ரஜினி – விஜய் ஸ்டைலில் ஆட்டோக்காரனாக மாறிய சிம்பு

ரஜினி – விஜய் ஸ்டைலில் ஆட்டோக்காரனாக மாறிய சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த ‘பாட்ஷா’ படத்தில் இடம்பெற்ற ஆட்டோக்காரன் பாடலை யாராலும் மறக்கவே முடியாது.

அந்த பாடல் இன்று வரை பல ஆட்டோ அண்ணாக்களின் தேசிய கீதமாகவே மாறிவிட்டது.

ரஜினியை போலவே பலர் அந்த ஸ்டைலில் ஆட்டோ டிரைவராகவே வலம் வருகின்றனர்.

அதுபோல் ‘வேட்டைக்காரன்’ படத்தில் விஜய்யும் ஆட்டோ டிரைவராக நடித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் சிலம்பரசனும் ஆட்டோக்காரனாக மாறிய வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது சூட்டிங்கில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் சிம்பு செம ஸ்டைலாக இருக்கிறார்.

Simbu follows Rajinikanth and Vijay style

ராஜேஷ் இயக்கத்தில் மீண்டும் ஹன்சிகா..; சாந்தனு & முகேன்ராவ் கூட்டணி

ராஜேஷ் இயக்கத்தில் மீண்டும் ஹன்சிகா..; சாந்தனு & முகேன்ராவ் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை இந்தியா 2022 : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தமிழ் தனது அடுத்த தமிழ் இணைய தொடரான “மை3” தொடரை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது.

தமிழில் வித்தியாசமான முயற்சியாக, ஒரு ரோபோடிக் காதல் கதையாக உருவாகும் இந்த தொடர் ரொமான்ஸ் காமெடி வகையில் பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

ட்ரெண்ட்லவுட் தயாரிக்கும் இந்த இணைய தொடரை தமிழ் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர் ராஜேஷ் M இயக்குகிறார். பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஆஷ்னா ஜவேரி, ஜனனி ஐயர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கணேசன் இசையமைக்கிறார். ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார்.

பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ள இந்த தொடரின் “மை3” தலைப்பை நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ் பிக்பாஸ் ஹவுஸில் போட்டியாளர்களுடன் இணைந்து வார இறுதி நிகழ்ச்சியில் வெளியிட்டனர்.

இது குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியதாவது…

இந்த தொடரில் பங்குகொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. இயக்குநர் ராஜேஷ் அவர்களுடன் பணிபுரிவது மிக இனிமையான அனுபவம், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு பிறகு அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. உலகளவில் பிரமாண்ட படைப்புகளை தந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனத்தில் நானும் பங்கு பெறுவது பெருமை.

இது என்னுடைய முதல் இணைய தொடர். நடிகர்கள் முகேன் ராவ், சாந்தனு போன்ற இளம் திறமையாளர்களுடன் வேலை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த தொடர் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அதே நேரம், ஒரு புதுமையான அனுபவத்தையும் தரும். இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், ஒரு புதுமையான ரொமான்டிக் காமெடி பயணத்திற்கு தயாராகுங்கள்.

எங்கள் தொடரின் தலைப்பை தமிழகத்தின் மிக வெற்றிகரமான நிகழ்ச்சியில் வெளியிடுவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வாய்ப்பை தந்த டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்திற்கு நன்றி.

நடிகர் முகேன் ராவ் கூறியதாவது…

நான் இயக்குனர் ராஜேஷ் மற்றும் அவரது படங்களின் பெரிய ரசிகன். அவரது திரைப்படங்களைப் பார்த்து மனதார சிரித்திருக்கிறேன், அதுபோன்ற ஒரு படத்தில் நடிக்க விரும்பினேன்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக ராஜேஷ் சாருடன் கைகோர்க்க டிஸ்னி+ ஹாட்ஸ்டார் எனக்கு வழங்கிய வாய்ப்பைப் பெற்றேன்.

மேலும் அவருடன் பணிபுரிவது ஒரு இனிமையான அனுபவம். இந்த வாய்ப்பு எனக்கு மிகப்பெரியது. இந்த வாய்ப்பை வழங்கிய டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு நன்றி. இந்தத் தொடர் பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும்.

இயக்குநர் ராஜேஷ் M கூறியதாவது…

“இணைய தொடர் இயக்குவது எனக்கே முற்றிலும் புதிதான அனுபவம். மக்களின் திரை அனுபவம் நிறைய மாறிவிட்டது. ஒரு திரைப்படம் சென்றடைவதை விட, மிக அதிக வேகத்தில் இணைய தொடர் மக்களை சென்றடைந்து விடுகிறது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்று உலகமெங்கும் கோலோச்சும் நிறுவனத்தில் எனது முதல் இணைய தொடரை இயக்குவது மிக பெருமையாக உள்ளது. தமிழ் இணைய தொடர்களின் போக்கை மாற்றி புதிய அனுபவங்களை அளித்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில், ‘மை3’ தொடர் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். இது ஒரு ரொமான்ஸ் காமெடி தொடர், இன்றைய இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் காமெடி கலந்த ஜனரஞ்சக தொடராக இருக்கும். பிக்பாஸ் ஹவுஸில் எங்கள் தொடரின் டைட்டில் வெளியானது மகிழ்ச்சி.

“மை3″ தொடர் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். “மை 3” டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

Director Rajesh and Hansika joins for Hot star specials

மோடியின் பாராட்டைப் பெற்ற ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட நிறுவனத்தின் அடுத்த படம்

மோடியின் பாராட்டைப் பெற்ற ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட நிறுவனத்தின் அடுத்த படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனித குலத்தில் கொடூரமான முறையில் நடைபெற்று வரலாற்றில் மறைக்கப்பட்ட இரண்டு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, இரண்டு திரைப்படங்களை தயாரிப்பதற்காக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் நிறுவனமும், ஐ அம் புத்தா புரொடக்சன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனமும் ஒன்றிணைகின்றன.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஐ அம் புத்தா புரொடக்ஷன்ஸ் எனும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து வழங்கின.

இந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மேலும் இரண்டு நேர்மையான கதைகளை சொல்ல இவ்விரண்டு பட தயாரிப்பு நிறுவனங்களும் மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறது.

இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில் தொடங்கப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் வெளியான பிறகு இந்தியா முழுவதும் விவாதத்திற்குரிய பேசுபொருளாக மாறியது. 1990களில் காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை இதயத்தை அதிரச் செய்யும் வகையில் இதன் கதை அமைந்திருந்தது.

ரவிதேஜாவின் ‘டைகர்’ படத்தை வழங்கும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பாளர்

மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள், நேர்த்தியான பாணியில் விவரிக்கப்பட்ட திரைக்கதை, ஆகியவை குறித்து இன்றும் போதுமான அளவில் விவாதங்கள் தொடர்கிறது.

இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி, தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் மற்றும் நடிகை பல்லவி ஜோஷி ஆகியோர் இதன் மூன்று பாகங்களையும் நிறைவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

250 கோடி ரூபாய் வசூலித்து ‘வசூல் கிளப்’பில் இணைந்திருக்கும் ‘ தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரையுலக வணிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் இப்படத்தை பாராட்டியிருக்கின்றனர். இதனால் இந்த கூட்டணியின் அடுத்த பட அறிவிப்பிற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தேஜ் நாராயன் அகர்வால் வழங்க, அபிஷேக் அகர்வால், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி மற்றும் பல்லவி ஜோஷி ஆகியோர் இந்த இரண்டு படங்களையும் தயாரிக்கின்றனர்.

தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை மையமாகக் கொண்டு வெளியாகவிருக்கும் இரண்டு படங்கள் தொடர்பான கூடுதல் விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Abhishek Agarwal Arts & I am Buddha Production To Reunite To Tell 2 More Brutally Honest Tales Of Humanity

‘நானே வருவேன்’ ஓவர்.; ‘வாத்தி’-யை அடுத்து பான் இந்தியா படத்தில் தனுஷ்

‘நானே வருவேன்’ ஓவர்.; ‘வாத்தி’-யை அடுத்து பான் இந்தியா படத்தில் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனது அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து முடித்துஉள்ளார் தனுஷ். சூட்டிங் மெடிவடைந்து விட்டதாக இன்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதன் பின்னர் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் வாத்தி படத்திலும் நடிக்க இருக்கிறார் தனுஷ.

‘வடசென்னை 2’ மற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2′ படங்களும் தனுஷ் கைவசம் உள்ளன.

இதனிடையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் தனுஷ்

இப்படத்தை ‛ராக்கி’ படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார்.

இதறன் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளது.

1930ல் நடக்கும் கதைக்களம் எனவும் கூறப்படுகிறது.

இதில் வில்லனாக பிரபல நடிகர் விநாயகன் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு ‛கேப்டன் மில்லர்’ என டைட்டிலை படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இது உருவாகும் எனவும் தகவல் வந்துள்ளன.

Dhanush’s next with Rocky director reportedly titled Captain Miller

ஷங்கர் – லிங்குசாமி வரிசையில் இணைந்த டைரக்டர் ஹரி

ஷங்கர் – லிங்குசாமி வரிசையில் இணைந்த டைரக்டர் ஹரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மைக்காலமாக தமிழ் சினிமா ஹீரோக்கள் நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விஜய் தனுஷ் சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா ஒரு படங்களில் நடித்து வருகின்றனர். இவை தமிழிலும் தயாராகி வருகிறது.

ஹீரோக்களை போல தமிழ் சினிமா டைரக்டர்களும் நேரடி தெலுங்கு படங்களை இயக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் லிங்குசாமி ஆகியோர் தெலுங்கில் புதிய படங்களை இயக்கிவருகின்றனர்.

தற்போது இந்த வரிசையில் இயக்குனர் ஹரியும் இணைகிறார்.

தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தை ஹரி இயக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

தற்போது அருண் விஜய் & ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘யானை’ படத்தை தமிழில் இயக்கியுள்ளார் ஹரி.

வருகின்ற மே 6ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

Is Tamil director Hari collaborating with Tollywood’s action hero ?

மாஸ் காட்டும் டான்.; சிவகார்த்திகேயனின் 2 படங்களை வாங்கிய பிரபல நிறுவனங்கள்

மாஸ் காட்டும் டான்.; சிவகார்த்திகேயனின் 2 படங்களை வாங்கிய பிரபல நிறுவனங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ படம் மே மாதம் 13ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ் & தெலுங்கில் உருவாகும் தன் 20வது படத்தில் நடித்து வருகிறார் சிவா.

இதன் படப்பிடிப்பு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் நடைபெற்றது. அப்போது புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார் சிவகார்த்திகேயன்.

சம்பள பாக்கியை கேட்டு 3 ஆண்டுகளாக ஏன் வழக்கு போடவில்லை.?.; சிவகார்த்திகேயனுக்கு கோர்ட் கேள்வி

இந்த நிலையில் லைகா உடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த ‘டான்’ படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழக விநியோக உரிமையை வாங்கியது.

இந்த செய்தியை நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இதனையடுத்து சிவகார்த்திகேயனின் 20வது படத்தை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.

இந்த இரண்டு படங்களுக்குமே பெரிய விலை கொடுக்கப்பட்டு உள்ளதாம்.

SK20வது படத்தின் சூட்டிங் இன்னும் பாதி கூட முடிவடையாத நிலையில் நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதை கோலிவுட்டே ஆச்சர்யத்துடன் பார்க்கிறது.

ம்ம்ம…. நிஜமாவே மாஸ் காட்டுகிறார் டான் .

Sivakarthikeyan’s next 2 films TN theatrical rights sold out

More Articles
Follows