தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல நகைச்சுவை நடிகர்களான வி.கே.ராமசாமி மற்றும் நாகேஷ் இணைந்து நடித்த படம் ‘ருத்ர தாண்டவம்’.
கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த படம் வெளியானது.
கடவுள் சிவன் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும்? என்பதை அப்போதே சொன்ன படம் இது.
அண்மையில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படமும் இதே கதை தான்.
தற்போது “ருத்ர தாண்டவம் 2021” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்கவிருக்கிறார்.
இதில் வி.கே.ராமசாமி நடித்த சிவன் கேரக்டரில் வடிவேலுவை நடிக்க வைக்க இருந்தாராம் இயக்குனர்.
ஆனால் அது நிறைவேறாமல் போகவே, தற்போது சந்தானம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே விரைவில் இது தொடர்பான அறிவிப்பை எதிர்ப்பார்க்கலாம்..
Santhanam to act in Rudra Thandavam remake