அஜித் பட ரீமேக்.; சல்மான் கானுடன் இணைந்த விஜய் ஹீரோயின்

அஜித் பட ரீமேக்.; சல்மான் கானுடன் இணைந்த விஜய் ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவா இயக்கத்தில் அஜீத், தமன்னா, சந்தானம், நாசர் நடித்த ’வீரம்’ (2014) படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜீத் கேரக்டரில் சல்மான்கான் நடித்து வருகிறார்.

தமன்னா கேரக்டரில் நடிப்பது யார்? என்பது புதிராகவே இருந்தது.

இந்த நிலையில் தற்போது ‘பீஸ்ட்’ பட நாயகி பூஜா ஹெக்டே இதில் நாயகியாக நடிக்கிறாரம்.

இந்த படத்திற்கு ’கபி ஈத் கபி தீவாளி’ என டைட்டில் வைத்துள்ளனர்.

இதன் சூட்டிங்கில் உள்ள படத்தை பூஜா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pooja Hegde

Ajith movie remake .; Vijay film heroine teamed up with Salman Khan

விஜய்யை அடுத்து பிரபாசுடன் ஜோடி போடும் ராஷ்மிகா மந்தனா

விஜய்யை அடுத்து பிரபாசுடன் ஜோடி போடும் ராஷ்மிகா மந்தனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கில் மிக பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா. இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

‘புஷ்பா’ படத்தில் நாயகியாக நடித்து இவர் போட்ட சாமீ.. சாமீ….. ஆட்டம் மிகப்பெரிய ஹிட்டானது.

‘சுல்தான்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா.

தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய்யின் 66 வது படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா.

இந்த நிலையில் பிரபாஸ் ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என டைட்டில் வைத்துள்ளனர்.

Rashmika Mandana to pair up with Prabhas after Vijay

‘பவர் ஸ்டார்’ நடிக்கும் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி

‘பவர் ஸ்டார்’ நடிக்கும் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2003-ல் ‘உன்னை சரணடைந்தேன்’ என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் சமுத்திரக்கனி.

பின்னர் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2004-ல் ரிலீசான படம் ‘நெறஞ்ச மனசு’ இந்த படத்தையும் இயக்கியவர் சமுத்திரக்கனி தான்.

மேலும் டிவி-க்காக சில சீரியல்களையும் இயக்கியுள்ளார்.

இதன் பின்னர் நாடோடிகள், போராளி, அப்பா, நிமிர்ந்து நில் உள்ளிட்ட படங்களையும் இயக்கி சில படங்களில் நாயகனாகவும் நடித்திருந்தார்.

தற்போது தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமாகி வருகிறார்.

மீண்டும் புரட்சி… ‘நான் கடவுள் இல்லை’..; சமுத்திரக்கனிக்காக குறும்படத்தை பெரிய படமாக மாற்றிய எஸ்ஏசி

அண்மையில் இவரது இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘வினோதய சித்தம்’. தம்பி ராமையாக கதையின் நாயகனாக நடித்திருந்த இந்த படம் கடந்தாண்டு 2021ல் வெளியானது.

தற்போது இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார் சமுத்திரக்கனி.

இதில் தெலுங்கு பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கவிருக்கிறாராம்.

கூடுதல் தகவல்…

இதற்கு முன்பே ‘நாடோடிகள்’ ரீமேக் படத்தை தெலுங்கில் ‘சம்போ சிவ சம்போ’ என்ற பெயரில் இயக்கியிருந்தார் சமுத்திரக்கனி.

மேலும் ‘நிமிர்ந்து நில்’ ரீமேக் படத்தை தெலுங்கில் ‘ஜான்டா பாய் கப்பராஜு’ என்ற பெயரில் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Samuthirakani directs Power Star for his next

கீர்த்தி சுரேஷ்க்கு பிரம்மாண்ட கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்கள்

கீர்த்தி சுரேஷ்க்கு பிரம்மாண்ட கட்-அவுட் வைத்து அசத்திய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான தெலுங்கு படம் ‘சர்காரு வாரி பாட்டா’. பரசுராம் என்பவர் இயக்கிய இந்த படத்தில் மகேஷ்பாபுக்கு ஜோடியாக கீர்த்தி நடித்திருந்தார்.

மே 12ஆம் தேதி இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இந்த படத்தில் தமிழில் காட்டாத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார் கீர்த்தி.

ஷங்கர் இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.; ஹீரோ யார் தெரியுமா?

இசையமைப்பாளர் தமன் இசைக்கு சரியான குத்தாட்டம் போட்டு இருந்தார்.

கீர்த்தியின் ஆட்டத்தையும் நடிப்பையும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கீர்த்தி ரசிகர்கள் அவருக்கு 35 அடி உயரத்தில் கட் அவுட் வைத்து படத்தை கொண்டாடி வருகின்றனர்.

பெரும்பாலும் ஹீரோக்களுக்கு தான் ரசிகர்கள் கட்-அவுட் வைப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் கீர்த்திக்கு ரசிகர்கள் கட்-அவுட் வைத்துள்ளது அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் வைத்துள்ளதாம்.

Keerthy Suresh cut out

Huge cut-out for Keerthi Suresh by her fans in Andhra

விஜய் மகனுடன் டூயட் பாட ஆசைப்படும் நடிகை.; ஓ.. அட்வான்ஸ் புக்கிங்.?

விஜய் மகனுடன் டூயட் பாட ஆசைப்படும் நடிகை.; ஓ.. அட்வான்ஸ் புக்கிங்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன்லாலுடன் விஜய் இணைந்து நடித்த ’ஜில்லா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ரவீனா தாஹா.

இவர் தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் சீசன் 2 சீரியலில் இவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விஜய்யின் மகன் சஞ்சய் வீடியோவை வைரலாக்கும் ‘தளபதி்’ ரசிகர்கள்

விஜய்யின் மகன் சஞ்சய் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் திரையுலகில் நடிகராகவோ அல்லது இயக்குனராகவோ அறிமுகமாவார் என கூறப்படுகிறது.

கனடா நாட்டில் திரைப்பட படிப்பை முடித்துள்ளார் சஞ்சய் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ… இதான் அட்வான்ஸ் புக்கிங் போல!?.. ரைட்டு நடக்கட்டும்..

Raveena Daha

Actress wants to romance with Vijay’s son?

அன்றே சொன்னார் விஜய்ஸ்ரீ.; பெண்கள் பிரச்சினைக்கு ‘ஹரா’ வாய்ஸ்.; முக.ஸ்டாலின் முன்னெடுப்பாரா.?

அன்றே சொன்னார் விஜய்ஸ்ரீ.; பெண்கள் பிரச்சினைக்கு ‘ஹரா’ வாய்ஸ்.; முக.ஸ்டாலின் முன்னெடுப்பாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீண்ண்ண்……ட இடைவெளிக்கு பின் மீண்டும் நாயகனாக நடித்து மோகன் ரீஎன்ட்ரி கொடுக்கவிருக்கும் படம் ’ஹரா’.

மோகன் ஜோடியாக குஷ்பூ நடித்து வருகிறார்.

விஜய்ஸ்ரீ இயக்கி வரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் யோகிபாபு, மனோபாலா, சாருஹாசன், மொட்டை ராஜேந்திரன், ஜெயக்குமார், ரயில் ரவி, ஸ்வாதி, பிருந்தா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மனோ & பிரஹத் ஒளிப்பதிவு செய்ய குணா எடிட்டிங் செய்து வருகிறார்.

பாமரன் முதல் அனைவரும் சட்டத் திட்டங்களை அறிந்திருக்க வேண்டும் என்பதை மையக்கருவாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.

காவி கொடி… கல்லூரி பார்ட்டி.; மோகன் பிறந்தநாளில் விஜய்ஸ்ரீ கொடுத்த ‘ஹரா’ ட்ரீட்

மேலும் பெண் குழந்தைகளுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்ற ஒரு சாதாரண அப்பாவின் கோபமும் இதன் மையப் புள்ளி என கூறப்படுகிறது.

மே 10ல் மோகன் பிறந்தநாளில் இப்பட கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பலரின் பாராட்டை பெற்றது. இதில் காவி கலர் கொடி.. சாருஹாசனின் ‘பால்தாக்ரே’ தோற்றம் ஆகியவை பெரிதாக பேசப்படுகிறது.

இந்த நிலையில் ’ஹரா’ படக்குழுவினர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

“பெண்களுக்கு மூன்று நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க வேண்டும் என்பது ஸ்பெயின் நாட்டில் அமலில் உள்ளதை போல தமிழகத்திலும் மூன்று நாட்கள் விடுமுறை அளித்து நாட்டிற்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மாதம் ’ஹரா’ பட சூட்டிங்கில் மோகன் தனது மகளுக்காக மாதவிடாய் நாட்களில் பள்ளியில் விடுமுறை கேட்கும் காட்சியை படமாக்கினாராம் விஜய்ஸ்ரீ.

கமல் பட பாணியில் ‘ஹரா’ டைட்டில் டீசர்.; மைக் மோகனை ஆக்‌ஷனில் தெறிக்க விடும் விஜய் ஸ்ரீ

தற்போது இது ஒரு நாட்டில் சட்டமாகியுள்ளது.

எனவே தற்போது இந்த கோரிக்கையை தமிழக முதல்வரிடம் வைத்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘ஹரா’வின் இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பரிசீலனை செய்ய முன்னெடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

*கூடுதல் தகவல்..*

ஒவ்வொரு படமும் திரையிடப்படும் போது DISCLAIMER ல்… “புகை பிடித்தல் உடலுக்கு தீங்கு… மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு..” என்ற வாசகங்கள் இடம்பெறும்.

அத்துடன் “பெண்களின் அனுமதியின்றி அவர்களை தொடுவது குற்றம்..” என தான் முதன்முதலாக இயக்கிய ‘தாதா 87’ படத்தில் வாசகம் இடம் பெற செய்தவர் விஜய்ஸ்ரீ என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Haraa director Vijay Sri requests TN CM

More Articles
Follows