜான் செயலாளராகவும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.

பொருளாளராக பி.யுவராஜ் துணைத்தலைவர்களாக கோவிந்தராஜ், வி.கே.சுந்தரும் இணைச்செயலாளர்களாக கே.செல்வகுமார், வெங்கட் இருவரும் வெற்றிபெற்றுள்ளனர். செயற்குழு உறுப்பினர்களாக ஆறுமுகம், பாலன், கிளாமர் சத்யா, வி. பி. மணி, மதுரை ஆர். செல்வம், முத்துராமலிங்கம், சரவணன், செல்வரகு, சுரேஷ்குமார் ஆகிய ஒன்பது பேர் தேர்வாகி உள்ளனர்.

தேர்தல் அதிகாரியாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சங்கர் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்தார்.

பிஆர்ஓ யூனியன் தேர்தல்

அன்புச்செழியன் தயாரிப்பில் சந்தானம் படத்தின் டைட்டில் அப்டேட்

அன்புச்செழியன் தயாரிப்பில் சந்தானம் படத்தின் டைட்டில் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், ‘வெள்ளைக்கார துரை’, ‘தங்கமகன்’ ‘மருது’, ‘ஆண்டவன் கட்டளை’, உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.

அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது.

மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர்.

இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சந்தானம்

பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

D. இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர்.

ஒளிப்பதிவு – ஓம் நாராயண் எடிட்டிங் – எம். தியாகராஜன்
கலை – எம். சக்தி வெங்கட்ராஜ் ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்.

பிரம்மாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் பிருந்தா – பாபா பாஸ்கர்.

சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

முழுவீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

கதையம் சத்தோடு நகைச்சுவை கலந்த கமர்ஷியல் பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தை ஆனந்த் நாராயண் இயக்குகிறார்.

தயாரிப்பு : கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன்

சந்தானம்

Anbuchezhian Production No 5 starring Santhanam

தீபாவளி ரேசில் மோதும் கார்த்தி Vs லாரன்ஸ் – சூர்யா Vs விக்ரம்பிரபு

தீபாவளி ரேசில் மோதும் கார்த்தி Vs லாரன்ஸ் – சூர்யா Vs விக்ரம்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ் சினிமாவில் பல தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களின் ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜப்பான்’ மற்றும் லாரன்ஸ் & எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உள்ளிட்ட படங்கள் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த தீபாவளி மோதலில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘ரெய்டு’ படமும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு…

‘டாணாக்காரன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்ற நடிகர் விக்ரம் பிரபு அடுத்து வரவிருக்கும் தனது ‘ரெய்டு’ படம் மூலம் இன்னும் அதிக அளவிலான பார்வையாளர்களைக் கவர உள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

சமீப காலமாக வெளியாகியுள்ள விக்ரம் பிரபுவின் படங்கள் பாராட்டுகளைப் பெற்று வருவதால் அவரது நட்சத்திர அந்தஸ்து மேலும் உயர்ந்துள்ளது.

இது ’ரெய்டு’ படத்திற்குமான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், விக்ரம் பிரபுவின் ஸ்டைலான தோற்றத்தாலும், நேர்த்தியான டீசராலும் இப்படம் ஏற்கனவே அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

குடும்ப பார்வையாளர்கள் மற்றும் சினிமா விரும்பிகளுக்கு ஏற்ற வகையில், அனைத்தும் இந்தப் படத்தில் இருப்பதால் நிச்சயம் தீபாவளி விடுமுறைக்கு இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

இருக்கை நுனியில் அமரும்படியான ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக ‘ரெய்டு’ உருவாகியுள்ளது.

இந்தப் படத்தை கார்த்தி இயக்கி இருக்க, எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே @ மணிகண்ணன் ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர். ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார்.

இந்த படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கதிரவன் ஒளிப்பதிவும், மணிமாறன் படத்தொகுப்பும், கே.கணேஷ் ஆக்‌ஷன் காட்சிகளையும் கவனித்திருக்க இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

This Year Diwali Release Movie list here

ஆண்ட்ராய்டு டிவி திருட்டு.. கண்டுக்காத காவல்துறை..; நடவடிக்கை எடுத்த விஷால்

ஆண்ட்ராய்டு டிவி திருட்டு.. கண்டுக்காத காவல்துறை..; நடவடிக்கை எடுத்த விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆகஸ்ட் மாதம் நடிகர் விஷால் அவர்களின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட வாரியாக ஒன்றியம், நகரம் பகுதி மற்றும் மற்ற மாநிலங்களான பாண்டிச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, கேரளா மற்றும் மும்பை ஆகிய இடங்களிலும் உள்ள மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள் நடிகர் விஷால் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சியாக ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகள் இல்லம், மாணவ, மாணவியர்கள் மற்றும் மக்களுக்கு பயன்பெறும் வகையில் நலத்திட்ட, நற்பணி விழாக்களை ஏற்பாடு செய்து நடத்தினார்கள்.

அதன் அடிப்படையில் மத்திய சென்னை மாவட்டம் புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு A.I.W.C உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு நல திட்ட நற்பணி விழா நடைபெற்ற போது. அப்பள்ளியின் நிர்வாகத்தின் கோரிக்கையாக நடிகர் விஷால் அவர்களுக்கு பள்ளி மாணவ, மாணவியர்கள் தொலைநோக்கு பாடத்திட்டங்களை கற்பதற்கு தொலைக்காட்சி (Android TV) தேவைப்படுகிறது.

ஏற்கனவே எங்கள் பள்ளியில் செயல் பட்டு வந்த தொலைக்காட்சி (Android TV) திருடப்பட்ட நிலையில் அருகில் உள்ள காவல் துறையில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை.

அரசு தரப்பிலும் எந்த பொறுப்பும் இல்லை, எனவே உங்களுடைய தேவி அறக்கட்டளை சார்பில் தொலைக்காட்சி (Android TV) வேண்டி கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அக்கோரிக்கை நடிகர் விஷால் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று உடனே நடிகர் விஷால் அவர்கள் அப்பள்ளிக்கு பெரிய தொலைக்காட்சி (Android TV) வழங்கியுள்ளார்.

பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை நிறைவேற்றிய நடிகர் விஷால் அவர்களுக்கு ஆசிரியர் பெரும்மக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் வாழ்த்து தெரிவிப்பதுடன்,

நடிகர் விஷால் அவர்களுக்கு அப்பள்ளி மாணவ, மாணவியர்கள் அவர்களால் தயாரிக்கப்பட்ட கை வண்ண பொருட்களை வழங்கியதை பெற்றுக்கொண்ட நடிகர் விஷால் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து காணொலி பதிவு அனுப்பியும் உள்ளார்.

Actor Vishal help to Taminadu Govt Schools

More Articles
Follows