தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் கடந்த வாரம் மார்ச் 25ல் உலகமெங்கும் வெளியானது ஆர்ஆர்ஆர் திரைப்படம்.
பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இயக்கிய இந்த படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய்தேவ்கான், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மரகதமணி இசையமைத்திருத்தார்.
இப்படம் ரிலீசான முதல் நாள் முதலே வசூல் வேட்டையாடி வருகிறது.
இந்த படத்தை பார்த்த இயக்குனர் ஷங்கர் அவர்கர் ராஜமௌலியை மகா ராஜா மவுலி என பாராட்டியிருந்தார்.
மூன்று நாட்களில் RRR படம் 500 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதன் 3 படங்களின் மூலம் 500 கோடி வசூல் படங்களைக் கொடுத்து ஹாட்ரிக் அடித்துள்ளார் ராஜமௌலி.
இவர் இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி 1’ படத்தின் மொத்த வசூல் 710 கோடியை எட்டியது. பின்னர் வெளியான ‘பாகுபலி 2’ படத்தின் வசூல் 1600 கோடியை வசூலித்தது என்று கூறப்பட்டது.
தெலுங்கில் தயாரான ஆர்ஆர்ஆர் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு உலகமெங்கும் வெளியானது. தமிழகத்தில் மட்டும் 550 தியேட்டர்களில் இந்த படத்தை லைகா வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
‘பாகுபலி 2’ படங்களின் வசூலை ஆர்ஆர்ஆர் படம் முறியடிக்குமா.? என்பதை காத்திருந்து பார்ப்போம்..
RRRMovie has crossed 500 crores worldwide