தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய திரைப்பட முன்னணி பாடகர்களில் ஒருவர் விஜய் யேசுதாஸ்.
இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் துளு மொழிகளில் பாடியுள்ளார்.
மேலும் தமிழில் ‘படைவீரன்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக பாரதிராஜாவுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் நாயகியாக அம்ரிதா நடித்திருந்தார்.
மேலும் தனுஷின் ‘மாரி’ படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் பாடகர் விஜய் யேசுதாஸ் நாயகனாக நடித்துள்ள மற்றொரு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விஜய் யேசுதாஸ் நடித்த ‘சால்மன் 3-டி’ தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட 7 மொழிகளில் தயாராகி உள்ளது.
இப்படத்தை 3டி கிளாஸ் அணிந்து கொண்டு தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோனிதா தோடா நாயகியாக நடிக்க இப்படத்தை ஷலீல் கல்லூர் என்பவர் இயக்கி உள்ளார்.
ராஜீவ் பிள்ளை மற்றும் தன்வி கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராகுல் மேனன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார்.
இந்தியாவில் கேரளா, துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30-முதல் தியேட்டர்களில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.
Vijay Yesudas Salmon 3D movie release date update