சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக்கும் *காலா* ரஞ்சித்

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக்கும் *காலா* ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Silk Smitha biopic Web Series will be produced by Ranjithசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா படங்களை இயக்கியவர் ரஞ்சித்.

இவர் பரியேறும் பெருமாள் என்ற படத்தையும் தற்போது தயாரித்து வருகிறார்.

நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது வெப் சீரிஸ் படங்களை தயாரிக்க முன் வந்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன், மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற ஹிந்தி படம் வெளியானது.

இதில் சில்க் ஸ்மிதாவாக நடித்த வித்யாபாலன், தேசிய விருது பெற்றார்.

இந்நிலையில் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பில், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை வெப்சீரிஸாக தயாரிக்க உள்ளாராம் ரஞ்சித்.

இதற்கான முதற்கட்ட வேலைகளை அவர் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Silk Smitha biopic Web Series will be produced by Ranjith

அனந்த் நாக்-அஞ்சுகுரியனின் காதலைப் பேசும் *ஜுலை காற்றில்….*

அனந்த் நாக்-அஞ்சுகுரியனின் காதலைப் பேசும் *ஜுலை காற்றில்….*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

July Kaatril is a film on relationships with a differenceகாவ்யா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சரவணன் பழனியப்பன் தயாரிக்கும் முதல் திரைப்படம் ‘ஜுலை காற்றில்…’.

இந்த படத்தில் அனந்த் நாக், அஞ்சுகுரியன், சம்யுக்தா மேனன், சதீஷ், பலோமா மோனப்பா என பலர் நடிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு கதை திரைக்கதை அமைத்து இயக்குநராக அறிமுகமாகிறார் கே சி சுந்தரம்.

இவர் மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்க, டிமேல் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

அனுசரண் படத்தொகுப்பை கவனிக்க, ஜெயக்குமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

நா முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, ரோஹிணி மற்றும் சௌந்தரராஜன் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். விஷ்வகிரண் நம்பி மற்றும் ஸ்ரீசெல்வி ஆகியோர் நடனம் அமைத்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது…

‘இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் காதல் பற்றிய பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் இளமையில் ஏற்படும் காதல் தொடர்பான உறவுகளுக்குள் பிரிவையும் எதிர்கொள்கிறார்கள்.

புதிய உறவையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். காதலர்கள் தங்களுக்குள் ஏற்படும் விரிசலையும், உரசலையும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை சுவராசியமாக தயாராகியிருக்கிறது ‘ஜுலை காற்றில்’.

இந்த படத்தில் நேரம், பிரேமம், அமர காவியம், வெற்றிவேல் ஆகிய படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்த அனந்த நாக், கதையின் நாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகிகளாக அஞ்சுகுரியன் மற்றும் சம்யுக்தா மேனன் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள்.

இதன் படபிடிப்பை சென்னை, கோத்தகிரி, இலங்கை மற்றும் போர்க்சுகல் ஆகிய இடங்களில் நடத்தியிருக்கிறோம். விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை வெளியிடவிருக்கிறோம்.’ என்றார்.

படத்தில் நடித்திருக்கும் நடிகை அஞ்சுகுரியன் அண்மையில் வெளியான சென்னை டூ சிங்கப்பூர் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் என்பதும், மற்றொரு நடிகையான சம்யுக்தா மேனன் இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் கே சி சுந்தரம் மறைந்த இயக்குநர் ஜீவாவின் இயக்கத்தில் உருவான ‘உன்னாலே உன்னாலே ’ மற்றும் ‘தாம் தூம் ’ ஆகிய படங்களில் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார்.

காதல் கதைகளை ரசிகர்கள் விரும்பும் வகையில் சொல்வதில் வல்லவரான ஜீவாவின் உதவியாளர் என்பதால், அவரது இயக்கத்தில் தயாராகும் ‘ஜுலை காற்றில்..’ படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

July Kaatril is a film on relationships with a difference

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மலையாளிகளுக்கு கமல்-விஷால்-பிரகாஷ்ராஜ் நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மலையாளிகளுக்கு கமல்-விஷால்-பிரகாஷ்ராஜ் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal PrakashRaj and Vishal donates to Kerala CM Distress Relief Fundகடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலம் வெள்ள பெருக்காலும் மலை, மண் சரிவினாலும் பாதிக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை மிகவும் துயர்த்துக்குள்ளாகியுள்ளது.

வரலாறு காணாத இயற்கை சீற்றத்தை சந்தித்து வரும் அம்மாநில மக்களுக்கு தமிழ் திரை உலகம் நேசக்கரம் கொடுத்து உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி நடிகை ரோஹிணி ஆகியோர் ஏற்கனவே நிதி உதவிகள் அளித்துள்ளனர்.

கமல் 25 லட்சமும், சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சமும், நடிகர் பிரகாஷ்ராஜ் 5 லட்சமும், நடிகை ரோகினி 2 லட்சமும் இதுவரை கொடுத்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் 5 லட்சம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் மதுரையில் படப்பிடிப்பில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும்,நடிகர் சங்க பொதுசெயலாளருமான நடிகர் விஷால் கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குகிறார்.

மேலும் அவர் திரைத்துறையினரிடமும், ரசிகர்களிடமும்,மக்களிடமும் இயற்கையின் சோதனைகளை சந்தித்து துயரபட்டுக்கொண்டிருக்கும் நமது சகோதரர்களான கேரளா மாநில மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Kamal PrakashRaj and Vishal donates to Kerala CM Distress Relief Fund

*ஆடை*க்காக அமலா பாலுடன் இணையும் மேயாத மான் இயக்குனர்

*ஆடை*க்காக அமலா பாலுடன் இணையும் மேயாத மான் இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Amala Paul teams up with Meyaadha Maan director Rathnakumar for AADAIதிரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற மேயாத மான் படத்தை இயக்கியவர் ரத்னகுமார்.

தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர் அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார்.

இதில் அமலா பால் நடிக்கிறார். உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலா பால் மற்ற பல படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக்கொண்டுள்ளாராம் .

பொதுவாகவே இது மாதிரியான கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியன்ட் , பெண்கள் முன்னேற்றத்திற்க்கான படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள்.

ஆனால் இந்த படம் மேற் சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான/ பரபரப்பான கதையின் திரை வடிவம் என்று சொல்லப்படுகிறது.

“ஆடை” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மற்ற கதா பாத்திரங்களுக்கான தேர்வு நடை பெற்று வருகிறது.

விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Amala Paul teams up with Meyaadha Maan director Rathnakumar for AADAI

ஒரு லட்சம் நிவாரண பொருட்களுடன் கேரளா சென்ற அபிசரவணன்

ஒரு லட்சம் நிவாரண பொருட்களுடன் கேரளா சென்ற அபிசரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Abi Saravanan helping Kerala peoples for those who affected in Floodகன மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் கேரளா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு வாசல்களை இழந்து, உடமைகளை பறிகொடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஆங்காங்கே முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்களுக்கான உதவிக்கரங்கள் நீள தொடங்கியிருக்கின்றன.

அந்தவகையில் ‘கேரளா நாட்டிளம் பெண்களுடனே’ புகழ் நடிகர் அபிசரவணன் கேரளாவில் வயநாடு, குட்டநாடு பகுதியில் தனது சகாக்களுடன் நிவாரண பணிகளில் ஈடுபட்டார்.

மக்களுக்கான போராட்டமாக இருந்தாலும் சரி, மக்களை பாதிக்கும் பேரிடர் சமயமாக இருந்தாலும் சரி, அங்கே முதல் ஆளாக காலத்தில் இறங்கி தனது பங்களிப்பை தரக்கூடியவர் தான் அபிசரவணன்..

நிவாரண பணிகளுக்காக கேரளா நோக்கி செல்லும்போதே இங்கிருந்து போகும் வழியில் ஈரோட்டில் போர்வைகள், அத்தியாவசிய ஆடைகள், குழந்தைகளுக்கான உடுப்புகள், சமையல் பொருட்கள், மருந்து மாத்திரைகள் என சுமார் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களையும் வாங்கிக்கொண்டே கேரளாவுக்குள் நுழைந்துள்ளார் அபிசரவணன்.

வயநாடு பகுதி எம்.எல்.ஏவை தொடர்புகொண்டு, அங்கு கலெக்டர் வழிகாட்டுதலின்படி அங்குள்ள சில ந(ண்)பர்கள் சிலரை உதவிக்கு அழைத்துக்கொண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார் அபிசரவணன்.

அந்தவகையில் சுமார் 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளனர் அபிசரவணன் மற்றும் அவரது குழுவினர்,

இதன்மூலம் ஏழு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 2000 பேர்களுக்கு இவர்களது உதவி சென்று சேர்ந்துள்ளது.

உள் கிராமங்களுக்கு செல்லும் பாதைகளில் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் செல்வதால் சிறிய படகுகளின் மூலம் தங்களது நிவாரண உதவியை இவர்கள் தொடர்ந்துள்ளனர் .

இந்த முயற்சியில் அபிசரவணனுக்கு உதவியாக அகில இந்திய கிக் பாக்சிங் பிரசிடென்ட் கேசவ், திருமதி. சரண்யா மதன், ஆனந்த் மற்றும் ரகு ஆகியோர் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

Abi Saravanan helping Kerala peoples for those who affected in Flood

abi saravanan at kerala flood relief

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் விஜய்

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Biopic of Late Jayalalitha will be directed by Vijayதமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா.

தமிழக மக்களால் அம்மா என்று அன்பாக அழைக்கப்பட்ட இவர் கடந்த 2016ல் டிசம்பர் மாதம் முதல்வராக இருக்கும் போது மரணமடைந்தார்.

தற்போது இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகுகிறது.

83 world cup, என் டி ஆர் சுய சரிதை ஆகிய படங்களை தயாரிக்கும் Vibri மீடியா நிறுவனம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படத்தை தயாரிக்கிறது

ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் ஒரு பெண் அரசியல்வாதியாக அவர் சாதித்த சாதனைகள் ஏராளம்.

அவருடைய சுய சரிதையை படமாக்குவத்தில் மிகுந்த பெருமை கொள்வதாக கூறுகின்றனர் vibri மீடியா நிறுவனத்தினர்.

“டாக்டர் ஜெ ஜெயலலிதா மேடம் தேசிய அளவில் பிரசித்தி பெற்ற பிராந்திய தலைவர்களில் முக்கியமானவர்.உலகெங்கும் உள்ள பெண்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணம்.திரை துறையிலும்,அரசியலிலும் அவர் புரிந்த சாதனைகளுக்கு இந்த படத்தை சமர்பிக்கிறோம்.

அவர் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த படத்தை துவக்க இருக்கிறோம். அன்றே first look கூட வெளியிட இருக்கிறோம்.” என்கிறார் vibri மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிருந்தா பிரசாத்.

தமிழில் பல்வேறு வெற்றி படங்களை தந்த இயக்குனர் விஜய் இந்த படத்தை இயக்குகிறார்.

இவர் அஜித் நடித்த கிரீடம், விஜய் நடித்த தலைவா, விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் ‘தியா’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகிறது.

“எங்களது vibri நிறுவனத்துக்கு சுய சரிதைகளை படமாக்குவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு.

இந்த கதைக்கான pre production பணிகளில் இயக்குனர் விஜய் ஈடுபட்டு வருகிறார்” என்கிறாய் தயாரிப்பாளர் விஷ்ணு வர்தன் இந்தூரி.

தென்னிந்தியாவின் பிரதான நட்சத்திரங்களுடன், பிரபல பாலிவுட் நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடிக்க உள்ளனர்.

Vibri media நிறுவனத்தினருக்கு இந்த வருடம் முக்கியமான வருடமாகும். பல்வேறு வெற்றிகரமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரிப்ப்பதோடு, 83 உலக கோப்பை என்கிற ஹிந்தி படத்தையும் கபீர் கான் இயக்கத்தில், ரன்வீர் சிங் கபில்தேவ் வேடத்தில் நடிக்க தயாரிக்கும் இந்த நிறுவனம், “என் டி ஆர் சுய சரிதை” திரைப்படத்தை பாலகிருஷ்ணா நடிக்க, கிரிஷ் இயக்கத்தில தயாரிக்கிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

மேற்கூறிய அனைத்து படங்களையும் 2019 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டு படக்குழுவினர் உழைத்து வருகின்றனர்.

Biopic of Late Jayalalitha will be directed by Vijay

director vijay speech

More Articles
Follows