தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1990-களில் பிரம்மாண்டமான பட தயாரிப்பாளர் என்றால் கே.டி.குஞ்சுமோன் அவர்களை சொல்லலாம்.
ஜென்டில்மேன், காதலன், காதல் தேசம் உள்ளிட்ட பல பிரம்மாண்ட படங்களை தயாரித்திருந்தார். சினிமா தியேட்டர்களில் ஒரு தயாரிப்பாளருக்கே கட் அவுட் வைத்தது இவர்தான்.
கடந்த 20 வருடங்களாக பிரம்மாண்ட படங்களை தயாரிக்காமல் இருந்து வந்த அவர் தற்போது ‘ஜென்டில்மேன் 2’ என்ற படத்தை தயாரிக்கிறார்.
இந்த படத்தை கோகுல் கிருஷ்ணா இயக்க கீரவாணி இசையமைக்க பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.
இந்த படத்தில் பிரம்மாண்ட தொடக்க விழா ஆகஸ்ட் 19ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் ஆஸ்கார் விருது வென்ற கீரவாணியை பாராட்டி கவிஞர் வைரமுத்து கவிதை எழுதி இருக்கிறார்.
அந்த கவிதை இதோ….
Mega Producer @KT_Kunjumon #Gentleman2Launch விழாவில்
ஆஸ்கர்-நேஷ்னல் அவார்ட் வின்னர் இசையமைப்பாளர் @mmkeeravaani யை பாராட்டி @Vairamuthu எழுதிய வைர வரிகள்…
“கீரவாணி கீரவாணி
இந்திய இசையின் கீர்த்தியே நீ!
கீரவாணி கீரவாணி
சுந்தரத் தெலுங்கின் மூர்த்தியே நீ!
ஏழு ராகங்கள் கண்டவனே
ஏழு கண்டங்கள் வென்றவனே
தேசியம் வாழ்த்தும் திராவிடன் நீ
ஆசியா போற்றும் அதிசயம் நீ
தமிழில் முதல்படம் வானமே எல்லை – நீ
வாங்கும் புகழுக்கு வானமே எல்லை
பாகுபலிபோல் ஒன்று காணவே இல்லை
RRR உனது திறமைக்கு எல்லை
உன்
பாட்டணி வாழ்க
கூட்டணி வெல்க
பசைக்கு ஒருவன் ‘கே.டி.கே’
இசைக்கு ஒருவன் ‘எம்.எம்.கே’
ஜென்டில்மேன் – 2 வெற்றிக்’கே’..”
Vairamuthu praises Oscar Award winner MM Keeravaani