தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது அண்மையில் வழங்கப்பட்டது்
இதனையடுத்து படக்குழுவினருக்கு இந்தியா முழுவதும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதனையடுத்து ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, அவர் மனைவி வள்ளி, இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, அவர் மனைவி ரமா, பாடலாசிரியர் சந்திரபோஸ், பாடகர் காலபைரவா உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று காலை ஹைதராபாத் திரும்பினர்.
ஹைதராபாத் விமான நிலையத்தில் அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது அங்கே திரண்டு வந்த ரசிகர்களிடம் ‘ஜெய்ஹிந்த்’ என கூறிவிட்டுப் சென்றார் இயக்குநர் ராஜமௌலி.
இந்த நிலையில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் நாயகன் நடிகர் ராம் சரண், தனது தந்தையும் நடிகருமான சிரஞ்சிவியுடன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்
இது குறித்து சிரஞ்சீவி தன் ட்விட்டர் பக்கத்தில்… “ராம் சரணை வாழ்த்தி ஆசீர்வதித்ததற்காக நன்றி அமித் ஷா ஜி. ஆஸ்கர் விருது வென்று வந்துள்ள ஆர்ஆர்ஆர் படக்குழு சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி.
Ram Charan got blessings from Amit shah