தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் அனிருத் இசையில் தனுஷ் நடிப்பில் உருவான ‘3’ படத்தில் இடம்பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி….’ பாடல் யூட்டியுப்பில் சாதனை படைத்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.
இதனால் தனுஷ் பட பாடல்களுக்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
அதனை நிரூபிக்கும் வகையில் தனுஷின் திரைப்படப் பாடல்கள் நிறைய யூட்யூப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
தற்போது மாரி படத்தில் இடம்பெற்ற தர லோக்கல் பாடலும் பெரும் சாதனை படைத்துள்ளது.
தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் மாரி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தரலோக்கல் பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தனுஷின் 100 மில்லியன் கிளப் பட்டியலில் இணைந்துள்ளது
இதற்கு முன்பு ஒய் திஸ் கொலவெறி டி (309 மில்லியன்), டானு டானு (173 மில்லியன்), மறுவார்த்தை பேசாதே (133மில்லியன்) மற்றும் ரவுடி பேபி (1.3 பில்லியன்) ஆகிய பாடல்கள் யூட்யூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது 5வது முறையாக தனுஷ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ரசிகர்கள் #MaariTharalocalHits100MViews என ஹாஸ்டாகை பயன்படுத்தி டிரெண்ட் செய்தனர்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால், ரோபோ சங்கர் ஆகியோர் நடிப்பில் 6 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் மாரி என்பது குறிப்பிடத்தக்கது.
MAARI THARA LOCAL Video Song Crossed 100 MILLION Views On Youtube