தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை ஒரு நடிகராகவும் ஒரு அரசியல்வாதியாகவும் தமிழகத்தில் முன்னாள் முதல்வராகவும் பலருக்கு தெரியும். அதே சமயம் அவர் சில படங்களை தயாரித்தும் இயக்கியும் உள்ளார்.
எம்ஜிஆர் தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம் தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இந்த படம் 1973ஆம் ஆண்டில் வெளியாகி தற்போது 50 ஆண்டுகளை கடந்துள்ளது.
இதில் மஞ்சுளா, லதா, சந்திரகலா, நம்பியார், மனோகர், அசோகன், நாகேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்த இப்படம் வசூல் சாதனைப் படைத்தது. இதன் பாடல்கள் நிலவு ஒரு பெண்ணாகி… பச்சைக்கிளி முத்துச்சரம்… உலகம் அழகு கலைகளின் சுரங்கம்… ஆகியவை தமிழ் சினிமாவின் எவர்க்ரீன் பாடல்கள்.
இப்படம் ரிலீசாகி தற்போது 50 ஆண்டுகள் ஆனதை ஓட்டி, இதன் பொன் விழாவை எம்.ஜி.ஆர்.ரசிகர்கள் நவம்பர் 5-ம் தேதி கொண்டாட உள்ளனர்.
தி.நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கத்தில் இந்த விழா நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு வரை நடைபெற உள்ளது.
இதில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, நடிகை லதா, புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
MGR fans celebrates Ulagam Suttrum Valiban 50 years
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பது இதுதானே…