டைட்டில் செமயா இருக்கே.: மீண்டும் ஹீரோவாகும் கவுண்டமணி.; காமெடி வாரிகளுடன் கூட்டணி

டைட்டில் செமயா இருக்கே.: மீண்டும் ஹீரோவாகும் கவுண்டமணி.; காமெடி வாரிகளுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில் கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த குடும்பத்துடன் கண்டு ரசிக்கக் கூடிய வகையில் உருவாகவுள்ள இதில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, ‘எதிர்நீச்சல்’ ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் களம் இறங்குகிறது.

ஒத்த ஓட்டு முத்தையா

மேலும், நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்க உள்ளனர். கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.

படம் குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால்…

“சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன்.

ஒத்த ஓட்டு முத்தையா

மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘பாய்ஸ்’ மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் ‘கிச்சா வயசு 16’ ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார்.

6 முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும். இப்படத்தை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து தங்களது பேராதரவை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

ஒத்த ஓட்டு முத்தையா

‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்க, ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவை கையாள்கிறார். கலை இயக்கத்திற்கு மகேஷ் நம்பியும், படத்தொகுப்புக்கு ராஜா சேதுபதியும் பொறுப்பேற்றுள்ளனர்.

பி ஜி துரை, தீனா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் அசோசியேட்டுகளாக பணியாற்றுகின்றனர். தயாரிப்பு மேலாளர்: ராஜன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

ஒத்த ஓட்டு முத்தையா

Goundamani to play protagonist in Otha Votu Muthaiya

விஜய்யின் ‘லியோ’ படத்தில் இணைந்த ‘மாமன்னன்’ பட நடிகர்

விஜய்யின் ‘லியோ’ படத்தில் இணைந்த ‘மாமன்னன்’ பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘லியோ’ படத்தில் இடம்பெற்ற “நா ரெடி” பாடல் வெளியாகி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது.

இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘லியோ’ படத்தில் நடிகர் ராமகிருஷ்ணன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நடிகர் ராமகிருஷ்ணன் சமீபத்தில் வெளியான உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமகிருஷ்ணன்

‘Maamannan’ movie actor join in Vijay’s ‘Leo’

‘ரெஜினா-வை தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா.? இதோ ஓடிடி ரிலீஸ்..

‘ரெஜினா-வை தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா.? இதோ ஓடிடி ரிலீஸ்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஸ்டார்’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நன்கு அறியப்பட்ட மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் வெளியான படம் ‘ரெஜினா’.

இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

யெல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.ஆர் எழுதியுள்ளனர்.

இப்படம் ஜூன் 23-ஆம் தேதி தமிழ், மலையாளம் என பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘ரெஜினா’ படம் இன்று (ஜூலை 25) அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

ரெஜினா

Sunainaa’s ‘Regina’ movie on OTT released from today

‘ஜெயிலர்’ பட ரன்னிங் டைம் என்ன? இடைவேளைக்கு முன்பும் பின்பும் எவ்ளோ.?

‘ஜெயிலர்’ பட ரன்னிங் டைம் என்ன? இடைவேளைக்கு முன்பும் பின்பும் எவ்ளோ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

மேலும், ‘ஜெயிலர்’ படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘ஜெயிலர்’ படம் 2 மணிநேரம் 49 நிமிடம் ரன்னிங் டைம் எனவும், முதல் பாதி 1 மணிநேரம் 19 நிமிடமாகவும், இரண்டாம் பாதி 1 மணிநேரம் 30 நிமிடமாகவும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Rajini’s ‘Jailer’ movie running time update here

போலீஸாக அதர்வா.. கேங்ஸ்டராக மணிகண்டன் இணைந்து மிரட்டும் ‘மத்தகம்’

போலீஸாக அதர்வா.. கேங்ஸ்டராக மணிகண்டன் இணைந்து மிரட்டும் ‘மத்தகம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மத்தகம்’ சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்.

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத இந்த டீசர் மொத்த சீரிஸின் கதையும் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் என்பதை அழகாக விவரிக்கிறது.

டீசரின் காட்சிகளில் அதர்வா ஒரு தீவிரமான போலீஸ்காரராகவும், குட் நைட் புகழ் மணிகண்டன் முதல் முறையாக ஒரு வில்லத்தனம் மிகுந்த கேங்ஸ்டராகவும் தோன்றுகிறார்கள்.

வெகு சிறப்பாக எடிட் செய்யப்பட்டிருக்கும் டீசர், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கூட்டுவதுடன், இந்த சீரிஸ் ஒரு அற்புதமான த்ரில்லராக இருக்கும் என்பதை வலுவாக வெளிப்படுத்துகிறது.

ஓர் இரவில் என்ன செய்ய முடியும்.? என்று கேட்கும் குரலுடன் டீஸர் தொடங்குகிறது. அதன்பிறகு அது அந்த கேள்விக்கு விடையளிக்கும் வகையில் வெகு பரபரப்பான காட்சிகளைக் காட்சிப்படுத்துகிறது, பரபரப்பான ரோலர்-கோஸ்டர் சவாரிக்கு ரசிகர்கள் தயாராகலாம்.

Screen Scene Media Entertainment தயாரிப்பில் உருவாகியுள்ளது.

இந்த சீரிஸில் பிரபல இயக்குநர் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.

‘மத்தகம்’ என்பது யானையின் முன்நெற்றியை குறிக்கும் சொல் ஆகும் யானை தன் தும்பிக்கை இணைந்த மத்தகத்தைத் தன்னை காத்துக் கொள்ளவும், தாக்கவும் உபயோகிக்கும்.

இந்த சீரிஸுன் பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகளைப் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் அமைத்துள்ளார். சுரேஷ் கல்லேரி கலை இயக்கம் செய்துள்ளார்.

Atharva and Manikandan starring Mathagam teaser

ரசிகர்கள் அலப்பறை : ‘ஜெயிலர்’ ஆடியோ லான்ச்..; 15 நொடிகளில் முடிந்தது புக்கிங்.!

ரசிகர்கள் அலப்பறை : ‘ஜெயிலர்’ ஆடியோ லான்ச்..; 15 நொடிகளில் முடிந்தது புக்கிங்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28-ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இதையடுத்து இந்த இசை வெளியீட்டு விழாவை நேரில் காண 1000 இலவச பாஸ்களை ரசிகர்களுக்கு வழங்குவதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாற்கான பதிவு இன்று மதியம் 1 மணிக்கு தொடங்கியது.

ஆனால், இலவச பாஸுக்கான புக்கிங் தொடங்கிய 15 நொடிகளில் தீர்ந்தது விட்டது.

இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

ஜெயிலர்

Rajini’s ‘Jailer’ audio launch free passes exhausted out in just 15 seconds

More Articles
Follows