தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான்.
சல்மான் கான் தற்போது ‘டைகர் 3’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
தொடர்ந்து கொலை மிரட்டலை சந்தித்து வருகிறார்.
அண்மையில் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொன்று விடுவதாக மிரட்டல் அழைப்பு ஒன்று வந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வந்தனர்.
இந்த விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்ததையடுத்து சல்மான்கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் குழுவில் ஒருவரான கோல்டி பிரார்.
இவர் தற்போது நடிகர் சல்மான்கானுக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து கோல்டி பிரார் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் சல்மான்கானை நிச்சயமாக கொல்வோம். லாரன்ஸ் பாய் தான் விரும்பினால் மட்டுமே கருணை காட்டுவார்.
நாங்கள் முன்பே கூறியதுபோல் சல்மான் கான் மட்டுமல்ல, நாங்கள் உயிருடன் இருக்கும்வரை எங்கள் எதிரிகள் அனைவருக்கும் எதிராக எங்கள் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம்” என்று கூறினார்.
Gangster Goldy Brar says they will surely kill Salman Khan