மீண்டும் ‘ரெமோ’ இயக்குனருடன் சிவகார்த்திகேயன்

மீண்டும் ‘ரெமோ’ இயக்குனருடன் சிவகார்த்திகேயன்

Remo director Bhagyaraj Kannan Sivakarthikeyanபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

எனவே இதுபோன்று காமெடியுடன் கூடிய தனக்கு பேர் வாங்கித் தரும் கேரக்டர்களை தேர்ந்தெடுக்க உள்ளாராம்.

ரெமோ படத்தை தொடர்ந்து, மோகன்ராஜா இயக்கும் ஒரு படத்திலும், பொன்ராம் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்த இரண்டு படங்களையும் ரெமோவை தயாரித்த, 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து, மீண்டும் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறாராம்.

‘தல பெயரை பயன்படுத்த மாட்டேன்…’ அஜித் ரசிகர்களிடம் சிக்கிய சிம்பு

‘தல பெயரை பயன்படுத்த மாட்டேன்…’ அஜித் ரசிகர்களிடம் சிக்கிய சிம்பு

ajith simbuதமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களே எதையும் வெளிப்படையாக பேசுவார்கள்.

இதனால் சிலர் பொது இடங்களில் பேசுவதையே நிறுத்திவிட்டனர். ஆனால் சிம்பு இன்றுவரை தைரியமாக பேசி வருகிறார்.

இந்நிலையில் இன்று பேஸ்புக் பக்கத்தில் தன் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் சிம்பு.

அப்போது இனி வரும் படங்களில் அஜித் பெயரை பயன்படுத்தும் காட்சி ஏதாவது உள்ளதா? என்று ஒரு ரசிகர் கேட்டார்.

இனி அவர் பெயரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பது போல கூறியிருந்தார்.

சிம்பு அளித்த இந்த பதில் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இதுகுறித்து சிம்பு ஒரு வீடியோ பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.

“என்னுடைய ‘மன்மதன், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல படங்களில் அஜித் பெயரை பயன்படுத்தி இருப்பேன்.

அப்போது என்னை யாருமே கேள்விக் கேட்கவில்லை.

இப்போது அஜித் சார் பெரிய இடத்துக்குச் சென்றவுடன், நீங்கள் ஏன் அவருடைய பெயரை உபயோக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

நான் சொன்னதை தவறாக புரிந்துக் கொண்டீர்கள்.

அவரை ‘தல’ என்று தூக்கி வைத்துக் கொண்டாடாத காலக் கட்டத்திலேயே அவருடைய பெயரை முதலில் நான் சொல்ல வேண்டும் என நினைத்துச் சொன்னவன் நான்.

நான் ரஜினி சாருடைய தீவிர ரசிகன். என்னுடைய தலைமுறையில் அடுத்து அஜித் சாரை ரொம்ப பிடிக்கும்.

அஜித் சாரை தூக்கிவிட நான் யார்? அவருடைய கடின உழைப்பு தான் அவரை இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறது.

அது எனக்கு முன்பே தெரிந்திருந்ததால் மட்டுமே, முன்பே எனது படங்களில் அவருடைய கட்-அவுட்டை வைத்து கத்தினேன்.

அவருடைய பெயரை வைத்து நான் இன்று பெரிய ஆளாக நினைப்பதாக சொல்வது காமெடியாக இருக்கிறது.

இன்று பலரும் அவருடைய பெயரை உபயோகிக்கும் அளவுக்கு அவர் வளர்ந்துவிட்டார்.

அதனால் நான் அவருடைய பெயரை உபயோகிக்க மாட்டேன் என்று சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள்.

ஏன் அஜித் சார் பெயரை உபயோக்கிறீர்கள் என்று கேட்ட போது கூட “சார்.. எனக்கு பிடித்த விஷயத்தை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன்.

கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்பது போன்று இருக்கிறது” என்று பதிலளித்தேன்.

3 வருடங்களாக எனக்கு படங்கள் வரவில்லை. அனைத்து நாயகர்களை விட கீழே கேவலமான நாயகனாகவே இருந்துவிட்டுப் போகிறேன்.

படங்கள் வராத போது என்னுடன் நின்று என்னை தூக்கிவிட்டவர்கள் என்னுடைய ரசிகர்கள். அதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும். யாருடைய உறுதுணையும் எதிர்பார்த்து நான் திரையுலகுக்கு வரவில்லை.

மற்ற நாயகர்களோடு ஒப்பிடும் போது நான் அந்த இடத்தில் இல்லையென்றால் கூட எனக்கு கவலையில்லை.

மேலே இருக்கும் போது கீழே விழுந்துவிடக்கூடாதே என்று பயப்பட வேண்டும். கீழே இருக்கும் போது வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை”

இவ்வாறு அந்த பதிவில் சிம்பு பேசியுள்ளார்.

Don’t try to spoil my releationship with #Thala ur wasting ur time . #RealThalaFans will never let me down and I will never let him down .

— STR (@iam_str) October 9, 2016

ரஜினி-விஜய்க்கு அடுத்த இடத்தில் வந்த சிவகார்த்திகேயன்

ரஜினி-விஜய்க்கு அடுத்த இடத்தில் வந்த சிவகார்த்திகேயன்

remo sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படம் பலத்த எதிர்பார்ப்புடன் வெள்ளிக்கிழமை வெளியானது.

உலகம் முழுவதும் கிட்டதட்ட 1,000 திரையரங்குகளில் வெளியானது.

சென்னையில் உள்ளிட்ட சில நகரங்களில் ரஜினி, அஜித், விஜய் படம் போல் அதிகாலை 5 மணிக்கே காட்சிகள் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருட்டு டிவிடியில் இப்படம் வெளியாவதை தடுக்க வெளிநாடுகளில் பிரீமியர் ஷோக்கள் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் இப்படம் உலகளவில் ரூ 8 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இதன் மூலம் இந்த வருடத்திலேயே கபாலி, தெறிக்கு பிறகு முதல் நாள் வசூலில் ரெமோ அடுத்த இடத்தை பிடித்துள்ளது.

கபாலி ரூ. 22 கோடியையும், தெறி ரூ. 13 கோடியையும் வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

விக்ரமின் இருமுகன் முதல் நாளில் ரூ 5.5 கோடியும், சூர்யாவின் 24 படம் ரூ 5 கோடி வசூல் செய்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ரஜினிக்கு உதவியவருக்கு கிடைத்த பாலிவுட் சான்ஸ்

ரஜினிக்கு உதவியவருக்கு கிடைத்த பாலிவுட் சான்ஸ்

kabali viswanathசினிமாவில் நடிக்கும் பலருக்கும் ரஜினிகாந்துடன் நடிப்பது ஒரு மிகப்பெரிய கனவாக இருக்கும்.

இப்படியான பலரின் கனவை ‘கபாலி’ படத்தின் மூலம் நிறைவேற்றினார் இயக்குனர் ரஞ்சித்.

தன்னுடைய முதல் இரண்டு படங்களில் பணிபுரிந்த பலருக்கும் கபாலியில் வாய்ப்பு கொடுத்தார்.

இதில் கபாலி படத்தில் ஒரு காட்சியில் சென்னைக்கு ரஜினி வரும்போது, அவருக்கு விஸ்வநாத் என்பவர் உதவி செய்வார்.

தற்போது இவர் முதன்முறையாக பாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

இப்படத்தை ‘காக்கா முட்டை’ மணிகண்டன் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக இருந்த சாஜோஸ் என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தில் தமிழ் பேசும் ஐடி ஊழியராக நடிக்கிறார் விஸ்வந்த்.

இதன் பெரும்பாலான காட்சிகள் வட இந்தியாவில் படமாக்கப்பட உள்ளது.

ஜேம்ஸ்பாண்ட் பட நடிகருடன் இணைந்த யுவன்ஷங்கர் ராஜா

ஜேம்ஸ்பாண்ட் பட நடிகருடன் இணைந்த யுவன்ஷங்கர் ராஜா

yuvan shankar rajaபல ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமான பியர்ஸ் பிராஸ்னன்.

இவர் அண்மையில் ‘பான் பஹார்’ என்ற விளம்பர படத்தில் நடித்துள்ளார்.

இந்த விளம்பர படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்த விளம்பரமானது 60 நொடிகள் ஓடக்கூடியது.

இதில் ‘கியூபா’ நாட்டின் பிரசித்தி பெற்ற ‘மாம்போ’ தாளங்களை உபயோகப்படுத்தி ரசிகர்களுக்கு ஒரு ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட உணர்வை கொடுத்துள்ளார்.

தனுஷை தொடர்ந்து விஷாலுடன் இணையும் கமல் மகள்

தனுஷை தொடர்ந்து விஷாலுடன் இணையும் கமல் மகள்

Vishal Akshara Haasanகமலின் இரு மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசன் ஆகிய இருவரும் சினிமா துறையில் பணியாற்றி வருகின்றனர்.

இதில் ஸ்ருதிஹாசன் அவர்கள் அஜித், சூர்யா, விஷால் தனுஷ் ஆகியோருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

அக்ஷராஹாசன் இதுவரை தமிழ் படத்தில் நடிக்கவில்லை.

ஆனால் அமிதாப் பச்சன், தனுஷ் உள்ளிட்டோர் நடித்த ஷமிதாப் என்ற இந்திப் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது முதன்முறையாக நேரடி தமிழ் படத்தில் நடிக்கிறார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தில்தான் நடிக்கவிருக்கிறார்.

இவர்களுடன் ராகுல் ப்ரீத் சிங், பிரசன்னா, வினய், இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

அரோல் குரலி இசையமைக்க, விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது.

இதனிடையில், புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows