கவர்ச்சி நடிகையுடன் கள்ளக்காதலில் அஜித்தின் மச்சான்

கவர்ச்சி நடிகையுடன் கள்ளக்காதலில் அஜித்தின் மச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ரிச்சர்ட் ரிஷி.

தமிழ், தெலுங்கு மற்றும் சில மலையாள, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், நடிகர் அஜித்தின் மச்சான் ஆவார்.

‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான ‘காதல் வைரஸ்’ மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதையடுத்து, மோகன் ஜி இயக்கிய ‘திரெளபதி’, ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார் ரிச்சர்ட்.

ரிச்சர்ட் ரிஷி

இந்த இரண்டு படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், நடிகர் ரிச்சர்ட் ரிஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

அதில், நடிகர் ரிச்சர்ட் நடிகை யாஷிகா ஆனந்த் முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை தொடர்ந்து யாஷிகா ஆனந்துடன் இருக்கும் புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தார்.

இதனால், இவர்களின் காதல் கதையை நடிகர் ரிச்சர்ட் உறுதிசெய்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

ரிச்சர்ட் ரிஷி

Yashika Anand in love with ajith’s brother in law Richard Rishi

‘சந்திரமுகி 2’ அப்டேட் : ராதிகாவுக்கு தங்க மோதிரம்.; முக்கிய வேடத்தில் கூல் சுரேஷ்

‘சந்திரமுகி 2’ அப்டேட் : ராதிகாவுக்கு தங்க மோதிரம்.; முக்கிய வேடத்தில் கூல் சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவை கலக்கிய சந்திரமுகி படத்தில் முதல் பாகத்தில் ரஜினி நடித்திருந்தார்.

ஆனால் அவர் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுக்கவே தற்போது லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கி வருகிறார்.

லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ராதிகா, வடிவேலு, லட்சுமிமேனன் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது போஸ்ட் ப்ரோக்ஷன் பணிகள் நடைபெற்ற வருகிறது.

மேலும் அவ்வப்போது இந்த படத்தில் இடம்பெறும் காட்சிகளின் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இத்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு செய்யும் காமெடி காட்சிகளும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றனது. அண்மையில் எனக்கு ரிஸ்க் எடுப்பதெல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி என்ற வீடியோவும் இணையத்தில் வெளியானது.

மேலும் நடிகை ராதிகாவுக்கு தங்க மோதிரத்தை லாரன்ஸ் பரிசளித்திருந்தார் அந்த தகவலையும் பகிர்ந்து இருந்தார் ராதிகா.

சமீபத்தில் லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் இருவரும் அரசர் அரசி உடையில் உள்ள புகைப்படம் வெளியாறது. இதனால் சந்திரமுகியின் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் இடம்பெறும் எனத் தெரிகிறது. எனவே வேட்டையன் சந்திரமுகியின் காதல் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெறும் என நம்பலாம்.

இந்த நிலையில் ‘சந்திரமுகி 2’ படத்தில் தான் இணைந்துள்ளதை நடிகர் கூல் சுரேஷ் அறிவித்துள்ளார்.

இயக்குனர் பி வாசு மற்றும் நாயகன் லாரன்ஸ் உடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 14ஆம் தேதி ‘சந்திரமுகி 2’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

cool suresh plays an important role in chandramukhi 2

விஜய்யின் ‘லியோ’ பட செட்டில் 2 வாரங்கள் பங்கேற்ற பிரபல நடிகரின் தம்பி

விஜய்யின் ‘லியோ’ பட செட்டில் 2 வாரங்கள் பங்கேற்ற பிரபல நடிகரின் தம்பி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1980களில் கே. பாலசந்தரின் ‘கல்யாண அகதிகள்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நாசர். தொடர்ந்து கமலின் ‘நாயகன்’ படம் மூலம் மிக பெரிய நடிகராக அவதாரம் எடுத்து தமிழ், தெலுங்கு மலையாளம் என நூற்றுகணக்கான படங்களில் நடித்து இன்று வரை திரை உலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

நாசருக்கு 3 தம்பிகள். அதில் ஒருவர் ஜவஹர். 1990களில் ஒளிப்பதிவாளர் அப்துல் ரெஹ்மானிடம் இதயம், கிழக்கு வாசல், சிங்காரவேலன் போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

அதன் பிறகு தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் பணி புரிந்ததோடு சொந்தமாக வியாபாரமும் செய்து வந்துள்ளார்.

சில வருடங்கள் முன்பு சென்னை திரும்பியவர் பட வாய்ப்புகளை தேடி தீவீரமாக அலைந்துள்ளார்.

அப்போது கிடைத்த வாய்ப்புகள் தான் ஜிவி 2 , பனிவிழும் மலர்வனம் போன்ற படங்கள்.

தற்போது விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க லோகேஷ் கனகராஜ் வாய்ப்பு அளித்ததை எண்ணி மிக மகிழ்ச்சி யோடு குறிப்பிட்டார்.

நான் என்ன கேரக்டர் பண்ணினேன்-னு சொல்ல கூடாது. இப்படத்துக்காக காஷ்மீரில் 40 நாட்கள் சென்று வந்து உள்ளேன். எனது Portion 15 நாட்கள் பட மாக்கப்பட்டது என் மகிழ்ச்சி பொங்ககூறினார் ஜவஹர்.

அண்ணன் நாசர் ஆரம்பகால கட்டங்களில் படங்களில் வில்லனாக நடித்து வந்தார். நீங்க எப்படி என கேட்டபோது.?

அப்படி எல்லாம் ஏதும் கிடையாது. கிடைக்கும் அனைத்து பாத்திரங்களையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

தற்போது செங்கல்பட்டு அருகே பாலூரில் மிக அழகான வீடு ஒன்று கட்டி வருவதையும் தெரிவித்தார்.

The famous actor’s younger brother participated in the sets of Vijay’s ‘Leo’ for 2 weeks

ஆண்களுடன் வேலை செய்வது எளிதான விஷயமல்ல – நடிகை சினேகா நாயர்

ஆண்களுடன் வேலை செய்வது எளிதான விஷயமல்ல – நடிகை சினேகா நாயர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா தன் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், சினேஹா நாயர், “MIC SET” ஸ்ரீராம், “AUTO” அண்ணாதுரை, தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் போன்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் மீனா சாப்ரியா எழுத்தில் உருவான “UNSTOPPABLE” புத்தகத்தின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் (28.05.2023) இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகை / தயாரிப்பாளர் சினேகா நாயர் பேசும்போது…

இங்கு பேசுவதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மீனாவுடன் பயணித்திருக்கிறேன். எங்கள் இருவருக்கும் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்துள்ளன. அது அனைத்தையும் நாங்கள் சமாளித்து இந்த உயரத்திற்கு வந்துள்ளோம்.

ஆண்களுடன் வேலை செய்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல, அதை பெண்கள் யாரும் தட்டிக்கழிக்க முடியாது.

இந்த விழாவுக்கு ஐஸ்வர்யா ராஜேஷை அழைக்கலாம் என்று மீனா சொன்னபோது, அவரை தவிர வேறு யாரும் சரியாக இருக்க முடியாது என்று கூறினேன் என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் பேசும்போது,

நான் குட் நைட் படம் ஆரம்பிக்கும் போது எங்களுக்கு ஆதரவளிக்க யாரும் முன்வரவில்லை. முதல் பார்வை வெளியான பின்பு மீனா சாப்ரியா மேடம் கொடுத்த ஆதரவு மறக்க முடியாத ஒன்று. அதற்கு நன்றி, என்றார்.

அதன் பின், மீனா சாப்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், மைக் செட் ஸ்ரீராம், யுவராஜ், சினேகா நாயர் அனைவரும் இணைந்து *“UNSTOPPABLE”* புத்தகத்தை வெளியிட்டனர்.

Its not easy to work with men says Actress Sneha

ராஜமுந்திரி பிச்சைக்காரர்களுக்கு ராஜமரியாதை அளித்த விஜய் ஆண்டனி.; நிஜத்திலும் ஹீரோதான்.!

ராஜமுந்திரி பிச்சைக்காரர்களுக்கு ராஜமரியாதை அளித்த விஜய் ஆண்டனி.; நிஜத்திலும் ஹீரோதான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் ஆண்டனி தயாரித்து இசையமைத்து இயக்கி எடிட்டிங் செய்து நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’.

இந்த படம் மே 12ஆம் தேதி வெளியானது.

இது ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் வேட்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

‘பிச்சைக்காரன் 2’ படத்தில் ஒரு காட்சியில் பிச்சைக்காரர்களுக்கு தன்னுடைய பங்களாவில் விருந்தளிப்பது போல காட்சி இருக்கும். அதனை தற்போது நிஜத்திலும் நிறைவேற்றியுள்ளார் விஜய் ஆண்டனி.

‘பிச்சைக்காரன் 2’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான நிலையில் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் செய்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இந்த நிலையில் ஆந்திராவில் ராஜமுந்திரி பகுதிக்கு அவர் சென்றுள்ளார். அப்போது அங்கு சாலையோர இருந்த பிச்சைக்காரர்களை ஒரு மிகப்பெரிய ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அங்கு விருந்து உபசரிப்பு அளித்துள்ளார். அவர்களுக்கு உணவை பரிமாறி உள்ளார்.

இந்த காட்சி வீடியோ வெளியானது. இதை பார்த்த பல ரசிகர்களும் நீங்கள் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஹீரோ தான் என விஜய் ஆண்டனி புகழ்ந்து வருகின்றனர்.

Actor Vijay Antony treat for Real Beggers

‘பாரதி கண்ணம்மா’வை அடுத்து வேற சீரியலில் களமிறங்கும் ‘பிக் பாஸ்’ தாமரைச்செல்வி

‘பாரதி கண்ணம்மா’வை அடுத்து வேற சீரியலில் களமிறங்கும் ‘பிக் பாஸ்’ தாமரைச்செல்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாட்டுப்புறப் பாடல்கள் பாடி தமிழக மக்களிடையே பிரபலமானவர் தாமரைச்செல்வி.

ஒரு கட்டத்தில் இந்த பிரபலம் இவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழக ரசிகர் மத்தியில் பிரபலமான தாமரைச்செல்விக்கு தற்போது சினிமாவிலும் சீரியலிலும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முடிவடையும் நிலையில் அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தாமரைச்செல்வி.

இந்த நிலையில் தற்போது ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் ‘நினைத்தாலே இனிக்கும்’ என்ற சீரியலில் தாமரைச்செல்வி நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எனவே விரைவில் ‘நினைத்தாலே இனிக்கும்’ ரசிகர்களுக்கு இந்த செய்தி கண்டிப்பாக ‘நினைத்தாலே இனிக்கும்’ என்பதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

After ‘Bharathi Kannamma’, ‘Bigg Boss’ Thamarai Selvi will act another serial.

More Articles
Follows