மீண்டும் மீண்டும் இணையும் சிம்பு-ஜோதிகா; இது 4வது முறை!

Simbus guest role in Jyothika Kaatrin Mozhi movieசிம்பு இயக்கி நடித்த மன்மதன் படத்தில் நாயகியாக ஜோதிகா நடித்திருந்தார். இதனையடுத்து சரவணா என்ற படத்திற்காவும் இந்த ஜோடி இணைந்து நடித்தது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திலும் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜோதிகா நடித்து வரும் ‘காற்றின் மொழி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் சிம்பு.

இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த படப்பிடிப்பின் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘காற்றின் மொழி’ படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார்.

இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார்.

இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `தும்ஹரி சூளு’ படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது.

Simbus guest role in Jyothika Kaatrin Mozhi movie

Overall Rating : Not available

Related News

தனஞ்செயன் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் திரைக்கு…
...Read More

Latest Post