சிவாஜி-முத்துராமன் பேரன் வரிசையில் நாகேஷ் பேரன் நடிக்கும் படம்

Nagesh grandson and Aanandbabu son Ghajesh Nagesh  starring School Campusசிவாஜி கணேசனை தொடர்ந்து அவரது மகன் பிரபுவும், இவரை தொடர்ந்து இவரது மகன் விக்ரம் பிரபுவும் சினிமாவுக்கு வந்துவிட்டார்.

இவர்களைப் போல் முத்துராமன் மகன் கார்த்திக்கும், அவரது மகன் கௌதம் கார்த்திக்கும் சினிமாவுக்கு வந்துவிட்டார்.

தற்போது 3வது தலைமுறை வாரிசுகள் சினிமாவில் கோலோச்சி வருகின்றனர்.

இந்த வரிசையில் நாகேஷ் பேரனும் சினிமாவுக்கு வந்துள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு..

எம்என் குளோபல் குரூப் குழுவானது, ஏஎம்என் பைன் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை உருவாக்கி “ஸ்கூல் கேம்பஸ்” என்ற திரைப்படத்தினை தயாரித்து வருகிறது.

ஏ.எம்.என் குளோபல் குரூப் மேனேஜிங் டைரக்டர் டாக்டர்.ஆர்.ஜே.ராம நாராயணா இந்த படத்தினை இயக்கி, தயாரிப்பது மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.

இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு ஸ்ரீ சந்தோஷ் குமார் மால் IAS (மாவட்ட ஆட்சியர்) அவர்களால் டெல்லி கேந்திரிய வித்யாலயா வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தியக் கல்வியின் எதிர்காலத்தில் நடக்கும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சொல்லும் கதையாக இப்படம் அமைந்துள்ளது.

பழம்பெரும் நடிகர் நாகேஷ் அவர்களின் பேரனும், சிறந்த நடிகர் மற்றும் நடன கலைஞரான ஆனந்த் பாபுவின் மகனான கஜேஷ் நாகேஷ் ஹீரோவாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக அருள் வின்சென்ட் மற்றும் படத்தொகுப்பாளராக ராஜேஷ் குமார் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

தேவா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். மேலும் பிரபல பாடகர்கலான ஆஷா போஷ்லே, பி.சுசிலா மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் இந்த படத்தில் பாடியுள்ளனர்.

படத்தின் நாயகர்களாக நடித்துள்ள ராஜ்கமல், கஜேஷ் நாகேஷ் ஆகியோர்களுக்கு ஜோடியாக கீர்த்தி மற்றும் காயத்ரி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் டெல்லி கணேஷ், மதன் பாப், ரிந்து ரவி மற்றும் ராதிகா மாஸ்டர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்திற்குள் முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

Nagesh grandson and Aanandbabu son Ghajesh Nagesh starring School Campus

 

Overall Rating : Not available

Related News

Latest Post