தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவை உலக சினிமா தரத்திற்கு கொண்டு சென்றவர் டைரக்டர் ராஜமவுலி என்று சொன்னால் அது மிகையல்ல.
ஆர் ஆர் ஆர் என்ற படத்தின் பிரஸ் மீட்டிற்கு அவர் சென்னை வந்த போது ஹாலிவுட் படங்களை இயக்குவது எப்போது? என்று Filmistreet சார்பில் கேள்வி கேட்கப்பட்டது.
நான் ஹாலிவுட் படங்களை இயக்க மாட்டேன். இங்கேயே இந்தியாவில் பல திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் என் படங்களை ஹாலிவுட் லெவலுக்கு கொண்டு செல்வேன்” என அப்போது கூறியிருந்தார்.
விரைவில் மகேஷ் பாபுவை வைத்து பிரம்மாண்டமான படத்தை இயக்க உள்ளார் ராஜமௌலி.
இவரின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையில் உருவாகும் இப்படம் ஆப்ரிக்க காடுகள் பின்னணியில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் முக்கிய கேரக்டரில் பிரபல ஹாலிவுட் நடிகர் கிரிஸ் ஹெம்ஸ்ஒர்த் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இவர் ‛தோர்’ மற்றும் ‛அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட ஹாலிவுட் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.