RRR ரிலீஸாகி 4 மாசத்துக்கு வேற படங்கள் ரிலீஸ் ஆகாம இருந்தா நல்லது.. – சல்மான் கான்

RRR ரிலீஸாகி 4 மாசத்துக்கு வேற படங்கள் ரிலீஸ் ஆகாம இருந்தா நல்லது.. – சல்மான் கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜமௌலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ஆர்ஆர்ஆர்’.

பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படம் ஜனவரி 7ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் RRR படம் ரிலீசாகிறது.

எனவே தற்போது இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மும்பையில் ஆர்ஆர்ஆர் ஹிந்தி பதிப்புக்கான விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் சல்மான்கான் பேசியதாவது…

“ராம்சரணை நான் சந்திக்கும் போது அவர் ஏதாவது விபத்து காயம்பட்டு ஓய்வில் இருப்பார்.

அதாவது அவர் நடிக்கும் பட சூட்டிங்கில் காயமடைந்துவிடுவார். அந்த அளவிற்கு கடின்உழைப்பாளி அவர்

ஜுனியர் என்டிஆர் ஒரு யதார்த்த நடிகர். அவரது நடிப்பை நேசிக்கிறேன்,

‘ஆர்ஆர்ஆர்’ படம் ரிலீசுக்கு பிறகு குறைந்தது 4 மாதங்களுக்காவது வேறு யாரும் படத்தை ரிலீஸ் செய்யாமல் இருப்பது நல்லது.

அந்த அளவிற்கு ஆர்ஆர்ஆர் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது,” என பேசினார் சல்மான்கான்.

Salman Khan speech at RRR pre release event

என்கிட்ட வர்றவங்களுக்கு தில் வேணும்.; என் கூட ஒர்க் பண்ணினவங்களுக்கு சான்ஸ் தர மாட்டுறாங்க.. – ரஞ்சித்

என்கிட்ட வர்றவங்களுக்கு தில் வேணும்.; என் கூட ஒர்க் பண்ணினவங்களுக்கு சான்ஸ் தர மாட்டுறாங்க.. – ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா, ஜானி ஹரி, லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘ரைட்டர்’.

ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இயக்குனர் ரஞ்சித் இந்த படத்தை தயாரிக்க 96 பட புகழ் கோவிந்த வசந்தா இசையமைத்துள்ளார்.

அதிகாரமிக்க காவல்துறையில் அதே துறையில் பணி புரியும் ரைட்டருக்கு ஏற்படும் வலியை சொல்கிறது இந்த படம்.

டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது தனது குமுறலை வெளிப்படுத்தினார் ரஞ்சித்.

அவர் பேசியதாவது…

எங்கள் அரசியலை புரிந்தவர்களுடன் நான் பணிபுரிகிறேன். என் அலுவலக கதவு எப்போதும் திறந்தே இருக்கும்.

என்கிட்ட வர்றவங்களுக்கு ஒரு தில்லு வேணும்.

என் படங்களில் வேலை பார்த்த தொழில்நுட்ப கலைஞர்கள் முதல் நடிகர்கள் வரை அனைவரும் என்னை போலவே சிந்திப்பார்கள் என நினைக்கிறார்கள்.

மெட்ராஸ் படத்தில் ஜானியாக நடித்தார் ஹரி. அவர் திறமைசாலி. ரைட்டர் படத்தில் கூட நடித்துள்ளார். எனக்கே அது முதலில் தெரியாது.

அவருக்கு சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வரும் என நினைத்தேன். ஆனால் அவனைப் போன்றவர்களுக்கு என்னுடன் பணி புரிந்தததால் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது.

இது அப்பட்டமான உண்மை” என ரஞ்சித் ஆதங்கமாக பேசினார்.

Pa Ranjith speech at Writer press meet

குடும்பங்களின் தேசிய கீதமானது ‘சொந்தமுள்ள வீடு..’ பாடல்.; சிலிர்க்கும் சித்துகுமார்

குடும்பங்களின் தேசிய கீதமானது ‘சொந்தமுள்ள வீடு..’ பாடல்.; சிலிர்க்கும் சித்துகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் கார்த்திக், சேரன் இணைந்து நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இசை ஆல்பம் இசை காதலர்களிடையே பெருவாரியான வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் “சொந்தமுள்ள வீடு” பாடல் குடும்ப ரசிகர்களின் தேசிய கீதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடும்ப உறவின் பெருமைகள் சொல்லும், விஸ்வாசம் படத்தின் ‘கண்ணான கண்ணே’ மற்றும் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் ‘உங்கூடவே பொறக்கனும்’ பாடல்களை போல, பட்டி தொட்டியெங்கும் முணுமுணுக்கும் பாடலாக இப்பாடல் தமிழகமெங்கும் கொண்டாடப்படுகிறது.

இத்திரைப்படம் 2021 டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை குறித்து இசையமைப்பாளர் சித்து குமார் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

இது குறித்து இசையமைப்பாளர் சித்து குமார் கூறியதாவது…

உண்மையில் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படம் எனக்கு ஒரு புதிய அனுபவத்தை தந்தது. என் திரை வாழ்வு, மிக அதிர்ஷ்டம் மிகுந்தது. தொடர்ந்து உணர்வுப்பூர்வமான படங்களில் நான் பங்காற்றியுள்ளேன். ஆனால் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை அதன் உச்சம் எனலாம். இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வித்தியாசமான பாடல்கள் கொண்டது.

பாடலாசிரியர் சினேகன் மொத்த பாடல்களுக்கும் தனது அற்புத வரிகளால் ஆத்மாவை தந்துள்ளார். ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் உணர்ச்சிகரமான காட்சிகள் படத்திற்கு மிகச்சிறந்த இசையை உருவாக்குவதில் பெரும் சவாலை தந்தது.

இயக்குநர் நந்தா பெரியசாமி தன் எழுத்தில், உருவாக்கக்தில் உணர்ச்சிபிழம்பான தருணங்களை திரையில் வடித்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும், அதில் நடித்துள்ள நடிகர்கள் அந்த காட்சிகளின் உணர்வை, தங்களது நடிப்பால் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

இவையெல்லாம் பார்த்த போது, இக்காட்சிகளுக்கு நியாயம் செய்யும் உண்மையான ஒரு இசையை, எனது முழுத்திறமையையும் வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தை எனக்கு உணர்த்தியது. படத்தின் பல காட்சிகளில் என் வாழ்வையே நான் கண்டேன். இசைக்கு முன்பாகவே திரைப்படம் ஒரு முழு திரைக்காவியமாக இருந்தது. முழுப்பிரதிக்கு முன்பாக ஒரு படைப்பாளியால் இப்படி ஒரு தாக்கத்தை உருவாக்க முடியுமெனும்போது, இந்த படம் உண்மையில் அங்கேயே ஜெயித்து விட்டது. ஆனந்தம் விளையாடும் வீடு ஒரு அழகான அனுபவமாக மறக்கமுடியாத திரை விருந்தாக இருக்கும்.

குடும்ப உறவுகளின் உன்னதங்களை வெளிப்படுத்தும் உணர்வுப்பூர்வமான அம்சங்கள், ரொமான்ஸ், காமெடி கமர்சியல் என அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்த படைப்பாக இப்படம் இருக்கும்.

இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்ததற்காக இந்நேரத்தில் இயக்குநர் நந்தா பெரியசாமி அவர்களுக்கும், தயாரிப்பாளர் P.ரங்கநாதன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மிகப்பெரிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்து, ஒரு குடும்ப திரைப்படம் திரைக்கு வந்து பலகாலம் ஆகிவிட்டது அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் ஒரு முழுமையாக குடும்ப படமாக இப்படம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும்.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கியுள்ள ஆனந்தம் விளையாடும் வீடு படத்தை Sri Vaari Film சார்பில் P.ரங்கநாதன் தயாரித்துள்ளார். கௌதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா ராஜசேகர், வெண்பா, சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், சௌந்தரராஜா, முனிஷ்ராஜ், சிங்கம்புலி, “நமோ” நாராயணன், சினேகன், ஜோ மல்லூரி, “நக்கலைட்” செல்லா “சூப்பர்குட்” சுப்ரமணி “V.J. கதிரவன், மௌனிகா, மைனா,சூசன், பிரியங்கா, மதுமிதா, “பருத்திவீரன்” சுஜாதா, “நக்கலைட்” தனம், ஜானகி, சுபாதினி, சிந்துஜா மற்றும் பல நடசத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

Music director Siddhu Kumar about Sondhamulla Veedu

‘அண்ணாத்த’ பாடலாசிரியரை அண்ணாந்து பார்த்த அண்டை மாநில கலைஞர்கள்

‘அண்ணாத்த’ பாடலாசிரியரை அண்ணாந்து பார்த்த அண்டை மாநில கலைஞர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படத்தில் இடம்பெற்ற ‛வா சாமி’ பாடல் என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பியது.

இமான் இசையமைத்த இந்த பாடலை எழுதியவர் பாடலாசிரியர் அருண் பாரதி.

தற்போது ப்ரீச்சர் நவம்பர் 18 என்ற மலையாள படம் ஒன்றுக்கு பாடல் எழுதியுள்ளார் பாடலாசிரியர் அருண் பாரதி.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

“மாநிலம் கடந்து நம் தமிழ் மொழியின் பெருமையை கொண்டு செல்வதில் நானும் ஒரு கருவியாக இருக்கிறேன் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த பாடலை ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்துவிட்டேன் , எழுதும் போது இயக்குநர் மனோஜ் கே வர்க்கீஸ், இசையமைப்பாளர் சுனில்குமார் ஆகியோர் வரிகளில் உள்ள சப்தத்தையும், அர்த்தத்தையும் உணர்ந்து வியந்து பாராட்டினார்கள்.

அதற்கு நான் நீங்கள் பாராட்ட வேண்டியது என்னையல்ல தமிழ் மொழியை என்று அவர்களுக்கு பதிலளித்தேன்.

இக்கதை கேரளம் மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் நடைபெறும் கதையாக இருப்பதால் முழுக்க முழுக்க தமிழிலேயே இப்பாடலை எழுதியுள்ளேன்.

எனது சூழலியல் குறித்த ஈமக்கலயம் என்னும் கவிதை கேரள அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு 12ம்வகுப்பு சிறப்புத்தமிழ் நூலில் மாணவர்களுக்கு பாடத் திட்டமாக அமைந்துள்ளது. இது ஒரு தமிழ் கவிஞனுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்” என்றார்.

Celebrities praises Lyricist Arun Bharathi’s recent work

ஆவியுடன் பேசும் ஆராய்ச்சியில் நாயகன்..; உண்மைகளை உடைத்த ‘புகைப்படம்’

ஆவியுடன் பேசும் ஆராய்ச்சியில் நாயகன்..; உண்மைகளை உடைத்த ‘புகைப்படம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில்பகலா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் மது வெள்ளை கடவு தயாரிக்கும் ‘புகைப்படம்’ படத்தின் பூஜை கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்றது

இப்படத்தில் நாயகனாக மானவ் ஆனந்த் , நாயகியாக கிருபா சேகர் நடிக்க உள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஷிவானி, ராகுல் மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு லாரன்ஸ் அந்தோணி, இசை சத்யராஜ், படத்தொகுப்பு பாண்டி, கலை இயக்கம் சாஜி,
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் சுரேஷ் முருகன்..

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்தில் கேரளாவில் திருவனந்தபுரத்தில் துவங்கி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது

இப்படத்தைப் பற்றி இயக்குனர் சுரேஷ் முருகன் கூறுகையில்,…

சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த கதாநாயகனுக்கு தாய் தந்தையுடன் பேச ஆசை ஏற்பட்டது அதனால் ஆவியுடன் பேசுவதை பற்றிய ஆராய்ச்சி கதாநாயகன் மேற்கொள்கிறார்.

கதாநாயகியின் தாய் தந்தை திடீரென்று விபத்தில் மரணம் அடைய அவர்களுடைய ஆவியுடன் பேசும்போது பல திடுக்கிடும் உண்மைகள் கிடைக்கிறது..

இதனால் நாயகனும், நாயகியும் பேராபத்தில் சிக்குகிறார்கள் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதுதான் படத்தின் கதை என்கிறார் இயக்குனர்.

Manav Anand and Kiruba Sekar joins for Pugaippadam

மனீஷாவின் கனவை நிறைவேற்றிய இளையராஜா.; காதலர்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கு..!

மனீஷாவின் கனவை நிறைவேற்றிய இளையராஜா.; காதலர்களுக்கு கொண்டாட்டம் காத்திருக்கு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசைஞானி இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417-வது படமாக உருவாகி வருகிறது “நினைவெல்லாம் நீயடா”.

இந்த படத்தை லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் .

சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட படங்களை இயக்கிய ஆதிராஜன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி வருகிறார்.

இதில் கதாநாயகனாக பிரஜன் நடிக்கிறார். கதாநாயகியாக, வழக்கு எண் 18 /9, ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, சண்டி முனி, ஒரு குப்பை கதை படங்களில் நடித்த மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கிறார்.

மற்றொரு நாயகியாக சினாமிகா அறிமுகமாகிறார். இளம் வயது நாயகன் நாயகியாக மாஸ், மாஸ்டர் பட புகழ் ரோகித்தும், அப்பா, அம்மா கணக்கு, ஆருத்ரா, வினோதய சித்தம் படங்களில் நடித்த யுவஸ்ரீயும் நடிக்கின்றனர்.

இவர்களுடன் மனோபாலா முத்துராமன் மதுமிதா பட அதிபர் பி எல் தேனப்பன் டைரக்டர் ஜெயபிரகாஷ் ரஞ்சன் குமார் தமிழ்செல்வி ஐஸ்வர்யா உட்பட பலர் நடிக்கின்றனர்.

முதல் காதலை கொண்டாடிய அழகி ஆட்டோகிராப் பள்ளிக்கூடம் காதல் 96 போன்ற பட வரிசையில் பள்ளிக்கூட காதலின் ஆழத்தையும் தியாகத்தையும் அழகியலோடு சொல்ல வருகிறது “நினைவெல்லாம் நீயடா”.

பியார் பிரேமா காதல், கழுகு 2, காமன் மேன், இடியட் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ராஜா பட்டாசார்ஜி இப்படத்திற்கு ஒளி ஓவியம் தீட்டுகிறார்.

படத்தொகுப்பை பிரபாகர் கவனிக்க, கலையை முனி கிருஷ்ணா கையாளுகிறார் ஸ்டண்ட் காட்சிகளை பிரதிப் தினேஷ் அமைக்கிறார். நடனக் காட்சிகளை பிருந்தா, தினேஷ், தீனா மாஸ்டர்கள் வடிவமைக்கின்றனர்.

இந்த படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிப்பது குறித்து நடிகை மனிஷா யாதவ் குறிப்பிடும்போது…

“நான் நடித்த வழக்கு எண்18/9, ஒரு குப்பை கதை போன்ற படங்கள் ரசிகர்களிடம் எனக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தன. அந்த வரிசையில் இந்த படம் என் நடிப்புத் திறமைக்கும் நடன திறமைக்கும் தீனி போடும் படமாக அமைந்திருக்கிறது.

இந்த படத்தின் கதையை இயக்குனர் ஆதிராஜன் சொன்ன உடனேயே பிடித்து விட்டது. அதற்கு காரணம்…. ஒரே கேரக்டருக்குள் பலவிதமான கேரக்டர்கள் ஒளிந்திருக்கும் வித்தியாசமான வேடம் இது. இதுவரை இப்படி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நான் நடித்ததில்லை.

நிஜமாகவே எனக்கு சவாலான வேடம் இது. அத்துடன் இளையராஜா சார் இசையில் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற என்னுடைய கனவும் இந்த படத்தில் நிறைவேறுகிறது. கண்டிப்பாக இந்த படத்தை காதலர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.

“நினைவெல்லாம் நீயடா” ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்கும்” என்று குறிப்பிட்டார் மனிஷா யாதவ்.

Actress Manisha Yadav’s dream come true moment

More Articles
Follows