‘திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த பட ‘ருத்ர தாண்டவம்’ சென்சார் அப்டேட்

‘திரௌபதி’ பட இயக்குனரின் அடுத்த பட ‘ருத்ர தாண்டவம்’ சென்சார் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் “ருத்ர தாண்டவம்”.

மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார்.

சின்னத் திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மற்றும் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவா இந்த படத்தையும் உலக முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார்.

இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ஒரு சில கட்டுகளுடன் படத்திற்கு U / A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

விரைவில் படத்தின் டிரெய்லர் வெளியாக இருக்கிறது.

Director Mohan G’s Rudra Thandavam censored with UA

பவர் ஸ்டாருடன் இணையும் நிதி அகர்வால்.; மீண்டும் வரும் விஜய்-அஜித் படத் தயாரிப்பாளர்

பவர் ஸ்டாருடன் இணையும் நிதி அகர்வால்.; மீண்டும் வரும் விஜய்-அஜித் படத் தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த குஷி, கில்லி, சிவகாசி, சுக்ரன் போன்ற படங்களை தயாரித்தவர் ஏஎம். ரத்னம்.

கமல் நடித்த இந்தியன், விக்ரம் நடித்த பீமா, சரத்குமார் நடித்த நட்புக்காக.. என பல வெற்றிப் படங்களை தயாரித்து இருக்கிறார்.

தெலுங்கு சினிமாவிலும் படங்களை தயாரித்துள்ளார்.

சில வருட இடைவெளிக்கு பின்னர் அஜித் நடுத்த ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய படங்களை தயாரித்து அஜித்துக்கு ஹாட்ரிக் வெற்றி கொடுத்தார்.

இந்த நிலையில் தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கவுள்ள புதிய படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார் ரத்னம்.

இந்த படத்திற்கு ‘ஹரிஹர வீர மல்லு’ என பெயரிடப்பட்டுள்ளனர்.

கிரிஷ் என்பவர் இயக்க ஞானசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

பாகுபலி & ஆர்ஆர்ஆர் பட புகழ் கீரவாணி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

பவன் கல்யாணுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறாராம்.

இப்படம் பவன் கல்யாணின் 27வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Nidhhi Agerwal to romance Power Star

சசிகுமாருக்கு ஜோடியாக்க மீண்டும் ஹரிப்பிரியாவை தமிழுக்கு அழைக்கும் சத்யசிவா

சசிகுமாருக்கு ஜோடியாக்க மீண்டும் ஹரிப்பிரியாவை தமிழுக்கு அழைக்கும் சத்யசிவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கழுகு பட புகழ் சத்யசிவா இயக்கத்தில் புதிய படம் உருவாகவுள்ளது.

இதில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார்.

இவருடன் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்க, பிரசன்னா இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் நாயகியின் தேடுதல் வேட்டை நடைபெற்றது.

தற்போது நாயகியாக ஹரிப்பிரியா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழில் கனகவேல் காக்க, வல்லக்கோட்டை, முரண் போன்ற படங்களில் நடித்தவர் தான் ஹரிப்பிரியா.

தமிழில் வாய்ப்புகள் குறையவே கன்னட சினிமாவுக்கு சென்றார். தற்போது 9 வருடங்களுக்கு பிறகு தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஹரிப்பிரியா என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Hari Priya’s re entry in kollywood after 9 years

வருமான வரிக்கு வட்டி விலக்கு கேட்ட சூர்யா மனு தள்ளுபடி.; மேல்முறையீடு செய்வாரா நடிகர்.?

வருமான வரிக்கு வட்டி விலக்கு கேட்ட சூர்யா மனு தள்ளுபடி.; மேல்முறையீடு செய்வாரா நடிகர்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

எனவே இதனையடுத்து 2 ஆண்டுகள் மதிப்பீட்டில் 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டது.

மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்தது.

அதாவது… 2007- 08, 2008-09 நிதியாண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் செலுத்த வேண்டும் எனவும் வருமான வரித்துறை சூர்யாவுக்கு உத்தரவிட்டது.

எனவே தீர்ப்பாயத்தில் தனது வழக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரிக்கு சட்டப்படி மாதம் 1 சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார் நடிகர் சூர்யா.

இதனை கடந்த 2018ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காக தொடர்ந்தார் சூர்யா.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆனால் சூர்யா தாமதமாக தான் கணக்கை தாக்கல் செய்தார் என்றும் வருமான வரி துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம், வட்டி விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து (மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து) மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தகவல்

வருமான வரிக்கு வட்டி ஏற்கெனவே செலுத்திவிட்டோம். வட்டிக்கு வட்டி செலுத்துவதை எதிர்த்தே வழக்கு தொடரப்பட்டுள்ளது என நடிகர் சூர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு முன்பு சூர்யா தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Actor Suriya’s bail dismissed in tax issue case

அதே ஜட்ஜ்.. அதே தீர்ப்பு..; விஜய் தனுஷை அடுத்து வரிக்கு வட்டி விலக்கு கேட்ட சூர்யா மனு தள்ளுபடி

அதே ஜட்ஜ்.. அதே தீர்ப்பு..; விஜய் தனுஷை அடுத்து வரிக்கு வட்டி விலக்கு கேட்ட சூர்யா மனு தள்ளுபடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த மாதங்களில் நடிகர்கள் விஜய் & தனுஷ் இருவரும் வெளிநாட்டு கார் இறக்குமதி நுழைவு வரியில் விலக்கு கேட்டனர்.

இவர்களின் மனுவை தள்ளுபடி செய்து இதனை கடுமையாக விமர்சித்த நீதிபதி சுப்ரமண்யம் இருவருரையும் உடனடியாக வரி கட்ட உத்தரவிட்டார்.

அதன்படி நடிகர் விஜய் ரூ 40 லட்சமும் தனுஷ் ரூ 30 லட்சமும் நுழைவு வரி கட்டினர்.

தற்போது வருமான வரிக்கு வட்டி விலக்கு கோரியுள்ளார் நடிகர் சூர்யா.

கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

எனவே இதனையடுத்து 2 ஆண்டுகள் மதிப்பீட்டில் 3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டது.

மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்தது.

அதாவது… 2007- 08, 2008-09 நிதியாண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இடைப்பட்ட ஆண்டுகளுக்கான வட்டியையும் செலுத்த வேண்டும் எனவும் வருமான வரித்துறை சூர்யாவுக்கு உத்தரவிட்டது.

எனவே தீர்ப்பாயத்தில் தனது வழக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு காணப்பட்டதால், வருமான வரிக்கு சட்டப்படி மாதம் 1 சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார் நடிகர் சூர்யா.

இதனை கடந்த 2018ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காக தொடர்ந்தார் சூர்யா.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சோதனை நடந்த 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆனால் சூர்யா தாமதமாக தான் கணக்கை தாக்கல் செய்தார் என்றும் வருமான வரி துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, எஸ்.எம்.சுப்பிரமணியம், வட்டி விலக்கு கோரி நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி.

Madras High Court dismiss Suriya’s plea seeking Income Tax exemption

BREAKING டிவி தொகுப்பாளரும் நடிகருமான ஆனந்த கண்ணன் மரணம்.; அவரின் வாழ்க்கை ஒரு பார்வை

BREAKING டிவி தொகுப்பாளரும் நடிகருமான ஆனந்த கண்ணன் மரணம்.; அவரின் வாழ்க்கை ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிங்கப்பூரில் வசித்து வந்த தமிழன் ஆனந்த கண்ணன்.

அங்குள்ள வசந்தம் டிவி சேனலில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.

அதன் பின்னர் சென்னை வந்த இவர் சன் ம்யூசிக்கில் தொகுப்பாளராகவும் ஆனார். இவருக்கு நிறைய ரசிகர்கள் ரசிகைகள் உருவாகினர்.

90’ஸ் குட்டிகளின் பேவரைட் விஜே ஆனார்.

சன். டி.வி.யில் ஒளிபரப்பான சிந்துபாத் தொடரிலும் & விக்ரமாதித்தன் என்ற சீரியலில் நடித்தார்.

வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்திலும் நடித்தார். முள்ளும் மலரும்,இத்தனை நாள் எங்கியிருந்தாய்? ஆகிய படங்களிலும் நடித்தார். அந்த படங்கள் ரிலீசாகவில்லை.

பின்னர் சினிமா வாய்ப்புகள் குறையவே மீண்டும் சிங்கப்பூர் சேனலான வசந்தம் டிவியில் பணியாற்றி வந்தார்.

கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமியக் கலைகளையும் இவர் முறையாக பயின்றுள்ளார்.

இவர் பயின்ற கிராமியக் கலைகளை, `ஆனந்தக் கூத்து’ என்ற பயிற்சி அமைப்பின் மூலம் சிங்கப்பூரில் பயிற்சி மையம் அமைத்து சொல்லிக் கொடுத்தார். சிங்கப்பூரில் இதுவே எனக்கு மகிழ்ச்சி.
இதுவே என் அடையாளம்” என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் என் நண்பர் ஆனந்த கண்ணன் மரணம் அடைந்துவிட்டார் என இயக்குனர் வெங்கட் பிரபு தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால் மரணத்திற்கான காரணம் என்னவென்று அவர் தெரிவிக்கவில்லை.

நடிகர் ஆனந்த கண்ணன் கேன்சர் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Sun Music VJ cum Actor Anandha Kannan passed away

More Articles
Follows