பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் இணைந்த நயன்தாரா..

பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் இணைந்த நயன்தாரா..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மலையாளத்தல் சூப்பர் ஹிட்டான படம் ‘லுசிஃபர்’.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கை ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் தமிழ் இயக்குனர் மோகன்ராஜா இயக்கி வருகிறார்.

நயன்தாரா நாயகியாக நடிக்க தமன் இசையமைக்க நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

ஒரே படத்தில் சால்மான்கான் சிரஞ்சீவி இணைவதால் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கும் என நம்பலாம்.

Actress Nayanthara joins with Salman Khan

சாமி காலில் விழுந்தால் ஒன்னும் கிடைக்காது..; செல்ஃபி பிரஸ் மீட்டில் மிஷ்கின் பேச்சு

சாமி காலில் விழுந்தால் ஒன்னும் கிடைக்காது..; செல்ஃபி பிரஸ் மீட்டில் மிஷ்கின் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அசுரன், கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நாயகன் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் மதிமாறன், நடிகர்கள் சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் படக்குழுவினருடன் இயக்குனர்கள் வெற்றிமாறன், மிஷ்கின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

இயக்குனர் மதிமாறன் பேசும்போது…

‘விழாவிற்கு மிஷ்கின் சார் வந்ததில் எனக்கு பெருமை. இது நன்றியுரையாக எடுத்துக் கொள்ளலாம். வெற்றிமாறன் சார் என் குறும்படத்தை பார்த்து என்னை உதவியாளராக சேர்த்துக் கொண்டார். நீ உதவி இயக்குனராக எவ்வளவு வேலை செய்கிறீயோ அது உன் படத்தில் பிரதிபலிப்பாக மாறும் என்றார். அவரிடம் எடுத்த பயிற்சிதான் செல்ஃபி திரைப்படம். தாணு சார் அவர்களைப் பார்த்துதான் படம் எடுக்க வந்தோம். என் தயாரிப்பாளர் சபரிஷ், குணாநிதி இருவருக்கும் ரொம்ப நன்றி.

இது லாபகரமான படமாக இருக்கும். ஜி.வி.பிரகாஷ் சார் ஸ்டிடுயோவில்தான் எனக்கான நிறைய விசயங்கள் நடந்தது. ஜி.வி.பிரகாஷுக்கு ரொம்ப நன்றி. படப்பிடிப்பு தளத்தில் அவர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். ஒளிப்பதிவாளர் விஷ்ணு, எடிட்டர் இளையராஜா உள்பட படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. சுப்பிரமணிய சிவா சாருக்கும் நன்றி. இப்படம் எல்லாருக்கும் பிடிக்கும்” என்றார்.

ஜி.வி.பிரகாஷ் பேசும்போது…

‘அனைவருக்கும் வணக்கம்.. மிஷ்கின், கல்யாணம் சார் உள்ளிட்ட அனைவரின் வருகைக்கும் நன்றி. வெற்றிக்கு நன்றி சொன்னால் அதற்குள் மதிமாறனும் அடங்குவார். என் ஸ்டுடியோவில் முதன் முதலில் சந்திக்கும் போது, இவரோடு படம் பண்ணுவேன் என்று நினைக்க வில்லை. இந்தப்படத்தில் நிறைய விசயங்களைப் பற்றிப் பேசியிருக்கோம்.

நான் நடித்த படங்களைப் பார்க்கும் போது தவறுகளைத்தான் பார்ப்பேன். இந்தப்படம் ரொம்ப நல்லா வந்துருக்கிறது. தாணு சார் இந்தப்படத்திற்குள் வந்த பிறகு வணிக ரீதியான வெற்றிக்குள் வந்துவிட்டது’ என்றார்.

மிஷ்கின் பேசும்போது….

‘ரொம்ப அழகான மாலை இது. என் நண்பன் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் இன்று அங்கீகரிக்கப்படும் மேடை இது. வெற்றிமாறன் எனக்கு கிடைத்த வைரம். என் உதவி இயக்குனர்களிடம் வெற்றிமாறன் ஜெயித்துக்கொண்டே இருப்பான் என்று சொன்னேன். அப்படி வெற்றியின் பட்டறையில் வந்தவன்தான் மதிமாறன்.

மதிமாறனின் முன் வெற்றி தெரிகிறது. தமிழ்நாட்டில் தற்போதைய பெரிய வில்லன் கவுதம்மேனன் தான். யாரையாவது குத்திக்கிட்டே இருக்கிறான். இந்தப்படம் ஒரு கமர்சியல் படமாக இருக்கும். தற்போது இருக்கும் தலைமுறையினரின் பார்வை ரொம்ப அழகாக இருக்கிறது. இந்த டிரைலரில் ஒரு ஷாட்டில் சுப்பிரமணிய சிவா திறமையாக நடித்திருக்கிறார்.

தாணு சார் எனக்கு முதல் படம் முடிந்ததும் 50000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார். இதுவரை பணத்தை திருப்பி கேட்கவில்லை. முதலில் ஒரு கதை சொன்னேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. இளைய தலைமுறை நிறைய பேருக்கு ஆலமரமாக தாணு சார் செயல்படுகிறார். ஜிவி பிரகாஷ் கூட நான் சீக்கிரம் வேலை செய்ய வேண்டும்.

சாமியின் காலில் விழுந்தால் ஒன்றும் கிடைக்காது. என்னை பொருத்தவரை நல்லபடம் எடுப்பவன்தான் சாமி. மதிமாறன் நல்ல படம் எடுத்தால் நிச்சயமாக அவர் காலிலும் விழுவேன்” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.தாணு பேசும்போது…

‘மதிமாறன் இயக்கி இருக்கும் செல்ஃபி படம் கமர்சியலாக இருக்கிறது என்று மிஷ்கின் சொன்னார். அதற்கு நாங்கள் தான் காரணம். படம் பார்த்துவிட்டு கண்கள் பளித்து இயக்குனர் மதிமாறனை கட்டிபிடித்து ஆரத்தழுவார்கள். இந்தப்படம் மூன்று மடங்கு லாபத்தை தரும். அதில் மாற்றமே இல்லை. மதிமாறன் மிகச்சிறப்பான படமாக எடுத்துள்ளார். அடுத்த படம் மதிமாறன் எங்கள் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும்.

ஜி.வி.பிரகாஷுக்கு ஒரு சவாலான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த படம் ஜி.வி.பிரகாஷுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். கவுதம் மேனனின் நடிப்பு ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு. இயக்குனர் மதிமாறன் சொன்ன தேதியில் செலவை குறைத்து சரியாக படத்தை முடித்துக் கொடுத்தார். வெற்றியின் பாதையில் மதிமாறன் பயணித்தால் மிகப்பெரிய வெற்றியை அடைவார்” என்றார்.

வெற்றிமாறன் பேசும்போது….

‘மதிமாறன் சுய மரியாதையுடன் இருப்பவன். ஒரு குறும்படம் எடுத்து என்னிடம் வந்தான். அதைப்பார்த்து விட்டு அவனை என்னோடு சேர்த்துக்கொண்டேன். ஒரு நல்ல சினிமாவிற்கான எனர்ஜி அவனிடம் இருந்தது. ஆடுகளம் படம் ஷூட்டிங்கில் மதிமாறன் ஜூனியர். ஆனால் போஸ்ட் புரொடக்‌ஷன் பணியில் அவன் வேலை ரொம்ப பெரியது. செல்ஃபி படத்தின் படப்பிடிப்பை 29 நாட்களில் முடித்து விட்டான். ஆச்சர்யமாக இருந்தது.

இந்தப்படம் மூன்று மடங்கு லாபம் வரும் என்று தாணு சார் சொன்னார். ரொம்ப பெருமையாக இருக்கிறது. நான் படம் பார்த்து விட்டேன். படத்தில் ஒரு ரா எனர்ஜி இருக்கிறது. படத்தில் கேமரா எடிட்டிங் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இந்தப்படத்தில் கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்திருக்கிறார். டிரைலரை விட படம் சிறப்பாக இருக்கும். மதிமாறனுக்கு நிறைய பாராட்டுக்கள் வரும், கவனமாக இருக்க வேண்டும்.

நமது குறை நிறைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தாணு சார் இந்தப்படத்தை எடுத்துச் செய்யணும் என்று நினைத்ததுதான் நல்ல விசயம். தாணு சார் இப்படத்தை சுற்றி ஒரு விசயத்தைக் கொடுத்திடுவார். அவருக்கு ரொம்ப நன்றி. நான் ஒரு விசயத்தை சொல்லக்கூடாதுன்னு நினைச்சேன். மதிமாறன் எந்த ஒரு இடத்திலும் என் உறவினர் என்பதை காட்டிக்கொள்ளவே இல்லை.

எனக்கு வெற்றிமாறன் என பெயர் வைத்தது மதிமாறனின் அப்பா தான். அவர் என் மாமா. படத்தைப் பார்த்துவிட்டு அவரிடம் பேசினேன். எனக்குப் பிடித்தது என்றேன். நிச்சயமாக இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

குணாநிதி பேசும்போது…

‘2018 ஆம் ஆண்டு தாணு சார் என்னை போனில் அழைத்து, மதிமாறனை அறிமுகம் செய்து வைத்தார். மதிமாறன் சொன்ன கதை எங்களுக்கு மிகவும் பிடித்தது. நாங்கள் படம் தயாரிக்க தாணு சார் மிகவும் உதவினார். தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு படத்தை தயாரித்து தியேட்டரில் வெளியிடுவது மிகவும் கடினம். அது தற்போது சாத்தியம் என்றால், அதற்கு ஒரே காரணம் தாணு சார். ஜி.வி.பிரகாஷ் மிகவும் அன்புக்குரியவர். செல்ஃபி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். மதிமாறன் இயக்கத்தில் நடித்ததது ரொம்ப பெருமையாக இருக்கிறது. வெற்றிமாறன் சார், மிஷ்கின் சார், சுப்பிரமணிய சிவா சார் ஆகியோர் வந்து வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி’ என்றார்.

Mysskin speech at Selfie press meet

பரத்தின் 50வது படத்தை இயக்கும் ‘புலிமுருகன்’ & ‘லூசிபர்’ படங்களின் வசனகர்த்தா

பரத்தின் 50வது படத்தை இயக்கும் ‘புலிமுருகன்’ & ‘லூசிபர்’ படங்களின் வசனகர்த்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பரத்.

திரைத்துறையில் நடிகராக தனது பயணத்தை தொடங்கி பல வெற்றி படங்களை அளித்த நடிகர் பரத் நடிக்கும் 50வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

திரில்லர் கலந்த பேமிலி டிராமா திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் பரத் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். R P பிலிம்ஸ் பிரமாண்டமாக இப்படத்தை தயாரிக்கின்றது.

விவேக் பிரசன்னா, பிக் பாஸ் புகழ் டேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

‘புலிமுருகன்’, ‘லூசிபர்’, மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதிய R.P.பாலா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம்:

இயக்கம் – R.P.பாலா (இவர் இயக்கும் முதல் படம்)
தயாரிப்பு – R.P.பாலா, கௌசல்யா பாலா (R P பிலிம்ஸ்)
ஒளிப்பதிவு – P.G.முத்தையா
இசை – ரான்னி ரபேல் (மரைக்காயர்)
படத்தொகுப்பு – அஜய் மனோஜ்
கலை – சுரேஷ் கலம்பு
சவுண்ட் டிசைனர் – M.R.ராஜா கிருஷ்ணன்
நடனம் – பூபதி
எக்ஸிகியுடிவ் புரொடுயுசர் – ஆண்டொ L
புரொடக்‌ஷன் கண்ட்ரோலர் – S.சிவகுமார்
லைன் புரொடுயுசர் – ஆதவ்
காஸ்டுயூம் டிசைனர் – கஸ்தூரி இரானி
ஸ்டில்ஸ் – ரஞ்சித்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

Bharath 50 announcement here

ஐஸ்வர்யாவின் ‘பயணி’..; லவ் யூ என ரஜினி ட்வீட்.. தோழி என தனுஷ் ட்வீட்

ஐஸ்வர்யாவின் ‘பயணி’..; லவ் யூ என ரஜினி ட்வீட்.. தோழி என தனுஷ் ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு தன் காதல் கணவரான தனுஷை பிரிந்தார் ரஜினி மகள் ஐஸ்வர்யா.

மீண்டும் தனது திரைப்பயணத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.

இதனையடுத்து சில நாட்களில் ‘முசாபிர்’ எனும் காதல் பாடல் வீடியோவை இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினி.

அதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கியுள்ளார்.

இந்த இசை ஆல்பத்திற்கு தமிழில் ‘பயணி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அன்கித் திவாரி இசையமைத்துள்ள இப்பாடலை தமிழில் அனிருத், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த், தெலுங்கில் சாகர், இந்தியில் அன்கித் திவாரி ஆகியோர் பாடியுள்ளனர்.

விரைவில் ஒரு புதிய படம் இயக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ராகவா லாரன்ஸின் துர்கா படத்தை ஐஸ்வர்யா இயக்குவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘பயணி’ வீடியோவை இன்று வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ரசிகர்களின் சில கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டது.

நாயகியின் பெற்றோர் அவர் கண் முன்பே சண்டை போடுகிறார்கள். ஆனால் சிறிது நேரத்தில் சமாதானம் ஆகி ஜோடியாக செல்ஃபி எடுத்து மகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

எனவே விரைவில் பிரிந்த தம்பதியர் இணைவார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.

இந்த பயணி குறித்து ரஜினி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

9 வருட இடைவெளிக்குப் பிறகு என் மகள் ஐஸ்வர்யா இயக்கிய பயணி இசை ஆல்பத்தை வெளியிட்டதில் மகிழ்ச்சி;

நீ எப்போதும் சிறப்பாக இருக்க விரும்புகிறேன், கடவுள் ஆசீர்வதிப்பார், லவ் யூ”

– ரஜினிகாந்த் என பதிவிட்டுள்ளார்.

தனுஷ் தன் ட்விட்டரில்..

Congrats my friend @ash_r_dhanush on your music video #payani

https://t.co/G8HHRKPzfr

God bless

@rajinikanth | @ash_r_dhanush | @soundaryaarajni | #Payani

Rajinikanth launches Aishwrya’s music single

இதயங்களை ரணமாக்கிய ‘ஜெய்பீம்’ வில்லன் இயக்கிய ‘டாணாக்காரன்’ ரிலீஸ் அப்டேட்

இதயங்களை ரணமாக்கிய ‘ஜெய்பீம்’ வில்லன் இயக்கிய ‘டாணாக்காரன்’ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அப்படி டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் அடுத்த பெரிய வெளியீடாக விக்ரம் பிரபு நடிப்பில் டாணாக்காரன் திரைப்படம், வரும் ஏப்ரல் மாதம் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது.

டாணாக்காரன் திரைப்படத்தின் கதைக்களம் 1998ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகம் இதற்கு முன் பல காவல்துறை சார்ந்த திரைப்படங்களைக் கண்டுள்ளது.

ஆனால் டாணாக்காரன் அந்த வகைப் படங்களில் தனித்துவமான, இதுவரை வெள்ளித்திரையில் ரசிகர்கள் பார்த்திராத ஒரு உலகத்தைக் காட்டும்.

அதே போல, நடிகர் விக்ரம் பிரபு இதற்கு முன் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த கதாபாத்திரம் இதுவரை அவர் நடித்த படங்களில் ஒரு மைல்கல்லாக இருக்கும். திரைப்படத்தின் ஒவ்வொரு நடிகர், நடிகையும் தங்களது கதாபாத்திரங்களுக்காக முழு அர்ப்பணிப்போடு கடின உழைப்பைத் தந்துள்ளனர்.

படத்தின் போஸ்டர்களும் டீஸரும் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் ட்ரெய்லரும், இசையும் விரைவில் வெளியாகவுள்ளது.

மாயா, மான்ஸ்டர், மாநகரம் உள்ளிட்ட தனிச்சிறப்பு கொண்ட படைப்புகளை வழங்கிய பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த வருடம் வெளியிடும் முதல் திரைப்படம் இது.

எஸ் ஆர் பிரகாஷ் பாபு, எஸ் ஆர் பிரபு, பி கோபிநாத், தங்க பிரபாகரன் ஆர் உள்ளிட்டோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

முன்னதாக ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்து பெருவாரியான பாராட்டுகளைப் பெற்றிருந்த தமிழ், டாணாக்காரன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இயக்குநர் வெற்றிமாறனிடம் அசோஷியேட் இயக்குநராக பணிபுரிந்திருக்கும் தமிழ், இதற்கு முன் தமிழக காவல்துறையில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்றும் நினைவில் நிற்கும் பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

அஞ்சலி நாயர் நாயகியாகவும், லால், எம் எஸ் பாஸ்கர், லிவிங்க்ஸ்டன் மற்றும் போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 2022ல் டாணாக்காரன் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

Taanaakkaran release update is here

ஹாலிவுட்டுக்கு நிகரானது.. பிரமிப்பான படம்.; குதிரைவாலில் குஞ்சம் வைக்கும் மிஷ்கின் & லோகேஷ்

ஹாலிவுட்டுக்கு நிகரானது.. பிரமிப்பான படம்.; குதிரைவாலில் குஞ்சம் வைக்கும் மிஷ்கின் & லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘குதிரைவால்’. கலையரசன், அஞ்சலி பாட்டீல் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் மற்றும் ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

எழுத்தாளர் ராஜேஷ்குமார் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்றிருக்கும் நிலையில், நாளை (மார்ச் 18) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தை வெளியிட பல ஒடிடி நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், திரையரங்கில் மட்டுமே இப்படத்தை வெளியிடுவேன், என்பதில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் விக்னேஷ் சுந்தரேசன் மற்றும் பா.இரஞ்சித் உறுதியாக இருந்தார்கள்.

காரணம், இப்படத்தை திரையரங்குகளில் பார்க்கும் போது இதுவரை இல்லாத ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்கள் அனுபவிக்க முடியும் என்ற நம்பிக்கையால் தானாம்.

அப்படி ஒரு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருப்பதோடு, சமீபத்தில் வெளியான டிரைலர் எதிர்ப்பார்ப்பை அதிக்கரிக்கவும் செய்திருக்கிறது.

இந்த நிலையில், ‘குதிரைவால்’ படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று படம் பார்த்ததோடு, படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இயக்குநர் மிஷ்கின் படம் குறித்து கூறுகையில்…

“தமிழ் சினிமாவில் நான் இதுவரை பார்த்த திரைப்படங்களிலேயே மிகவும் அறிவுப்பூர்வமான திரைப்படம் ‘குதிரைவால்’. ஒரு இயக்குநர் நான் நினைத்த அறிவுப்பூர்வமான விஷயங்களை திரைப்படமாக கொடுத்திருக்கும் முதல் திரைப்படம் இது தான்.

நான் உள்பட நினைத்ததை 10 சதவீதம் தான் படத்தில் சொல்வோம். ஆனால், இந்த படத்தின் இயக்குநர்கள் தாங்கள் நினைத்ததை 100 சதவீதம் முழுமையாக சொல்லியிருக்கிறார்கள். அதற்கு என் பாராட்டுகள். ஒரு சைக்காலாஜிக்கல் பயணமாகவே இப்படம் இருந்தது.

நான் படம் பார்க்கும் போது எனக்கு புதுவித உணர்வை கொடுத்தது. இந்த படத்தை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு என் நன்றியும், பாராட்டும். இந்த படம் ஆங்கிலப் படத்துக்கு நிகராக இருக்கிறது.

இந்த படத்தின் மேக்கிங் சிறப்பாக இருக்கிறது. பெரிய பெரிய விருதுகள் வாங்குவதற்கு தமிழ் சினிமா வெகு தூரத்தில் இல்லை மிக குறைவான தொலைவில் இருக்கிறது என்பதற்கு இந்த படம் சிறந்த உதாரணம். இந்த படத்தை மிக பொறுமையாக பார்க்க வேண்டும்.

இதுபோன்ற படங்களை பத்திரிகையாளர்களிடம் சேர்க்க வேண்டும். இந்த படத்தை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் யாழி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். பா.இரஞ்சித் தயாரித்த படங்களிலேயே இது தான் மிகச்சிறந்த படம்.” என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் குறித்து கூறுகையில்…

“மிகவும் பிரமிப்பான திரைப்படம். இப்படி ஒரு படத்தை நான் எதிர்ப்பார்க்கவில்லை.

படத்தில் நடித்த நடிகர்கள் அவர்களின் நடிப்பு மற்றும் ஒளிப்பதிவு என அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது. ஒரு வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்களுக்கு நிச்சயம் வித்தியாசமான உணர்வை கொடுக்கும்.” என்றார்.

இந்த நிலையில், ‘குதிரைவால்’ படம் குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் கூறுகையில்…

“தமிழ் சினிமாவில் இது ஒரு புதிய ஆரம்பமாக இருக்கும்.

புற உலகில் இருந்து விலகி அக உலகிற்குள் இருக்கும் ஒரு கலையை பற்றி குதிரைவால் படம் பேசி இருக்கிறது. கனவு, கனவு உலகத்தில் இருக்கும் சுதந்திரம் பற்றி குதிரைவால் காட்சிப்படுத்தி உள்ளது.

வழக்கமான ஹீரோ வில்லன் கதையாக இல்லாமல், பார்ப்பவர்கள் பர்சனலாக கனெக்ட் செய்து கொள்ள கூடிய அளவில் படம் இருக்கும். திரையரங்குகளில் குதிரைவால் படம் தரும் புதிய அனுபவம் பேசப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

Lokesh and Mysskin praises Kuthiraivaal movie

More Articles
Follows