தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆஸ்கர் விருது வென்ற RRR படத்தில் வில்லனாக நடித்த பிரிட்டிஷ் நடிகர் ரே ஸ்டீவன்சன் காலமானார். அவருக்கு வயது 58.
இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் 2021-ம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய RRR படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தவர் நடிகர் ரே ஸ்டீவன்சன்.
அப்படத்தில் சர் ஸ்காட் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரே ஸ்டீவன்சன், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சர்வாதிகாரிகள் எப்படி இருந்தார்கள் என்பதை நடிப்பால் கண்முன் கொண்டுவந்திருந்தார்.
தலை சிறந்த நடிகரான இவர் RRR தவிர, மார்வெல் தொடரான தோர் படத்திலும் நடித்துள்ளார்.
RRR fame actor Ray Stevenson passed away