தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களில் லைகா புரொடக்ஷன்ஸ் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
பல பிளாக்பஸ்டர்களையும் அதிக பட்ஜெட் படங்களையும் தயாரித்துள்ளனர், இதில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வனும் அடங்கும்.
இப்போது , லைகா புரொடக்ஷன்ஸ், கன்னட நடிகர் சுதீப் உடன் இணைய முன் வந்துள்ளது .
ராஜமௌலி இயக்கிய நான் ஈ படத்தில் நடிகர் சுதீப் மிரட்டல் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2 வருடங்களுக்கு முன்பு லைகா நிறுவனம் சுதீப்பை அணுகியபோது கால் ஷீட் பிரச்சனை காரணமாக அவரால் நடிக்க இயலவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.