தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேச அறிவிப்பை தொடர்ந்து வெளியாக உள்ள படம் ‘காலா’.
எனவே அவரது ரசிகர்கள் அனைவரும் காலாவுக்காக காத்திருக்கத் தொடங்கிவிட்டனர்.
இப்படம் ஜூன் 7ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அடுத்த பாடல்களுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழா மே 9ம் தேதி நடக்கும் என தயாரிப்பாளர் தனுஷ் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் மற்ற படங்களை போலவே இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லைகா நிறுவனம் இதன் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது. டிவி சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது.
Rajinikanths Kaala movie audio launch on 9th May 2018