ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திற்கு இதுதான் தலைப்பா.?

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திற்கு இதுதான் தலைப்பா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் நேரடி தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இதில் நாயகனாக ராம்சரண் நடித்து வருகிறார்.

ஷங்கர் இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்.; ஹீரோ யார் தெரியுமா?

ராஜமௌலி இயக்கிய RRR படத்தில் 2 நாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார் ராம்சரண்.

தற்போது ஷங்கர் இயக்கும் இந்த RC15 படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

கியாரா அத்வானி கலக்கல் புகைபடங்கள்
இந்த படத்தில் ராம்சரண் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஷங்கர் இயக்கும் இந்த படத்திற்கு அதிகாரி என டைட்டில் வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

Is this the title of the film directed by Shankar and starring Ramcharan?

‘யோசிச்சு யோசிச்சு..’ செம ஹிட்டானது.; ‘அந்தகன்’ பாட்டில் அசத்தும் பிரசாந்த்

‘யோசிச்சு யோசிச்சு..’ செம ஹிட்டானது.; ‘அந்தகன்’ பாட்டில் அசத்தும் பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் பாலிவுட்டில் ‘அந்தாதூன்’ திரைப்படம் வெளியானது.

சூப்பர் டூப்பர் ஹிட்டான அந்தாதூன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ‘அந்தகன்’.

தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அந்தகன்’.

‘அந்தகன்’ வந்ததும் பிரசாந்துக்கு டும் டும் டும்..; பெண் பார்த்து வைத்துள்ள தியாகராஜன்

இந்த படத்தை பிரசாந்த் தந்தை தியாகராஜன் தயாரித்துள்ளார்.

இதில் பிரசாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா உள்ளிட்டோர் நடிக்க முக்கிய கேரக்டரில் நவரச நாயகன் கார்த்திக் நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

தற்போது படத்தின் டப்பிங் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமையை கலைப்புலி தாணுவின் V கிரியேஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

விரைவில் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

ஆன்டி ஹீரோவாக பிரசாந்த் நடிக்கனும்.. அப்போதான் அது நடக்கும்.. – ஆர்கே. செல்வமணி

இப்படத்தில் இடம்பெற்ற ‘என் காதலே’ என்ற பாடல் சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலான “யோசிச்சு யோசிச்சு” பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

இதையடுத்து தற்போது இந்த பாடல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த பாடலை ஹரிச்சரன் மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகிய இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

யோசிச்சு யோசிச்சு பாடல் தற்போது வைரலாகி வருகிறது..

The feet-tapping #YosichiYosichi from #Andhagan is OUT NOW

மீண்டும் கமல்.. மீண்டும் விஜய்.. மீண்டும் சூர்யா.; லோகேஷ் கனகராஜ் பக்கா ப்ளான்

மீண்டும் கமல்.. மீண்டும் விஜய்.. மீண்டும் சூர்யா.; லோகேஷ் கனகராஜ் பக்கா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் வெற்றிப் படங்களை கொடுத்தவர் டைரக்டர் லோகேஷ் கனகராஜ்.

தற்போது கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அது படத்திற்கு திருப்புமுனையாக அமையும் என கூறப்படுகிறது.

நீ என்ன வேணாலும் செய்..; லோகேஷுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்

விரைவில் மீண்டும் கமல் படத்தை இயக்குவேன் என அண்மையில் தெரிவித்தார் லோகேஷ்.

இத்துடன் விரைவில் விஜய்யின் 67 வது படத்தை இயக்கப் போகிறார் லோகேஷ் கனகராஜ்.

‘தளபதி 67’ படம் இயக்குவது குறித்து அப்டேட் கொடுத்த லோகேஷ்

இதனிடையில் கைதி படத்திற்கு முன்பே சூர்யாவை வைத்து ‘இரும்புக்கை மாயாவி’ படத்தை இயக்கவிருந்தார் லோகேஷ்.

ஆனால் அப்போது அந்த படத்தை இயக்க முழு தைரியம் இல்லாததால் அப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் தெரிவித்தாராம்.

சில படங்களை இயக்கி விட்ட பிறகு சூர்யா நடிக்க இருந்த ‘இரும்புக்கை மாயாவி’ படத்தை இயக்குவேன் என தெரிவித்தாராம் லோகேஷ்.

விஜய்- சேதுபதி – கமலை அடுத்து சூர்யாவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்

எனவே லோகேஷின் அடுத்த பட இயக்க வரிசை லிஸ்ட்டில் மீண்டும் கமல்ஹாசன்… மீண்டும் விஜய்.. மீண்டும் சூர்யா ஆகியோரை நிச்சயமாக எதிர்ப்பார்க்கலாம்.

Kamal , Vijay, Suriya again to team up with Lokesh Kanagaraj

கத்துக்கிட்ட மொத்த வித்தையை..; ரஜினி கமலை இயக்க அல்போன்ஸ் புத்திரன் திட்டம்

கத்துக்கிட்ட மொத்த வித்தையை..; ரஜினி கமலை இயக்க அல்போன்ஸ் புத்திரன் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நேரம்’ & ‘பிரேமம்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன்.

தமிழ் & மலையாளம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இந்த இரு படங்களிலும் நிவின் பாலி நாயகனாக நடித்திருந்தார்.

தற்போது பிருத்விராஜ் , நயன்தாரா இணைந்து நடிக்கும் கோல்ட் படத்தை இயக்கியுள்ளார் அல்போன்ஸ்.

சிம்புவை இயக்கும் ‘பிரேமம்’ அல்போன்ஸ் புத்திரன்

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாக இருப்பவர்.

இந்த நிலையில் தன் ரசிகர் ஒருவர் கேட்ட ரஜினி & கமல் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அவரின் பதிவில்…

ரஜினி கமல் இருவரை நான் சந்தித்தால் நிச்சயமாக நான் சொல்லும் கதையில் அவர்களை ஈர்ப்பேன்.

கமலுக்கு முதல்வர் பதவி கொடுத்து பாருங்க… – அல்போன்ஸ் புத்திரன்

ஆனால் அவர்களை சந்திக்கும் அதிர்ஷ்டத்தை நான் இதுவரை பெறவில்லை.

என் கதையை அவர்கள் விரும்பினால் நிச்சயம் நான் கத்துக்கிட்ட வித்தைகளை வைத்து அந்த படத்தை இயக்குவேன்.”

இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் பதிவிட்டுள்ளார்.

Director Alphonse Puthren replied, “If I meet Rajini or Kamal sir in person, there are possibilities that both of them might be interested in the scripts I have for them. I believe that luck doesn’t have my name in its dictionary. So, I have never met them till now in my life. In future if luck favours and I meet them, and if they like my scripts. I will use all my multiple skills and do good entertaining films with each of them and then with both of them.”

Alphonse Puthiran to direct Rajinikanth and Kamal Haasan

பாலா இயக்கும் ‘சூர்யா 41’ பட சூட்டிங்.; சூடான அப்டேட் கொடுத்த சூர்யா

பாலா இயக்கும் ‘சூர்யா 41’ பட சூட்டிங்.; சூடான அப்டேட் கொடுத்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா 41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யா தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாலாவும், தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகருமான சூர்யா கூட்டணியில் உருவான “நந்தா, பிதாமகன்” என இரு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை குவித்ததுடன், உலக அளவில் பெரும் பாரட்டுக்களை பெற்றது.

19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் உற்சாகம் கொள்ள வைத்ததுடன், படம் மீது பெரும் ஆவலை தூண்டியது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பரபரப்பாக நடந்து வந்த நிலையில், இப்படம் நிறுத்தப்படுவதாக படம் குறித்து சில தவறான தகவல்கள் இணையத்தில் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் வதந்திகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக நடிகர் சூர்யா இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தன் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் துவங்கப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, சிறு இடைவேளைக்கு பிறகு, விரைவில் துவங்குமென படக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை கண்டிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் சூர்யா நடிக்க, ஜோடியாக டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதா.

இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியெம் மேற்கொள்ள இசையமைக்கிறார் ஜி. வி. பிரகாஷ். கலை இயக்குநர் மாயப்பாண்டி.

எடிட்டர் சதீஷ் சூர்யா. இந்தப் படத்தை 2டி என்டர்டயின்மண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரிக்க ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன் இணைந்து தயாரிக்கிறார்.

Surya gave a warm update on Surya 41

தீவிர சிகிச்சை பிரிவில் காமெடி நடிகர் போண்டா மணி அனுமதி

தீவிர சிகிச்சை பிரிவில் காமெடி நடிகர் போண்டா மணி அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீலங்காவை (இலங்கை) பூர்வீகமாக கொண்டவர் நடிகர் போண்டா மணி.

இவர் 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

இவரை பாக்யராஜ் தான் அறிமுகப்படுத்தினார்.

யோகி பாபுவை அடுத்து போண்டா மணியும் ஹீரோவாகிறார்

வடிவேலுடன் இவர் நடித்த *அடிச்சு கூட கேட்பாங்க… சொல்லிடாதீங்க.. டேய் எதைடா சொல்ல கூடாது* என்ற காமெடி படு பிரபலம்.

தனுஷின் ‘படிக்காதவன்’ படத்தில் விவேக் உடன் இணைந்து காமெடி செய்திருப்பார்.

மேலும் ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இதயக் கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடிவேல் சந்தானம் யோகிபாபு சதீஷ் சூரி வரிசையில் ஹீரோவானார் ‘போண்டா’ மணி

அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Nadigar Sangam Vice President #PoochiMurugan spoke with the doctors and asked about the health status of Actor #BondaMani.

The Doctors have informed that #BondaMani is now feeling better and further treatment’s will be given… l #filmistreet

Comedian Bonda Mani admitted to intensive care unit

More Articles
Follows