தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் `மாரி-2′
இப்படத்தில் சாய்பல்லவி நாயகியாக நடித்து வருகிறார்.
இப்படத்தில் கிருஷ்ணா, வரலட்சுமி, டோவினோ தாமஸ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ டிரைவராக நடிக்கிறாராம்.
அதற்காக சில நாட்கள் ஆட்டோ ஓட்டி சிறப்பு பயிற்சியும் எடுத்து இருக்கிறார் சாய்பல்லவி.
ஜூலை மாதத்திற்குள் சூட்டிங்கை முடித்து நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஆட்டோ டிரைவர் என்றாலே ரஜினியின் பாட்ஷா படம்தான் பலருக்கும் நினைவுக்கு வரும். இனி சாய் பல்லவியும் வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.