ஒய்ஜிஎம் நாடகம் பார்க்க உள்ளே விடவில்லை.; ‘ரகசியம் பரம ரகசியம்’ சொன்ன ரஜினி

ஒய்ஜிஎம் நாடகம் பார்க்க உள்ளே விடவில்லை.; ‘ரகசியம் பரம ரகசியம்’ சொன்ன ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஒய் ஜி மகேந்திராவின் பிரபல நாடகமான சாருகேசி திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது.

இது குறித்த அறிவிப்பை சென்னை வாணி மஹாலில் நடைபெற்ற சாருகேசி நாடகத்தின் 50வது காட்சியில் வெளியிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், திரைப்படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்தார்.

சாருகேசி

அறிவிப்பை வெளியிட்டு ரஜினிகாந்த் பேசுகையில்…

“1975-ல் ரகசியம் பரம ரகசியம் நாடகத்தை பார்க்க நான் சென்றபோது, என்னை உள்ளே அனுமதிக்கவில்லை.

ஆனால் இப்போது சாருகேசி நாடகத்தின் 50வது காட்சி விழாவில் சிறப்பு விருந்தினராக வந்து இருக்கிறேன். இது எல்லாமே காலத்தின் செயல்.

நாகேஷ், ஜெயலலிதா, சோ, விசு போன்றவர்கள் யுஏஏ நாடகக்குழுவில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள். இது மிகவும் கட்டுக்கோப்பான குழுவாகும். இதில் படித்தவர்கள், பல துறை வல்லுநர்கள் இருந்தனர்,” என்றார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்து இருந்தால் இந்த நாடகம் இன்னொரு வியட்நாம் வீடாக இருந்து இருக்கும், என்று அவர் மேலும் கூறினார்.

“இந்த ட்ராமாவை பொருத்தவரை கதை, திரைக்கதை, கதாபாத்திரங்கள், அவர்களது குணத்திற்கு உண்டான வசனங்களை அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளன. ஒய் ஜி மகேந்திரா போன்ற ஒரு நடிகரை சினிமா சரியாக பயன்படுத்தவில்லை,” என்று ரஜினிகாந்த் கூறினார்.

இந்த நாடகம் படமாக எடுக்கப்படும்போது மிகப்பெரிய வெற்றி அடையும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. வசந்த் திரைக்கதை எழுதவுள்ளார், அது இன்னும் சிறப்பானதாக இருக்கும், என்று அவர் தெரிவித்தார்.

“என் திருமணம் நடைபெறுவதற்கு முக்கியமான காரணம் ஒய் ஜி மகேந்திரா தான். மது, அசைவ உணவு பழக்கம் போன்றவை ஒருகாலத்தில் என்னோடு ஒட்டி இருந்தன. வெஜிடேரியன்ஸை பார்த்தால் எனக்கு பாவமாக இருக்கும்.

என்னை அன்பால் மாற்றியவர் எனது மனைவி லதா தான்,” என்று சூப்பர் ஸ்டார் கூறினார். புகை, மது போன்ற உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை விட்டு விடுமாறு அனைவரையும் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார்.

சாருகேசி

Rajini kickstarts Y Gee Mahendra directorial and starrer Charukesi

விக்ரமின் ‘தங்கலான்’ படத்தின் இசை குறித்து ஜிவி பிரகாஷின் அப்டேட்…

விக்ரமின் ‘தங்கலான்’ படத்தின் இசை குறித்து ஜிவி பிரகாஷின் அப்டேட்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது நடிகர் விக்ரம் வைத்து ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் விக்ரம், பார்வதி திருவோடு, மாளவிகா மோகனன், பசுபதி மாசிலாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் சமீபத்திய அப்டேட் ஜி.வி.பிரகாஷால் செய்யப்பட்ட படத்தின் இசை பற்றியது.

ஜிவி பிரகாஷ் படத்திற்கான இரண்டு பாடல்களைப் பதிவுசெய்து முடித்துவிட்டதாகவும், அவர் இதற்கு முன் முயற்சிக்காத சர்வதேச பழங்குடி ஆடியோவுடன் வெளிவந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், புதுப்பிப்பைப் பகிர்ந்துகொண்டு, ஜி.வி.பிரக்ஷ் எழுதினார், “தங்கலான் ஆடியோ வரும் விதம் குறித்து மிகவும் உற்சாகமாக உள்ளது. இரண்டு பாடல்களைப் பதிவுசெய்து முடிந்தது. இது வரை நான் முயற்சி செய்யாத எனக்கான தனித்துவமான ஒரு சர்வதேச பழங்குடி ஆடியோவுடன் வெளிவரவும். மிகவும் உற்சாகமாக உள்ளது” என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிருந்தார்.

GV Prakash updates on Vikram’s ‘Thangalaan’ music

சுனில் ஷெட்டி மகள் – மருமகனுக்கு குவிந்த கோடிக்கணக்கான பரிசுகள்.; கேட்டா AUDI போய்டுவீங்க.!

சுனில் ஷெட்டி மகள் – மருமகனுக்கு குவிந்த கோடிக்கணக்கான பரிசுகள்.; கேட்டா AUDI போய்டுவீங்க.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட் சினிமாவில் பிரபலமானவர் சுனில் ஷெட்டி. இவர் ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.

ஓரிரு தினங்களுக்கு முன் இவரின் மகளும் நடிகையுமான அதியா ஷெட்டியின் திருமணம் நடைபெற்றது. இவர் கிரிக்கெட்டர் கே எல் ராகுல் என்பவரை கரம் பிடித்தார்.

இந்த செய்திகளை நாம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் சுனில் ஷெட்டி தன் மருமகனுக்கு ரூ.50 கோடி மதிப்பிலான வீட்டை பரிசாக கொடுத்திருக்கிறாராம்.

மேலும் இது தவிர சுனில் ஷெட்டியின் நெருங்கிய நண்பரும் நடிகருமான சல்மான் கான் மணப்பெண்ணுக்கு ரூ.1.64 கோடி மதிப்பிலான ஆடிக்காரை பரிசாக வழங்கியுள்ளார்.

அதியா ஷெட்டிக்கு நடிகர் ஜாக்கி ஷெராப் ரூ.30 லட்சம் மதிப்பிலான ஆடம்பர வாட்ச் ஒன்றை பரிசளித்தார்.

நடிகர் அர்ஜூன் கபூர் ரூ.1.5 கோடி மதிப்பிலான வைர பிரேஸ்லெட் ஒன்றை அதியாவுக்கு பரிசளித்திருக்கிறார்.

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி மணமகன் ராகுலுக்கு ரூ. 80 லட்சம் மதிப்பிலான ஆடம்பர பைக் ஒன்றை பரிசளித்திருக்கிறார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மணமகன் கே.எல்.ராகுலுக்கு ரூ.2.17 கோடி மதிப்புள்ள BMW காரை பரிசளித்திருக்கிறார்.

கூடுதல் தகவல்…

கிரிக்கெட் வீரர் ராகுல் ஆண்டுக்கு கிரிக்கெட் மூலம் ரூ.15 கோடி வரை சம்பாதித்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே மும்பை கடற்கரையில் பெரிய பங்களா ஒன்று உள்ளது.

Athiya Shetty and KL Rahul got costly gift from celebrities

தோனி தயாரிப்பில் ‘லவ் டுடே’ நாயகி.; விஜய்க்கு பதிலாக ஹரிஷ் கல்யாண்.?

தோனி தயாரிப்பில் ‘லவ் டுடே’ நாயகி.; விஜய்க்கு பதிலாக ஹரிஷ் கல்யாண்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி இவர் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக விலகி வரும் நிலையில் பல்வேறு துறைகளில் தான் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து வருகிறார்.

7 இங்க் ப்ரேவ்ஸ் என்ற பெயரில் தோனிக்கு சொந்தமான பீர் நிறுவனம் இயங்கி வருகிறது. மேலும் வாகனத்துறை ஆடைகள் வடிவமைப்பு துறை என பல்வேறு துறைகளிலும் அவர் முதலீடு செய்து வருகிறார்.

இவை மட்டும் இல்லாமல் விவசாயத்திலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். கோழி பண்ணை, விவசாயம் ஆகியவையிலும் முதலீடு செய்துள்ளார். விவசாயத்திற்கு உதவக்கூடிய கருடா ஏரோ ஸ்பேஸ் என்ற ட்ரோன் நிறுவனத்திலும் பங்களிப்பை கொடுத்திருந்தார்.

மேலும் திரைத்துறையிலும் அவர் ஏற்கனவே முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்திருந்தார். தோனி எண்டர்டெயின்மண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

அதன்படி தற்போது தனது முதல் படைப்பாக தமிழில் புதிய சினிமாவை உருவாக்குகிறார். அதன்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

LGM – Lets Get married ( லெட்ஸ் கெட் மேரிட் ) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்க லவ் டுடே படத்தின் மூலம் புகழ்பெற்ற இவானா, நாயகியாக நடிக்கிறார்.

நதியா & யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே தோனியை வைத்து அதர்வா என்ற கிராபிக் நாவலை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் தோனி முன்னணி நடிகர் விஜய் உடன் தன் பயணத்தை ஆரம்பிப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ள படத்தை தயாரிப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

விஜய்யின் கால்ஷீட் கிடைப்பதில் தாமதமாவதால் தற்போது ஒரு சிறிய பட்ஜெட் படத்தை தோனி தயாரிக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ivana joined Let’s Get Married movie

‘முரட்டுக்காளை’ ஃபைட் இதுவரை இல்லை.; பூரண வாழ்க்கை வாழ்ந்த ஜூடோ ரத்தினம்.; ரஜினி நேரில் அஞ்சலி

‘முரட்டுக்காளை’ ஃபைட் இதுவரை இல்லை.; பூரண வாழ்க்கை வாழ்ந்த ஜூடோ ரத்தினம்.; ரஜினி நேரில் அஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் உடல்நல குறைவு மற்றும் வயது முதுமை காரணமாக நேற்று ஜனவரி 26ல் உயிரிழந்தார். (வயது 93)

இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதல் பாலிவுட்டில் அமிதாப்பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட பல நடிகர்களுடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சென்னை வடபழனி ஸ்டண்ட் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஸ்டண்ட் இயக்குநர் ஜூடோ ரத்தினத்தின் உடலுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

மறைந்த ஜூடோ ரத்தினம் உடலுக்கு நேரில் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பின்னர் அவரது குடும்பத்தினர் மற்றும் ஸ்டண்ட் யூனியன் உறுப்பினர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதலை தெரிவித்தார்.

ஜூடோ ரத்தினம் - ரஜினிகாந்த்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது நடிகர் ரஜினிகாந்த்..

“1976-ம் ஆண்டில் இருந்து அவருடன் பழக்கம் ஏற்பட்டது.. அவருக்கு என்று தனியாக ஒரு ஸ்டைல் உருவாக்கிக் கொண்டு அதை திரையுலகிலும் அறிமுகப்படுத்தினார்.்

அவருடைய அசிஸ்டன்ஸ் (உதவி சண்டைப் பயிற்சியாளர்கள்) இன்று பெரிய ஸ்டன்ட் மாஸ்டர் ஆக உள்ளார்கள்.

‘முரட்டுக்காளை’ படத்தில் ரயிலில் ஒரு சண்டைக்காட்சி இருக்கும். அதுபோல இதுவரை யாரும் செய்தது இல்லை.

93-வயதில் பூரண வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ஜூடோ ரத்தினம் - ரஜினிகாந்த்

Rajini paid last respect to Stunt Master Judo Ratnam

மீண்டும் பூஜையுடன் தொடங்கிய வெற்றி மாறனின் ‘விடுதலை’ படம்…!

மீண்டும் பூஜையுடன் தொடங்கிய வெற்றி மாறனின் ‘விடுதலை’ படம்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘விடுதலை’.

இப்படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விடுதலை

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

முன்னதாக டிசம்பர் 2022 இல், இப்படத்தை ‘விடுதலை பார்ட் 1 & விடுதலை பார்ட் 2’ படப்பிடிப்பை முடித்திருந்தார்.

இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுகிறது.

விடுதலை

இந்த நிலையில், தற்போது இப்படத்திற்கான டப்பிங் பணியை படக்குழுவினர் பூஜையுடன் தொடங்கியுள்ளனர்.

மேலும், இப்படம் விடுதலை பாகம் 1 & விடுதலை பாகம் 2 என இரண்டு பாகங்களாக திரையரங்குகளில் வெளியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

விடுதலை

Starts dubbing for Vetri Maaran’s ‘Viduthalai’

More Articles
Follows