ஷாருக்கானின் ‘ஜவான்’.; ஜகா வாங்கிய விஜய்.; RRR பட நடிகரை தேடிய அட்லி

ஷாருக்கானின் ‘ஜவான்’.; ஜகா வாங்கிய விஜய்.; RRR பட நடிகரை தேடிய அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜவான்’.

இப்படத்தை அட்லி இயக்க ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அனிருத் இசையமைக்கிறார்

இதில் உள்ள ஒரு கெஸ்ட் ரோலில் விஜய்யை நடிக்க வைக்க திட்டமிட்டாராம் அட்லி.. ஆனால் விஜய் மறுக்கவே தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிடம் பேசினாராம்.

அவரும் மறுத்த நிலையில் ஆர்ஆர்ஆர் பட நடிகர் ராம்சரணிடம் அட்லீ பேசி வருவதாகக் கூறப்படுகிறது.

ஜவான்

director atlee has approached ramcharan to play a cameo in jawan

விரைவில் விஜயகாந்துக்கு பாராட்டு விழா.; விஷால் அறிவிப்பு.; பின்னணி இதுதான்.!

விரைவில் விஜயகாந்துக்கு பாராட்டு விழா.; விஷால் அறிவிப்பு.; பின்னணி இதுதான்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், சுனில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்க் ஆண்டனி’.

ஆதித் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இன்று மார்ச் 8 மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் சங்க பொதுச் செயலர் விஷால் பேசும்போது…

“நடிகர் சங்க கட்டிடத்தின் பத்திரத்தை மீட்டுக்கொடுத்தது நடிகர் விஜயகாந்த். அந்த இடத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்துவதுதான் சரியாக இருக்கும். ஓராண்டுக்குள் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு அதன்பின்னர் பாராட்டு விழா எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Appreciation ceremony for Vijayakanth soon

‘அகிலன்’ படத்தின் அதிகாரப்பூர்வ FDFS டைமிங் இதோ

‘அகிலன்’ படத்தின் அதிகாரப்பூர்வ FDFS டைமிங் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘அகிலன்’.

இப்படத்தில் தான்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது.

‘அகிலன்’ படம் மார்ச் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளுக்கு வருகிறது.

இந்நிலையில், ஜெயம் ரவியின் ‘அகிலன்’ FDFS நிகழ்ச்சி காலை 7 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

FDFS show timing for ‘agilan’ movie is here

கடலுக்குள் சூட்டிங்.. வில்லனுக்கு ரொமான்ஸ்.. போர்க்கப்பலில் படம் – இயக்குநர் பிராஷ்

கடலுக்குள் சூட்டிங்.. வில்லனுக்கு ரொமான்ஸ்.. போர்க்கப்பலில் படம் – இயக்குநர் பிராஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆபரேஷன் அரபைமா’ என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் முன்னாள் கப்பல்படை வீரர் பிராஷ்.

இதில் ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது இயக்குநர் பிராஷ் பேசியதாவது…

போர்க்கப்பலில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் ஆபரேஷன் அரபைமா வாகத்தான் இருக்கும். நாம், இப்படத்தை கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் மூலம் எடுத்திருக்க முடியும். ஆனால், உண்மையான கப்பல்களை காட்டும் அழகு வராது. ஆனால், அந்த சவால்களையும் செய்துள்ளோம்.

ஆபரேஷன் அரபைமா

கடலில் ஒரு காட்சியை படம் பிடிப்பது கடினம். கடல் சீற்றம், காற்று என அனைத்தையும் கணித்து படம் பிடிக்க வேண்டும். நாங்கள் அதை செய்துள்ளோம்.

17 லொகேஷன்களை இப்படத்தில் காட்டியுள்ளேன். நம் நாட்டிற்கு புதியதாக அறிமுகமாகவிருக்கும் போதை பொருளின் பாதிப்பை சொல்லும் படம் தான் இது.

இப்படத்தில் நாயகனுக்கு காதலிக்கவே நேரமில்லை. ஆனால், வில்லன் காதலிக்கிறார், அவருடைய தம்பி ரொமான்ஸ் செய்கிறார். நிச்சயமாக படம் உங்களுக்குப் பிடிக்கும். மற்றபடி நீங்கள் படம் பார்த்துவிட்டு சொல்லவேண்டும். அதற்காக நான் காத்திருக்கிறேன் என்றார்.

ஆபரேஷன் அரபைமா

Shooting in the sea.. Romance for the villain.. – Director Prash

அப்துல் கலாம் சுயசரிதையில் விக்ரம்.; முன்னாள் கப்பல்படை வீரர் பிராஷ் உறுதி

அப்துல் கலாம் சுயசரிதையில் விக்ரம்.; முன்னாள் கப்பல்படை வீரர் பிராஷ் உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி. நடராஜன் வழங்கும் ‘ஆபரேஷன் அரபைமா’ படத்தை தயாரித்து இயக்கியுள்ளார், முன்னாள் கப்பல்படை வீரர் பிராஷ். ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் 07.03.2023 நேற்று நடைபெற்றது.

அந்த விழாவில் கலந்து கொண்ட அப்படகுழுவினர் பேசியதாவது

இயக்குநர் பிராஷ் பேசும்போது,

நேற்று என் படத்தின் ட்ரைலரை முதன் முதலாக பிரசாத் லேப் தியேட்டரில் செக் பண்ணும்போது பார்க்கையில் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டேன்.

ஊரில் எனது அம்மா பெயரில் ஒரு திரையரங்கம் இருந்தது. என் அப்பாவை சிலர் ஏமாற்றி விட்டார்கள். அந்த திரையரங்கத்தை அபகரித்துக்கொண்டார்கள். ஆனாலும் நான் சினிமாவை விடவில்லை. சினிமா என்னைக் கைவிடவில்லை. பெற்றோருக்கு தெரியாமல் சினிமாவை கற்றுக் கொண்டேன்.

இருப்பினும், கடலோர காவற்படையில் தேர்வானேன். அதிக நாட்கள் சென்னையில் தான் இருந்தேன். கப்பல்படை, விமானப்படை, தரைப்படை என மூன்று படைத்தளங்களிலும் பணியாற்றிய அதிர்ஷ்டசாலி நான் என்று நினைக்கிறேன்.

ஆபரேஷன் அரபைமா

அதன் பின் ஒரு விபத்தில் சிக்கினேன். நான் அந்த விபத்திலிருந்து மீண்டு வந்ததற்கு காரணமே அப்துல் கலாம் ஐயா-வின் “விங்ஸ் ஆப் பயர்” புத்தகம் தான். அந்த புத்தகத்தை படித்துவிட்டு, நான் அப்துல் கலாம் ஐயாவை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து, அவருக்கு கடிதம் எழுதி அவரை சந்தித்தேன்.

அதன் பின், அவரின் வாழ்க்கையை ஒரு சுய சரிதை படமாக எனக்கு மட்டுமே அந்த உரிமையை கொடுத்தார். 2014ஆம் ஆண்டு அப்படத்தின் அறிவிப்பை வெளியிட்டேன். அதன் பின் சில காரணங்களால் அப்படம் இன்னும் முழுமையாக எடுக்கப்படவில்லை.

அப்படத்தில் விக்ரம் சாராபாயாக “சீயான்” விக்ரம் சார் தான் நடிக்கிறார். இன்னமும் அந்த படம் உயிருடன் தான் இருக்கிறது.

ஆபரேஷன் அரபைமா

Director Prash speech at Operation Arabaima press meet

மலையாளிகளை தமிழ்நாட்டிற்கு வரவேற்கிறேன்.; பெண்ணுக்கு மது பாடல்.. – முருகன் மந்திரம்

மலையாளிகளை தமிழ்நாட்டிற்கு வரவேற்கிறேன்.; பெண்ணுக்கு மது பாடல்.. – முருகன் மந்திரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆபரேஷன் அரபைமா’ என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் முன்னாள் கப்பல்படை வீரர் பிராஷ்.

இதில் ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம், நேகா சக்ஸேனா, ஷிகாத், பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்த போது பாடலாசிரியர், வசனகர்த்தா முருகன் மந்திரம் பேசியதாவது…

நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அந்த படம் மலையாளப் படம் தான். ஆனால், அந்த படத்தின் தலைப்பு தமிழில் இருக்கிறது. கதை தமிழ் நாட்டின் தான் நடக்கிறது.

இனிமேல் மலையாள மக்கள் முழுப்படத்தையும் கூட தமிழில் எடுத்து அதை மலையாளப் படமாக வெளியிட்டாலும் ஆச்சர்யமில்ல. அந்த வகையில் ஆபரேஷன் அரபைமா படக்குழுவில் உள்ள மலையாள சொந்தங்களை நான் தமிழ்நாட்டின் சார்பாக வரவேற்கிறேன்.

இந்த படத்தின் இயக்குநர் பிராஷ் சார் கடற்படையில் வேலை பார்த்துவிட்டு, அரண் என்ற படத்தில் துணை இயக்குனராக வேலை செய்தார். பின்பு, மிலிட்டரி ஆபரேஷன் பற்றி ஒரு படம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் கொச்சின், சென்னை, திருவனந்தபுரம், அந்தமான், துபாய் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படம் முழுவதும், கடல் வழியாக பெண் கடத்தல், போதை பொருள் கடத்தல் போன்ற விஷயங்களையும் அதிலுள்ள அரசியலையும் பேசும்.

இப்படத்தின் பாடல்கள் எழுத கேரளா சென்றேன். அப்போது என்னுடைய அரசியல் பதிவுகளைப் பார்த்துவிட்டு இந்த படமும் அரசியல் மற்றும் ராணுவ ஆபரேஷன் பற்றி தான் எடுக்கிறோம். ஆகையால், இப்படத்திற்கு நீங்கள் வசனம் எழுத வேண்டும் என்று என்று பிராஷ் சார் அழைத்தார்.

ஆசையொரு ஆசை என்ற தாலாட்டு பாடல் எழுதினேன். சின்னக்குயில் சித்ரா அதைப் பாடி இருக்கிறார்கள். அதன் கூடவே அதுக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு துள்ளல் பாடலையும் எழுதி இருக்கிறேன்.

பாடல் மதுவை பற்றி எழுத வேண்டும் ஆனால், பெண்ணுக்கும் பொருந்த வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. உள்ளேற ஒரு முறை அனுமதி,
பொல்லாத சுகமிது அனுபவி
என்று தொடங்குகிறது அந்தப் பாடல்

ஆபரேஷன் அரபைமா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிநயா அசாத்தியமான திறமை கொண்டவர். உதடு அசைவை வைத்து அதை கவனித்து அப்படியே நடிக்க கூடியவர். அபிநயாவுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்” என்றார்.

இணை தயாரிப்பாளர் ஜெயின் ஜார்ஜ் பேசும்போது,

போதை பொருள் கும்பலிடம் இருந்து இளைஞர்களை எப்படி காப்பாற்றுவது என்பது தான் இப்படத்தின் கதை. இப்போது இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இங்கே நிற்கிறேன். விரைவில் உங்கள் நடிகனாக நிற்கவேண்டும் என்பது என் ஆசை என்றார்.

Welcoming Malayalis to Tamil Nadu – Murugan manthiram at Operation Arabaima event

More Articles
Follows