தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகை ஆலியா பட்.
இவரது நடிப்பில் உருவான கங்குபாய் கத்தியவாடி, பிரம்மாஸ்திரா & RRR ஆகிய 3 படங்களும் கடந்த ஆண்டுகளில் வெளியாகி இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
கடந்த ஆண்டு 2022 பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதல் திருமணம் செய்துக் கொண்டார் ஆலியா.
இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறக்கவே ராஹா என பெயரிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மும்பையின் பந்திரா அருகேயுள்ள பாலி ஹில் பகுதியில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு புதிய வீட்டை வாங்கி இருக்கிறாராம். இந்த வீடு ரூ. 38 கோடி மதிப்புள்ளதாக கூறப்படுகிறது
இந்த அடுக்குமாடி குடியிருப்பை தனது தயாரிப்பு நிறுவனமான எடர்னல் சன்ஷைன் என்கிற நிறுவனத்தின் பெயரில் வாங்கினார் ஆலியா.
மேலும் தனது தங்கை ஷாஹீன் பட்டிற்கு பரிசாக கொடுக்க மும்பை ஜூஹூ பகுதியில் ரூ 8 கோடி மதிப்பில் 2 அப்பார்ட்மெண்ட்களையும் விலைக்கு வாங்கி உள்ளாராம் ஆலியா.
alia bhatt buys a premium apartment worth rupees 38 crores in mumbai