தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான்.
சல்மான் கான் தற்போது ‘டைகர் 3’ படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘டைகர் 3’ ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸின் ஒரு பகுதியாகும்.
இப்படத்தை இயக்குனர் மனீஷ் சர்மா இயக்குகிறார்.
இந்நிலையில், இன்று நடிகர் சல்மான் கானின் இடது தோளில் காயம் ஏற்பட்டுள்ளது.
“ஐந்து கிலோ எடையுள்ள டம்பல்” தூக்கும் போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் காயத்தின் வலியைக் குறைக்க அவர் பேண்டேஜ் அணிந்துள்ளது தெரிகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சல்மான் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
மேலும், ‘டைகர் 3’ படம் வரும் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
salman khan left hand bone broken