RRR படம் & ராஜமௌலியின் தீவிர ரசிகன் நான்.; ஹாலிவுட் இயக்குனர் ஓபன் டாக்

RRR படம் & ராஜமௌலியின் தீவிர ரசிகன் நான்.; ஹாலிவுட் இயக்குனர் ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நேற்றிரவு, ராஜமௌலி லாஸ் எஞ்செல்ஸ் இல் நடந்த கவர்னர்ஸ் விருது விழாவில் கலந்து கொண்டார்.

உலகம் முழுவதும் அறியப்பட்ட பல திரைப்பட படைப்பாளிகளை சந்தித்தார்.

அவர் ஸ்டார் வார்ஸ், மிஷன் இம்பாசிபிள் குறிப்பிடத்தக்க ஹாலிவுட் திரைப்படங்களின் இயக்குனர் ஜேஜே ஆப்ராம்ஸை சந்தித்தார், அவர் RRR இன் மிகப்பெரிய ரசிகர் என்று ராஜமௌலியிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.

RRR உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ஜேஜே ஆப்ராம்ஸ் போன்ற பெரிய ஜாம்பவானிடம் இருந்து பாராட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாக சைதன்யாவின் ‘NC22’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியீடு…!

நாக சைதன்யாவின் ‘NC22’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியீடு…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘NC22’ என்று அழைக்கப்பட்டது.

நடிகர் நாக சைதன்யா இன்று நவம்பர் 23 தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பை வெளியிட்டுள்ளனர்.

நாக சைதன்யா, கிருத்தி ஷெட்டி நடிக்கும் படத்துக்கு ‘கஸ்டடி’ என்று பெயர் வைத்துள்ளனர்.

மேலும், பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நாக சைதன்யா ஒரு போலீஸ்காரராக உள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரித்துள்ளார்.

Naga Chaitanya’s ‘NC22’ of First look poster and title released

ராதாவை கட்டியணைத்து திடீர் முத்தமிட்ட சிரஞ்சீவி

ராதாவை கட்டியணைத்து திடீர் முத்தமிட்ட சிரஞ்சீவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் இந்திய சினிமாவின் 80களின் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் மீண்டும் இணைவதற்காக ஒன்றாகக் கூடினர் .

நடிகை ராதாவின் அட்டகாசமான நடனம் அவருக்கு மெகாஸ்டாரின் முத்தத்தைப் பெற்றது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை லிஸ்ஸியால் தொடங்கப்பட்ட, இந்த நிகழ்வில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றுகூடி, தங்களின் இனிய நினைவுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்கின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் மும்பையில் 2022 நிகழ்வு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘மின்னல் முரளி’ இயக்குனருடன் ‘ஹிருதயம்’ நாயகி இணைந்த ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ மெகா ஹிட்

‘மின்னல் முரளி’ இயக்குனருடன் ‘ஹிருதயம்’ நாயகி இணைந்த ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ மெகா ஹிட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Cheers Entertainments சார்பில் லக்ஷ்மி வாரியர் & கணேஷ் மேனன் தயாரிப்பில், விபின் தாஸ் இயக்கத்தில், பாசில் ஜோசப் மற்றும் தர்ஷனா ராஜேந்திரன் முதன்மை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே”.

கடந்த மாதம் 28 ஆம் தேதி கேரளா மற்றும் GCC திரையரங்குகளில் வெளியான இப்படம், பார்வையாளர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் சமீபத்திய மலையாள சினிமாவின் சாதனைகளை தகர்த்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

இயக்குனர் விபின் தாஸ், நஷித் முகமது ஃபாமியுடன் இணைந்து இப்படத்தை எழுதியுள்ளார்.

இத்திரைப்படத்தில் பாசில் ஜோசப், தர்சனா ராஜேந்திரன், ஆனந்த் மன்மதன், அஜீஸ் நெடுமங்காட், சுதீர் பரவூர் ஆகியோருடன், பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஹீரோ பாசில் ஜோசப் (Basil Joseph), மின்னல் முரளி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் உலக அளவில் பிரபலமானவர்.

மற்றும் நாயகி தர்ஷனா ஹிருதயம் படத்தின் மூலம் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.

அனைவரும் ரசிக்கும்படியான முழுமையான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள படம் தான் “ஜெய ஜெய ஜெய ஜெய ஹே”.

இப்படம் ராஜேஷ் & ஜெயா தம்பதியினரின் திருமண வாழ்க்கைக்குப் பிறகு அவர்களுக்குள் நிகழும் கதையை சொல்கிறது. மிகவும் அவசியமான ஒரு சமூகப் பிரச்சினையை அசத்தலான நகைச்சுவையுடனும், அனைத்து தாக்கங்களுடனும் எடுத்துச் சென்றதில் இயக்குனர் மிகச் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளார்.

இப்படம் இந்த ஆண்டில் (2022) மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறி சாதனை படைத்து வருகிறது. “ஜெய ஜெய ஜெய ஹே” திரைப்படம் கேரளா மற்றும் GCC யின் ஆரம்ப வெளியீட்டில் இருந்து மட்டும் ஏறக்குறைய 35 கோடிகளை வசூலித்துள்ளது.

தற்போது மேலும் இப்படத்திற்கான திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடதக்கது. இந்தத் திரைப்படம் பிளாக்பஸ்டராக உருவானது மட்டுமல்லாமல், விமர்சகர்களிடமிருந்து அமோகமான விமர்சனங்களையும் பெற்றது.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே நவம்பர் 11, 2022 அன்று இந்தியாவின் பிற மாநிலங்களில் வெளியாகி, பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. கேரளாவில் முதல் நாளிலேயே இப்படம் சுமார் 85 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தொழில் நுட்ப குழு
ஒளிப்பதிவு : பப்லு அஜு, இணை எழுத்தாளர்: நஷித் முகமது ஃபேமி, எடிட்டர்: ஜான்குட்டி, இசையமைப்பாளர்: அங்கித் மேனன், ஆக்சன் இயக்குனர்: பெலிக்ஸ், கலை இயக்குனர்: பாபு பிள்ளை.

‘சில்லா… சில்லா…’ சாங் சூட்டிங்.; ட்ரெண்டிங் செய்யும் அஜித் ரசிகர்கள்

‘சில்லா… சில்லா…’ சாங் சூட்டிங்.; ட்ரெண்டிங் செய்யும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘துணிவு’.

இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

நாயகியாக மஞ்சுவாரியர் நடித்து வருகிறார்.

‘துணிவு’ படத்தை அடுத்த ஆண்டு 2023 பொங்கல் தினத்தில் வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில் இன்று சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் ‘சில்லா.. சில்லா..’ என்ற பாடலை படமாக்கி வருகிறது படக்குழு.

கல்யாண் இந்த பாடலுக்கு நடனம் அமைக்க உள்ளார். அனிருத் இந்த பாடலை பாட வைஷாக் என்பவர் பாடலை எழுதியிருக்கிறார்.

இந்த பாடல் ‘ஆலுமா டோலுமா…’ என்ற பாடல் போல தர லோக்கலாக இருக்கும் என ஏற்கனவே கல்யாண் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை முதலே சில்லா சில்லா என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

Ajith’s thunivu movie ‘Chilla chilla’ Song Trending

‘எல்லாம் ஓகே வா.. ‘ஓநாய்’ ஓடி வருது..; 3டி-யில் ஓட்டும் ஸ்டுடியோ கிரீன்

‘எல்லாம் ஓகே வா.. ‘ஓநாய்’ ஓடி வருது..; 3டி-யில் ஓட்டும் ஸ்டுடியோ கிரீன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் ‘பெடியா’ (ஓநாய்) திரைப்படத்தில் இருந்து ‘எல்லாம் ஓகே வா!’ எனும் உற்சாகமூட்டும் புதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

பெடியா திரைப்படத்தை நவம்பர் 25 அன்று தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகன் வருண் தவான் மற்றும் அவரது நம்பிக்கை மிகுந்த ஓநாய் நண்பர்கள் பழைமையான கார் ஒன்றில் மகிழ்ச்சியான சாலைப் பயணம் மேற்கொள்வது போன்று ‘எல்லாம் ஓகே வா!’ பாடல் அமைந்துள்ளது.

‘எல்லாம் ஓகே வா!’ பாடலை உற்சாகத்துடன் பாடிகொண்டே வருண் தவான், அபிஷேக் பானர்ஜி மற்றும் பாலின் கபக் உள்ளிட்டோர் அருணாச்சலப் பிரதேசத்தின் இயற்கை எழில் மிகு சாலைகளில் பயணிக்கின்றனர்.

மூன்று நண்பர்களுக்குள் உள்ள ஒற்றுமையையும் நட்பையும் இப்பாடல் நன்றாக பிரதிபலிக்கிறது.

அவர்கள் பயன்படுத்தும் பழைய மாருதி 800 கார் கடந்த காலத்தை கச்சிதமாக நினைவுப்படுத்துகிறது. சூழலுக்கு ஏற்ப இசையும், பாடல் வரிகளும் இரண்டற கலந்து கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக அமைந்துள்ளன.

பெடியா

சச்சின்-ஜிகார் இசையில், அமிதாப் பட்டாச்சார்யா மற்றும் எஸ் சுனந்தனின் வரிகளில் உருவான பாடலை சந்தோஷ் ஹரிஹரன், வேலு மற்றும் கே ஜே ஐயனார் பாடியுள்ளனர்.

பாடலை பற்றி பேசிய இசை அமைப்பாளர்கள் சச்சின்-ஜிகார்…

“இளமை ததும்பும், உற்சாகமூட்டும் பாடலாக ‘எல்லாம் ஓகே வா!’ அமைந்துள்ளது. புதுமையான மெட்டுடனும், புத்துணர்ச்சி தரும் வரிகளுடனும் இசையின் மாயாஜலத்தை வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் இருக்கிறது,” என்றனர்.

‘பெடியா’ திரைப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியிடப்பட்ட மூன்று பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில், தற்போது வெளியாகி உள்ள ‘எல்லாம் ஓகே வா!’ பாடலும் வெற்றி பட்டியலில் இணைந்து பயணத்திற்கு உகந்த நண்பனாக திகழும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், வருண் தவான், கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ நடித்துள்ள ‘பெடியா’ நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஸ்டுடியோ கிரீன் வெளியிட உள்ளது.

https://bit.ly/EllamOkVa

எங்கிட்ட சொல்லுங்க, #EllamOkVa?

?’s road trip song is out now.
#Bhediya

https://bit.ly/EllamOkVa

@Varun_dvn @kritisanon @Deepakyahanhai @nowitsabhi #PaalinKabak #DineshVijan @nirenbhatt @Soulfulsachin @JIGARSARAIYA @SachinJigarLive @santoshhariharan #Velu #Kjiyenar

.@OfficialAMITABH @VijayGanguly
#SSunandhan @MaddockFilms @jiostudios @ZeeMusicCompany @StudioGreen2 @kegvraja @onlynikil

பெடியா

Bhediya tamil version will be released by studio green in tamil nadu

More Articles
Follows